மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

பல முகம்... பலே முகம்!ரிமோட் ரீட்டா

##~##

ர்னாடிக் மியூசிக், லைட் மியூசிக், கிளாஸிக்கல் டான்ஸ், ஹிப் பாப், டி.வி. நிகழ்ச்சி ஆங்கரிங், வாய்ஸ் டப்பிங், புரோகிராம் புரொட்யூசர், கார்ப்பரேட் கம்பெனி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்... இப்படி பல முகங்கள், எம்.ஓ.பி வைஷ்ணவ் காலேஜ்ல எலெக்ட்ரானிக் மீடியா படிச்சுட்டே 'புது யுகம்' சேனல்ல 'கேலி பாதி... கிண்டல் பாதி’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும், ஸ்ரீ ரஞ்சனிக்கு!

''என்னம்மா ரஞ்சனி, பார்பி டால் வெச்சுக்கிட்டு வெளையாடுற மாதிரி இருக்கே... நீயா இதையெல்லாம் செய்றே..?!''

'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது ரீட்டா. அதனால பார்க்க சின்னப் பொண்ணு மாதிரி இருக்குனு தப்புக் கணக்குப் போடாதே.''

''சரி அதுகிடக்கட்டும்... உங்க ஹிஸ்டரிய கொஞ்சம் சொல்றது...''

கேபிள் கலாட்டா!

''எங்க வீட்டுல எல்லாரும், சும்மா கேள்வி ஞானத்தாலயே, நல்லா பாடுவாங்க. நானும் சின்ன வயசுலயே பாட ஆரம்பிச்சுட்டேன். முறையா மியூசிக் கத்துக்கலாமேனு... பாட்டு கிளாஸ் போக ஆரம்பிச்சு, அப்படியே இலவச இணைப்பு மாதிரி, டான்ஸ் கிளாஸ்லயும் பிரசன்ட் போட ஆரம்பிச்சேன். காலேஜ் வந்ததும் ஹிப் பாப், பாலே எல்லாம் கத்துக்கிட்டு, டான்ஸ் இன்ஸ்ட்ரக்டர் வேலையையும் கொஞ்ச நாள் செஞ்சேன்.''

''மீடியாவுக்குள்ள எப்பூடி..?''

''எஸ்.எஸ். மியூசிக் சேனல்ல, மியூசிக் பிளஸ் டான்ஸ் கான்செப்ட்ல ஒரு புரோகிராம். அதுக்காக சிட்டியில மால்ஸ், தியேட்டர் இங்கெல்லாம் ஒரு வீடியோ பூத் வெச்சுருந்தாங்க. அதுல கலந்துகிட்டேன். பிறகு, புரோகிராம்ல கலந்துக்க சொல்லி சேனல்ல இருந்து கால் வந்துச்சு. இதுதான் டி.வி. மீடியால முதல் ஸ்டெப். அப்புறம் விஜய் டி.வி நடத்தின 'இசைக் குடும்பம்’ நிகழ்ச்சியில டைட்டில் வின்னர். அப்பிடியே 'புது யுகம்’ சேனல்ல ஒரு புரோகிராமுக்கு மியூசிக் கன்சல்ட்டன்ட்டா கூப்பிட்டாங்க. போன இடத்துல என்னோட 'லொடலொட’ பேச்சைப் பார்த்து, காம்ப்பயரா மாத்திட்டாங்க. எக்ஸ்ட்ரா ஒரு ஸ்டெப் போய்... அந்த புரோகிராம் புரொட்யூசராவே மாறிட்டேன். முக்கியமா ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். இப்ப ரிலீசான 'கோலி சோடா’ படத்துல ஒரு பாட்டு பாடியிருக்கேன். ஹிஸ்டரி போதுமா ரீட்டா..?'

''ஆகா... அடுத்தது ஹீரோயின்தானா....?''

