ரிமோட் ரீட்டா
##~## |
ஒரு கலெக்ஷன்
ஒண்ணு இல்ல... ஓராயிரம்!
ஜெயா டி.வி. 'அவள் அப்படித்தான்’ சீரியல்ல ஃபர்ஸ்ட் ஹாஃப்ல மாடர்னாவும்... செகண்ட் ஹாஃப்ல ஹோம்லியாவும் அசத்திட்டிருக்காங்க, கோயம்புத்தூர் பொண்ணு மங்கள். அவருக்கு, டிரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம்னு கேள்விப்பட்டேன். கூடவே, டான்ஸுனா உசுராம். மாடலிங், விளம்பரம், சீரியல் எல்லாம் கடந்து, இப்போ 'வணக்கம் சென்னை’, 'கோச்சடையான்’னு சினிமாலயும் கலக்குது பொண்ணு. ஷூட்டிங் பிரேக் டைமை தெரிஞ்சு... மங்கள் முன்ன ஆஜரானேன்.
''டிரெஸ்ஸிங் சென்ஸ் மட்டுமில்ல ரீட்டா... டிரெஸ்ஸஸும் ரொம்ப அதிகமாத்தான் இருக்கு''னு சொன்ன மங்கள்,
''அது ஏன்னே தெரியல... புதுசா எங்கயாச்சும் போறதா இருந்தா, உடனே புது டிரெஸ் வேணும். இப்படி எடுத்து எடுத்தே எனக்கு நெறைய டிரெஸ் சேந்துடுச்சு. எங்கம்மா எப்ப பாத்தாலும் 'பொம்பள பொண்ணு எதுக்கு இப்படி டிரெஸ்ஸா சேத்துட்டிருக்க. அதுக்கு பதிலா நகையை வாங்கினாகூட ஃபியூச்சர்ல யூஸ் ஆகும்’னு புலம்பிட்டே இருப்பாங்க.
எனக்கு வெஸ்டர்ன் டிரெஸ்தான் ரொம்ப பிடிக்கும். கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேல வெஸ்டர்ன் டிரெஸ் வெச்சுருக்கேன். அதைத் தவிர, முன்னூறு டிரெடிஷனல் டிரெஸ் வெச்சுருக்கேன். தினமும் என்னோட டிரெஸ் பத்தி மினிமம் ஒரு அஞ்சு பேராச்சும் கமென்ட் பண்ணிடுவாங்க. எனக்கு பிங்க், ப்ளூ, பிளாக், ரெட் கலர்ஸ்லாம் ரொம்பப் பிடிக்கும். ஒரே ஜீனுக்கு மேட்சா நாலஞ்சு டி-ஷர்ட்டை மாத்தி மாத்தி போட்டுக்க முடியும். அதனாலதான் மாடர்ன் டிரெஸ் ரொம்ப பிடிக்கும்'' மூச்சுவிடாமல் பேசியவரிடம்,

''உன்னைக் கல்யாணம் பண்ண போறவனை நெனச்சாதான் ஒரே கவலையா இருக்கு'' என்றேன்.
''கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாரையும் மாதிரி நானும் டிரெடிஷனலா மாறுறதுக்கு எனக்கு 'ஓகே’தான். ஆனா, அட்லீஸ்ட் வாரத்துக்கு ரெண்டு நாளாச்சும் மாடர்ன் டிரெஸ் போட அனுமதிக்கணும். இது ஒண்ணுதான் என் கண்டிஷன்னு அம்மாகிட்ட சொல்லிருக்கேன்'' என்றார், வெட்கத்துடன்.
'பாவம், யார் பெத்த புள்ளை சிக்கப் போறானோ!’
ஒரு பேட்டி
டரியலாக்கிய 'டை ஹார்ட் ஃபேன்’!
குரலை மாத்தி மாத்தி பேசறதுல மட்டும் இல்லீங்க... பாக்கறதுக்கும் 'விஜய் பாதி, அஜித் பாதி கலந்து செய்த கலவை’யாத்தான் இருக்காரு, சன் டி.வி 'சூரிய வணக்கம்’ நிகழ்ச்சியில கலக்கற விக்னேஷ் கார்த்திக்.
''என்ன சார், எப்படி மீடியா பக்கம்?’'
''அதிருக்கட்டும்... வழக்கமா பொண்ணுங்களைத்தானே பேட்டி எடுப்பே? இந்த பக்கம் காத்தடிக்குது... முதல்ல இதுக்கு பதில் சொல்லு?''
''உங்க டீடெய்ல்ஸ் கேட்டு, காலேஜ் பொண்ணுங்க சிலர் எனக்கு கால் பண்ணிட்டே இருக்காங்க... அதான்!''

''ரொம்ப ரீல் சுத்தாதம்மா... அந்துடப் போகுது. என்னோட டீடெய்ல் வேணும்னா வாங்கிக்கோ... புருடா விடாதே! நான், பக்கா சென்னைப் பையன். கே.கே. நகர்தான் என்னோட ஏரியா. அப்பா, அம்மாவுக்கு ஒரே பையன். படிச்சது இன்ஜினீயரிங். காலேஜ்ல ஜாலிக்காக லெக்சரர்ஸ் மாதிரி மிமிக்ரி பண்ணுவேன். என் ஃப்ரெண்ட் கவிராஜ் ரொம்ப என்கரேஜ் பண்ணதால சீரியஸா பண்ண ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல, சின்ன ஆக்ஸிடென்ட் ஆகி, அதுலயும் சீரியஸாகி, ரெண்டு மாசம் பெட் ரெஸ்ட். அப்பதான் விஜய், அஜித் சினிமாக்களை டி.வி-யில பாத்து, மிமிக்ரி பிராக்டீஸ் பண்ணினேன். என் கதை போதுமா?''
