மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

ரிமோட் ரீட்டா

ஒரு பேட்டி 

 அதர்வாவை லவ் பண்ணாத அமலா!

புதுயுகம் சேனலின் 'நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சியை, சும்மா கலகலனு நடத்தும் சங்கீதாவை ஆச்சர்யமா பார்த்தேன்.

''என்ன ரீட்டா... புதுசா பார்க்குற மாதிரி பார்க்குறே..?''

''இல்ல... தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோவுல சங்கீதா... சங்கீதானு ஒரு ஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் இருந்தாங்களே... அவங்க என்ன ஆனாங்கனுதான்.''

''அந்த ஷோவெல்லாம் பார்த்துட்டு எல்லோரும் இயல்புலயே நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு நினைச்சுட்டாங்க. ஒரு போட்டியோட நடுவரா அமரும்போது, எந்த சமரசமும் இல்லாம, நேர்மையான மதிப்பெண்கள் வழங்கறதுக்காக காட்டுற கண்டிப்பு அது. உடனே 'ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் சங்கீதாவுக்கு சிரிக்கக்கூடத் தெரியாது’னு சொல்லிட்டாங்க. இப்ப 'புதுயுகம்’ சேனல்ல 'நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சியில நான் பண்ற ஜாலி கலாட்டாக்களைப் பார்த்துட்டு, உன்னை மாதிரியேதான் எல்லாரும் ஆச்சர்யமா பாக்கறாங்க!''

''அது சரி, இந்த நிகழ்ச்சியில நீங்க எப்படி..?''

''தனிப்பட்ட முறையில் நான் ரொம்ப சிநேகமானவ! நடிகைங்கற பந்தாவெல்லாம் இல்லாம... எல்லார்கிட்டயும் இயல்பா பேசிடுவேன். அதனாலதான் 'நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சி நடத்துற வாய்ப்பு வந்தப்போ, 'இது நமக்கான நிகழ்ச்சி'னு தோணுச்சு. உடனே சம்மதிச்சுட்டேன்!''

கேபிள் கலாட்டா!

''நிகழ்ச்சியில என்ன ஸ்பெஷல்?''

''திரையில் பார்க்கும் நடிகர், நடிகைகளோட கலகலப்பான இன்னொரு பக்கத்தை காட்டுறதுதான் இந்த நிகழ்ச்சி. ரொம்ப ஜாலியான ஷோ. ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ... இயல்பில் ரொம்பக் குழந்தைத்தனமா இருக்கறது; ஹோம்லி நடிகை... உண்மையில் 'க்யூட் ரவுடி’யா இருக்கறதுனு ஒவ்வொருத்தரோட மறுபக்கத்தையும் பார்க்கறது... சுவாரஸ்யமானதுதானே..?! சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பத்தின 'கிசுகிசு’வை... அவங்க கிட்டயே நேரடியா கேட்குறதும், நிகழ்ச்சி யோட ஹைலைட். ஒரு தடவை இந்த நிகழ்ச்சிக்கு அதர்வா வந்திருந்தார். 'உங்களுக்கும் அமலா பாலுக்கும் ஒரே லவ்வாமே..?’னு கேட்டதும்... சட்டுனு அமலா பாலுக்கு போன் போட்டுட்டாரு (பேசறதுக்கு ஒரு காரணம் வேணாமா? ஹி... ஹி..!) 'அமலா... உனக்கும் எனக்கும் லவ்வுனு பேச்சு போகுதே... நீ என்ன சொல்றே?’னு கேட்க, எனக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான்...''

''ம்ம்ம்... அப்புறம்...?''

''இந்த அமலா பொண்ணு, 'உன்னைப் போய் யாரு லவ் பண்ணுவா?’னு கெக்கெபிக்கேனு சிரிக்க... அதர்வாவும் சேர்ந்து சிரிக்கறாரு. இன்னொரு ஷோல விக்ரம்பிரபுகிட்ட, யாருக் காச்சும் போன் பண்ணி ஏமாத்தச் சொன்னேன். 'எதிர்நீச்சல்’ சதீஷ§க்கு போன் போட்டு, 'டேய்... வண்டிய எக்குத்தப்பா விட்டுட்டேன், ஒரு லேடி போலீஸ் என்னைப் புடிச்சு வெச்சுருக் காங்க. நீ எனக்காக அவங்ககிட்ட பேசு...’னு சொல்லி என்கிட்ட மொபைலைக் கொடுத்தாரு. சதீஷ் என்கிட்ட, 'மேடம்... அவரு சிவாஜி சாரோட பேரன், பிரபு சாரோட பையன். 'கும்கி’ படம் பாத்திருக்கீங்களா..? அதுல அவர் தான் ஹீரோ!’னு பிரயத்தனப்பட்டு விளக்க, ஒரே காமெடிதான்!