''ரொம்ப ஓவரா இப்பவே ஏத்திவிட பார்க்காதே... அதுக்கு மயங்கற ஆள் நான் கிடையாது. காலேஜ் படிக்கறப்பவே தங்கச்சி கேரக்டருக்கு கேட்டாங்க. எனக்கு, டைரக்ஷன்லதான் ஆசை. அதனால மறுத்துட்டேன். இப்போ ஐ லவ்... டி.வி. மீடியா. இது எனக்கு ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கு. கூடவே... பாட்டு, டப்பிங்னு சினிமாவோடயும் ஒரு டச் இருந்துட்டேதான் இருக்கு. எதிர்காலத்துல பார்க்கலாம்...''

வலது காலை வெச்சு வாங்க!

கேபிள் கலாட்டா!

புரொஃபசரு ஹேப்பி அண்ணாச்சி!

தித்யா சேனல்ல 'டபுள் கலாட்டா’, 'திரும்ப திரும்ப பேசற நீ’, 'காமெடிக்கு நாங்க கியாரன்டி’னு கைவசம் மூணு நிகழ்ச்சிகள் பண்ணிட்டிருக்கிற அஸார், பக்கா சென்னைப் பையன்.

''சின்ன வயசுலயே யாரைப் பார்த்தாலும் சும்மா எறங்கி கலாய்ப்பேன். அது எங்க பரம்பரை வியாதி. ஏன்னா, எங்க அப்பாவும் கலாய்க்கிறதுல கில்லி. மூணு வயசுலயே 'டொனால்ட் டக்’ மாதிரி பேச ஆரம்பிச்சு, மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டா இருக்கற சித்தப்பாவைப் பார்த்து மிமிக்ரி கத்துக்கிட்டு, அப்படியே வளர வளர அஜித், சூர்யா, விஜய், ரஜினி இவங்க எல்லார் வாய்ஸும் மாடுலேஷனோட பேச ஆரம்பிச்சேன்...''

''சார் பேஸிக்கலா இன்ஜினீயர்னு கேள்விப்பட்டேனே?''

''இன்ஜினீயரிங் சேர்ந்தேன்னுதான் பேரு... படிப்புல ஆவரேஜ்தான். அராத்து பண்றதுலதான் டிகிரியே வாங்கியிருக்கேன்! காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல ஐயாதான் ஹீரோ. ஆடியன்ஸ் எல்லாம் 'அஸார் எப்படா ஸ்டேஜ் ஏறுவான்’னு ஒத்தகால்ல நின்னு தவம் இருப்பாங்க. ரஜினி, அஜித், சூர்யா, விஜய், அசின், நமிதானு எல்லா வாய்ஸ்லயும் பேசிட்டு, கடைசியா எங்க கெமிஸ்ட்ரி புரொஃபசரை இமிடேட் பண்ண ஆரம்பிச்சதும், கூட்டத்துல அப்ளாஸ்... புரொஃபசருக்கே... எரிச்சல். 'அட... உங்கள மாதிரியே, சும்மா ஸ்டைலா நடக்கறான் சார்...’னு மத்த புரொஃபசர்ஸ் ஆறுதலா சொல்லவும்... புரொஃபசர் ஹேப்பி!''

காலேஜ் தப்பிச்சுது!

கேபிள் கலாட்டா!

கலா... கலகலா!

'நம்ம 'மானாட மயிலாட’ கலா மாஸ்டர் வீட்டுல கிளி பாட, கலா ஆடனு ஒரே ரக ளையா இருக்கு’னு டான்ஸ் பசங்க பேசிட்டி ருந்ததை ஒட்டுக் கேட்டேன். 'என்ன ஏது’னு மாஸ்டர் வீட்டுக்குப் போனா, ''லஷ்மி... ராமு...'' - மாஸ்டர் சத்தமா கூப்பிட... பறந்தோடி வந்து உட்கார்ந்தாங்க லஷ்மியும் ராமுவும்!

