ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

குழந்தை வளர்ப்பு.... குறையும் அக்கறை... குவியும் பிரச்னைகள்!

சைல்ட் கேர்கட்டுரை : வே.கிருஷ்ணவேணி, படம் : எம்.உசேன்

##~##

 லைமுறைக்குத் தலைமுறை மாறி வருகிறது, குழந்தை வளர்ப்பு. அதை நம்முடன் பகிர்கிறார்கள், இந்த மூன்று தலைமுறை குழந்தைநல மருத்துவர்கள்...

அந்தக்கால மைனஸ்... ப்ளஸ்!

''100  பர்சன்ட் சுகப்பிரசவங்கள்தான் என்றாலும் தாய், சேய் மரணங்கள் அதிகமா இருந்த காலம் அது...'' என்று, குழந்தை வளர்ப்பில் 60-80களில் இருந்த அறியாமை பற்றிப் பேசினார், குழந்தைகள்நல சீனியர் மருத்துவர் பார்வதி.

''அப்போ எல்லாம் மருத்துவச்சினு சொல்லப்படுறவங்கதான் அதிகமா பிரசவம் பார்ப்பாங்க. ஓரளவுக்குமேல அவங்களால கவனம் செலுத்த முடியாதுங்கற நிலையில... பிரசவ கால மரணங்கள் அதிகமாவே இருந்துச்சு. அதேபோல, பிறந்த குழந்தையோட தொப்புள் கொடியை கத்தியையோ அல்லது கத்தரிக்கோலையோ பயன்படுத்தி கத்தரிச்சுட்டு, அந்த இடத்துல செங்கல் தூள், சுண்ணாம்பு, சாணினு இதுல ஏதாவது ஒண்ணை வெச்சு அடைச்சுடுவாங்க. இதனால, தொப்புள் கொடி தொற்று, ரண ஜன்னினு நிறைய பிரச்னைகள் ஏற்பட்டுச்சு. குழந்தைக்கு நோய் ஏற்பட்டா, அதை மருத்துவரிடம் கொண்டு போகாம, மந்திரிக்கிறது, தாயத்து கட்டுறதுனு இருப்பாங்க.

குழந்தையைக் குளிப்பாட்டும்போது காது, மூக்கு, கண்ணுல எல்லாம் எண்ணெய்விட்டு, சளி வந்தா வாயால ஊதி எடுப்பாங்க. இதனால் கிருமி நேரடியா குழந்தையோட நுரையீரலுக்குப் போயி, நிறைய குழந்தைகள் நிமோனியாவால பாதிக்கப்பட்டாங்க. சாப்பாட்டை தன் வாயில் குழைச்சு, குழந்தைக்கு ஊட்டுற வேலையையும்கூட சிலர் செய்வாங்க.

குழந்தை வளர்ப்பு.... குறையும் அக்கறை... குவியும் பிரச்னைகள்!

ரத்த சொந்த திருமணங்கள் அதிகமா இருந்ததால, நிறைய குழந்தைகள் குறைபாட்டோட பிறந்திருக்கு. ஆனா, பொதுவா ஒரு வீட்டுல ஏழெட்டு குழந்தைகள் இருக்கும்கிறதால, ஒரு குழந்தை குறைபாட்டோட இருக்கிறது அவங்களுக்குப் பெரிய கவலையா இருக்காது. பெண் குழந்தை வேண்டாம்னு, பிறந்த குழந்தையைக் கொல்றதும், சில கிராமங்கள்ல சர்வசாதாரணமா நடந்துச்சு.

இப்படி மைனஸ்களை சொன்னாலும்... ப்ளஸ்களும் உண்டு... அந்தக்காலத்துல! ஓடி ஆடி வேலை செய்றதால பிரசவத்தை சுலபமாக்கிக்கறது; குழந்தை பிறந்தவொடன தாயையும் சேயையும் சடங்குங்கற பேர்ல 31 நாட்கள், வீட்டுலயே தனி இடத்துல தள்ளி வெக்கறதால, தொற்று ஏதும் ஏற்படாம தவிர்க்கறது; மருந்து, மாத்திரைகள் அதிகம் புழங்காத அந்தக் காலத்தில் சத்தான உணவுகளின் மூலமே ஆரோக்கிய மான குழந்தைகளை வளர்த்ததுனு... இதெல்லாமே ப்ளஸ்தான்!''

கோல்டன் பீரியட்!