''இன்னும்... இன்னும்...''
''விடமாட்டீயே... அப்புறம் இசையருவி சேனல்ல 'என்னோடு பேசுங்கள்’ மிமிக்ரி புரோகிராமுக்கு தினமும் கால் பண்ணி நான் மிமிக்ரி பண்ணுவேன். என்னை மாதிரியே அஸார்னு ஒருத்தரும் பண்ணுவார். ஒரு கட்டத்துல அவரும் நானும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். அவர்தான் எனக்கு மிமிக்ரி குரு. 'அது, இது, எது’வோட டைரக்டர் தாமஸ் சார்கிட்ட அறிமுகப்படுத்தினார். இம்ப்ரஸ் ஆன டைரக்டர், அடுத்த நாளே வாய்ப்புக் கொடுத்தார். முதல் ஷூட்டே அஸா ரோடதான். 'சிங்கப்பூர்’ தீபன் சாரும் என்னோட வெல்விஷர். 'சூரிய வணக்கம்’ டைரக்டர் பரத், என்ன செலக்ட் செஞ்ச விஜயசாரதி இவங்க எல்லாருக்குமே நான் என்னிக்கும் கடமைப்பட்டிருக்கேன்.''
''ரொம்ப புல்லரிக்குதுப்பா... ஆமாம், விஜய் ஸ்டைல்ல பின்றியேப்பா... உனக்கு பொண் ணுங்க ஃபேன்ஸ் ஜாஸ்தினு கேள்விப்பட்டேனே...''
''அதை ஏன் கேக்குறே... ஒரு நாள் ஷூட்ல இருக்கும்போது, ஒரு பொண்ணு கால் பண்ணி, 'நான் உங்க டை ஹார்ட் ஃபேன் சார். ப்ளீஸ் சார்... உங்களை மீட் பண்ண ணும்’னு சொன்னாங்க. 'இப்படி ஒரு ஃபேனா... சரி’னு வரச்சொன்னேன். அந்தப் பொண்ணு அவங்க அம்மாவோட வந்தாங்க. பேசறாங்க, பேச றாங்க, பேசிட்டே இருக்காங்க... லஞ்ச் டைமே வந்து டுச்சு. ஒரு பேச்சுக்கு 'சாப்பிடறீங்களா’னு கேட்டா... 'சரி’னு கிளம்பிட்டாங்க. வேற வழி... ஒரு ஹோட்டல்ல சாப்பிட வெச்சு, அனுப்ப வேண்டியதாயிடுச்சு.
'ஒரு வழியா போயிட்டாய்ங்கடா’னு நினைச்சா, ஒரு எஸ்.எம்.எஸ்... 'ஆக்சுவலி எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுருக்கு, நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். அம்மாகிட்ட கூட சொல்லிட்டேன். அதனாலதான் அவங்களும் உங் களைப் பாக்க வந்தாங்க. அம்மாவுக்கும் உங்களை ரொம்ப புடிச்சுருக்கு. நான் வெயிட் பண்ணிட்டிருக் கேன்’னு! நொந்துட்டேன். ஒரு வழியா சமாளிச்சு அந்தப் பொண்ணை கட் பண்ணினேன்.''
அய்யோடா..!
வாசகிகள் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
தரையில் கேஸ் ஸ்டவ்?
''சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'நாதஸ்வரம்’ சீரியலில்... தோசை செய்து கணவருக்கு கொடுக்கிறார் மலர். அந்தக் காட்சியைப் பார்த்து திடுக்கிட்டேன். கேஸ் ஸ்டவ்வை தரையில் வைத்து, சம்மணமிட்டு உட்கார்ந்து தோசை சுடுகிறார். இப்படி கேஸ் ஸ்டவ்வை தரையில் வைப்பது ஆபத்தான விஷயம். இதைப் பார்த்து யாராவது பின்பற்றினால் என்னாவது? இதையெல்லாம் கவனமாக பார்த்தே காட்சிப்படுத்த வேண்டும்'' என்று வருத்தப்படுகிறார் திருச்சியில் இருந்து எஸ்.விஜயா சீனிவாசன்.
பீட்ஸா, பர்கர் வேண்டாமே!
''சமீபத்தில், பொதிகை தொலைக்காட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்பு, தற்கால குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உணவுப் பழக்கங்கள் மாறியிருப்பது பற்றி பேசினார். வீட்டு உணவைவிட, வெளியே கிடைக்கும் பீட்ஸா, பர்கர், பாஸ்தா மற்றும் விதம்விதமான ஐஸ்கிரீம்களையே அதிகம் உண்பதால், ஜீரணக்கோளாறு, வயிற்று உபாதைகள், சதைபோடுதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பெற்றோரும், விடலைப் பருவத்தினரும் அவசியம் பார்த்து, தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்'' என்று சமூக அக்கறையுடன் சொல்கிறார், ஹைதராபாத்தில் இருந்து மரகதம் ராகவசிம்ஹன்.
இது ஒரு ஊன்றுகோல்!
''சன்’ டி.வி-யில், மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை மேடையேற்றும் 'சாம்பியன்’ என்கிற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. 'இசைக்கவும், பாடவும், ஆடவும் என்று பலப்பல திறமைகளை வளர்த்துக் கொள்ள, வெளிப்புற ஊனங்கள் ஒரு தடையே இல்லை' என்பதை உணர்த்துவதோடு, மனதால் ஊனமாகிப் போயிருக்கும் உள்ளங்களுக்கு உரமேற்றும் ஊன்றுகோலாகவும் அமைந்திருக்கிறது இந்நிகழ்ச்சி'' என்று மனதார பாராட்டுகிறார், அம்பத்தூரிலிருந்து வசுமதி கண்ணன்.