''ரெண்டு பேருமே சவுத் ஆப்பிரிக்கா கிளிங்க, ரீட்டா. பயங்கர ஸ்மார்ட். பசங்ககூட, நாம சொல்றதைக் கேக்காதுங்க. இவங்க என் பேச்சைத் தட்டினதே இல்ல. வீட்டுக்கு வர்ற டான்ஸ் ஸ்டூடென்ட்ஸ்கிட்ட ராமு ரொம்ப ஃப்ரெண்ட்லியா ஷோல்டர் மேல ஏறி உட்கார்ந்து பேசிட்டே இருக்கும். ஆனா... லஷ்மி, வெளி ஆளுங்க யாரோடவும் ஈஸியா பழகாது... கடிச்சு வெச்சுடும்!

காலையில 5 மணிக்கு கூண்டைத் திறந்துவிட்டா, பெட் ரூமுக்கு போய் தூங்கறவங்களை எழுப்பிவிடும். நைட் 9 மணி ஆனா... சமத்தா கூண்டுக்குள்ள போய் உக்காந்துக்கும். எதுக்காச்சும் கொஞ்சம் அதட்டிட்டா போதும்... ரெண்டும் கோவிச்சிக்கிட்டு கொறஞ்சது ஒரு மணி நேரமாச்சும், நம்ம எவ்ளோ கொஞ்சினாலும் வாயைத் தொறந்து சத்தமே போடமாட்டாங்க. அதுக்கப்புறம் போனா போகுதுனு 'கலா கலா’னு கொஞ்ச ஆரம்பிச்சுடுவாங்க!

வெளியில எவ்ளோ டென்ஷன் இருந்தாலும், வீட்டுக்கு வந்து இந்த கிளிங்கள பார்த்தா... கலா, கலகலா ஆயிடுவேன்!''

என்ன ஒரு ரைமிங்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  

கேபிள் கலாட்டா!

 150

நேர்த்தியான நடிப்பு!

''விஜய் டி.வி-யில் வரும் 'என் கணவன் என் தோழன்’ டப்பிங் தொடர்... வழக்கமான இசை, குடும்ப சென்டிமென்ட், அழுகைக்கு மத்தியில் புதிய கதைக்களம், புதிய இசை, அழகான காட்சியமைப்பு, நேர்த்தியான நடிப்பு என வியக்க வைப்பதாக இருக்கிறது. இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்'' என்று போற்றுகிறார் வந்தவாசியிலிருந்து இரா.நந்தினி.

ஃபுட்பேக்டரி அருமை!

''டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'ஃபுட்பேக்டரி’ நிகழ்ச்சி, வெகுவாக கவர்கிறது. ஐஸ்கிரீம், சாக்லேட், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் தொழிற்சாலையில் தயாராகும் விதத்தை விளக்கிக் காட்டுவது கொள்ளை அழகு. மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண் டிய நிகழ்ச்சி இது'' என்று அக்கறைப்படுகிறார் கீழக்கரையிலிருந்து தஸ்மிலா அஸ்கர்.

ஆங்கிலம் கலக்காத தமிழ்!

''சன் டி.வி. சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் சீன வானொலியில் தமிழ் தொகுப்பாளராக பணியாற்றும் சாவோ ஜியாங் என்ற கலைமகளின் நேர்முகம் கண்டேன். செம்மொழி மறைந்து போகக்கூடாது என்பதற்காக, ஆங்கிலம் கலக்காமல் தமிழிலேயே அழகாகப் பேசினார். வெளிநாட்டு பிரஜையாக இருந்துகொண்டு நம் தமிழில் அவர் செலுத்தும் அக்கறை வியப்புக்கும், பாராட்டுக்கும் உரியது'' என்று பெருமிதம் கொள்கிறார் சென்னை, சிட்லபாக்கத்திலிருந்து எஸ்.விஜயா.