போன சண்டே விஷாலோட ஷோ. அவர்கிட்ட 'சினேகா, த்ரிஷா, நயன்தாரா...’ன்னு கேட்டு முடிக்கறதுக்குள்ள 'தே ஆர் ஆல் மை கஸின் சிஸ்டர்ஸ்’னு டபால்னு பல்யடிச்சுட் டாரு. ஷோ செம்மயா போச்சு!

நானும் சினிமா ஆளுங்கறதால பெரும் பாலும் பல ஸ்டார்களைப் பத்தி எனக்குத் தெரிஞ்சுருக்கறதை எந்தத் தயக்கமும் இல்லாம தைரியமா கேள்வி கேட்க முடியுது. அதேசமயம் எனக்கு தெரியாதவங்களா வந்தா... அவங்கள பத்தின விஷயங்கள தெரிஞ்சுக்கறதுல எனக்கும் சுவாரஸ்யம்தானே!''

கலக்குங்க கலக்குங்க..!

ஒரு டேலன்ட்!

ஆத்தாடி... இவங்க குயில் சாதி!

அது என்ன மாயமோ புரியல, செலிப்ரிட்டி களைப் பேட்டி எடுக்கணும்னா... எல்லா சேனல்களிலும் 'கூப்பிடுங்கப்பா ஷர்மிளா வை!’ங்கிற அளவுக்கு மேடம் பிரபலம்.

''அது என்ன ரகசியம்னு''னு அந்தப் பொண்ணுகிட்டயே கேட்டேன்.

கேபிள் கலாட்டா!

''இதுல என்ன ரகசியம் இருக்கும்னு எனக்கே தெரியல. ஆனா, உனக்குத் தெரியாத ஒரு ரகசியம் சொல்லட்டுமா. நான் ஒரு பின்னணிப் பாடகி. தமிழ் மற்றும் தெலுங்கு 'துப்பாக்கி’ படத்துல 'அலேய்கா... அலேய்கா...’ பாட்டு, தமிழ் மற்றும் தெலுங்கு 'சிங்கம்’ல, 'சிங்கம் டான்ஸ்’ பாட்டுனு ரெண்டு மொழிகள்லேயும் மாத்தி மாத்தி பாடிட்டு இருக்கேன். இன்னொரு விஷயம் சொல்லவா... 'வெடி’ படத்துல வரும் 'காதலிக்கும் பெண் ஒருத்தி’ டிராக் நானே எழுதி பாடினது! லிஸ்ட் போதுமா, இன்னும் கொஞ்சம் சொல்லவா ரீட்டா..?''னு அம்மணி கேட்க,

''ஆத்தாடி, நீங்க குயில் சாதியோ.. இதையெல்லாம் எங்க பிடிச்சீங்க?''னு கேட்டேன்.

''பத்து வருஷமா கர்னாடக சங்கீதம் கத்துட்டிருக்கேன். எலெக்ட்ரானிக் இன்ஜீனியரிங் படிச்சுருந்தாலும்... இசையில் இருக்கும் ஆர்வத்தால லண்டன் மியூஸிக் காலேஜ்ல வெஸ்டர்ன் அண்ட் கிளாஸிகல் மியூஸிக்னு ரெண்டுமே கத்துக்கிட்டேன். எஸ்.எஸ் மியூஸிக்ல 'வாய்ஸ் ஹன்ட்’ செகண்ட் சீஸன்ல கலந்துகிட்டு ஜெயிச்சேன். அதுதான் பின்னணிப் பாடகியாகுறதுக் கான விசிட்டிங் கார்டு. அப்புறம் ஜெயா டி.வி-யில சுஹாசினி மேடத்தோட ஒரு ஷோ. பாட்டு ரெக்கார்டிங் இல்லாத சமயத்துல, பாக்கெட் மணிக்காக ஜாலியா சேனல்களில் ரவுண்ட்னு போயிட்டிருக்கு காலம்''னு பெருமையோட சொன்னாங்க ஷர்மிளா.

''பாடகி, கவிஞர், நிகழ்ச்சி தொகுப்பாளினி, டான்ஸர்... அடுத்தது சினிமாவா..?!''னு வழக்கமான இந்தக் கேள்வியைக் கேட்காம விட்டா எப்படி?

''நிறைய ஆஃபர் வந்துச்சு. ஆனா, வேண்டாம்னு விட்டாச்சு. என் தம்பி விஸ்காம் பண்றான். அவன் சின்ன வயசுல இருந்தே நிறைய விளம்பரங்களில் நடிச் சுருக்கான். அடுத்த முயற்சி அவனுக்கு சினிமாதான். வீட்டுக்கு ஒருத்தர் சினிமால இருந்தா போதும்னு அப்பா சொல்லிட்டதால, நான் ஆர்வம் காட்டல!''னு குரல்ல வருத்தத்தைக் கூட்டிக்கிட்டு சொன்னாங்க ஷர்மிளா!

அப்பா பொண்ணு!

கேபிள் கலாட்டா!

இது புதுசு!

'சர்ர்ர்’ருனு ஒரு நிகழ்ச்சி!

யு.எஃப்.எக்ஸ் சேனல்ல 'ரோட் ஸ்டார்’னு வித்தியா சமா, தகவல்பூர்வமா ஒரு நிகழ்ச்சி பண்றாங்க. ஆட்டோ மொபைல் துறையைச் சார்ந்த நிகழ்ச்சிகள், ஆய்வுகள், அது மட்டுமில்லாம மார்க்கெட்டுக்கு வரும் புது மாடல் வண்டிகளோட டெமொ, டீடெய்ல்னு நிகழ்ச்சி சும்மா 'சர்ர்ர்’ருனு போகுது. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8.30 - 8.45-க்கு ஒளிபரப்பாகுது.

ரெடி ஸ்டார்ட்!

 வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  

கேபிள் கலாட்டா!

 150

விபரீத விளையாட்டு தேவையா?

''விஜய் டி.வி-யில் 'நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதில் கேள்வி கேட்கப்படும்போது, வாயில் பிளம்ஸ் வைத்துக் கொண்டே பதில் சொல்லச் சொன்னார்கள். இதைக் கண்டு அதிர்ந்தே போனேன். என் உயிர்த்தோழி ஒருத்தியின் தங்கை, பேசியபடி பிளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதால் அதன் கொட்டை தவறுதலாக தொண்டைக்குழியில் சிக்கி அவள் இறந்தேபோனதை அறிந்திருந்ததுதான் காரணம். இப்படிப்பட்ட விபரீத விளையாட்டுகளெல்லாம் தேவையா? நிகழ்ச்சியைப் பார்க்கும் குழந்தைகள் இதையெல்லாம் முயற்சித்தால் என்னாவது?'' என்று பதறுகிறார் சிவகாசியில் இருந்து ம.ஜெயமேரி.

மந்திரம் அல்ல... தந்திரம்!

''ஏ.எக்ஸ்.என். சேனலில் 'மேஜிக் செய்வது எப்படி?’ என்ற நிகழ்ச்சி, மதியவேளையில் ஒளிபரப்பாகிறது. திறந்த வெளியில் யானையை வரவழைப்பது போன்ற மேஜிக்குகள் மந்திரத்தால் அல்ல, தந்திரத்தால்தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்கள். போலி சாமியார்களின் லிங்கம் எடுக்கும் மேஜிக்கில் மயங்கும் பெண்ணினம், இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கட்டாயம் பார்த்து விழிப்பு உணர்வு பெற வேண்டியது அவசியம்'' என்று அழைக்கிறார் சென்னை கே.கே.நகரில் இருந்து அ.யாழினி பர்வதம்.

மகிழ்வைத் தரும் ஆதித்யா!

''நடிகர் சிட்டிபாபுவின் திடீர் மறைவை ஏற்றுக்கொள்ள முடியாத என் போன்ற நெஞ்சங்களுக்கு ஆறுதல் தரும் வகையிலும், அவருக்கு அஞ்சலி செலுத்துவது போலவும் 'அசத்தப்போவது யாரு?’ தொடர் நிகழ்ச்சியை மறுஒளிபரப்பு செய்தார்கள். இதன்மூலம் அவர் இன்னமும் நம்முடனே வாழும் மகிழ்வைத் தந்த ஆதித்யா சேனலுக்கு, எவ்வளவு நன்றி கூறினாலும் தகும்'' என்று சிலாகிக்கிறார் பரமக்குடியில் இருந்து மீனாட்சி பாலசுப்ரமணியன்.