''குழந்தை வளப்பைப் பொறுத்தவரை 80-90களை 'கோல்டன் பீரியட்’ என்று சொல்லலாம்...'' என்கிறார், குழந்தைநல மருத்துவர், பேராசியர், ரமா சந்திரமோகன்.

''நோய்கள் பற்றியும் மருத்துவம் பற்றியும் அதிகமாக விழிப்பு உணர்வு பரவ ஆரம்பித்த காலம் இது. அப்போ இருந்த ஃபேமிலி டாக்டர் நடைமுறையால, பெரும்பாலும் குழந்தைகளின் எல்லா நோய்களும் கவனிக்கப்பட்டு குணமாக்கப்பட்டது. அதையும் மீறி நிமோனியா, டயரியா உள்ளிட்ட நோய்கள் சில குழந்தைகளைப் பலியாக்கினது. போலியோ பாதிப்பு அதிகமா இருந்ததும், அதை பற்றிய விழிப்பு உணர்வு அதிகமா பரவ ஆரம்பிச்சதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

குழந்தை வளர்ப்பு.... குறையும் அக்கறை... குவியும் பிரச்னைகள்!

பிரசவத்தைப் பொறுத்தவரை, அது சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்த ஆரம்ப காலம். 25-30 சதவிகிதம் சிசேரியன் பிர சவங்கள் நிகழ்ந்தன. பெண் பட்டதாரிகள் அதிகம் உருவான இந்தக் காலத்தில், தாய்ப் பால், தடுப்பூசி, நோய்த்தொற்றுனு குழந்தை வளர்ப்பைப் பற்றிய தகவல்கள் அறிந்த வர்களா நிறைய அம்மாக்கள் இருந்தாங்க.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை, குழந்தைகளை அறிவு, ஆரோக்கியம்னு இரண்டிலும் மெருகேற்றியது. தன் முந்தைய தலைமுறை போல அதிக அடக்குமுறையும் இல்லாம, தனக்குப் பிந்தைய தலைமுறை போல அளவில்லாத சுதந்திரமும் இல்லாம... சரி யான அரவணைப்பில் குழந்தைகள் வளர்ந்தாங்க. மிக முக்கியமான விஷயம், சோஷி யல் பிஹேவியர் நிறைந்த இந்த தலைமுறை குழந்தைகள் சீக்கிரமே பேசினாங்க. குழந் தைகள் தனித்துவிடப்படும் சூழல் இல்லை என்பதால, எப்பவும் அதுக்கு ஒரு பாது காப்புக் கவசம் கிடைச்சுது, குழந்தை விபத் துகள் அதிக அளவில் குறைஞ்சுது.  

மொத்தத்தில், வசதிகள் இல்லை என் றாலும், நோய் எதிர்ப்பு, கல்வி, சமூகப் பழக்கவழக்கங்கள்னு எல்லா தளங்களிலும் குழந்தைகள் சரியான விகிதத்தில் வளர்ந்த காலகட்டம் இது!''

குழந்தை வளர்ப்பு.... குறையும் அக்கறை... குவியும் பிரச்னைகள்!

மன ஆரோக்கியம் காணாமல் போயிடுச்சே!

''குழந்தை வளர்ப்பில் அதிக மாற்றங்கள் ஏற்பட்ட காலம் இது!'' என்று குழந்தைகள் நலம் மற்றும் மரபணுத்துறை சிறப்பு மருத்துவர் ஸ்ரீலஷ்மி குறிப்பிட்டுச் சொல்வது, 90 டு சமகாலத்தை!

''சொந்தத்தில் திருமணம் செய்வது குறைய ஆரம்பித்த காலகட்டம் இது. தவிர, பிறக்கப்போற குழந்தையோட குறைபாட்டை கருவில் இருக்கும்போதே கண்டறியும், சரிசெய்ய வழிவகுக்கும் 'ஸ்கேன்’ பரிசோதனை எல்லா தட்டு மக்களுக்கும் பரவலா கிடைக்க ஆரம்பித்தது, இந்த காலத்தின் முக்கிய வளர்ச்சி. தடுப்பூசி பற்றிய 100 சதவிகித விழிப்பு உணர்வு கிட்டத்தட்ட கிராமங்களை வரை சென்றடைந்துவிட்டது. கர்ப்பக்காலத்தில் இருந்தே மருத்துவர்களோட வழிகாட்டுதலோட தடுப்பூசிகளை பெண்கள் தவறாம போட்டுக்கறாங்க. இதனால் அம்மை, மூளைக்காய்ச்சல்னு பல நோய்கள் தடுக்கப்பட்டிருக்கு. ஆனா, சத்தில்லாத மற்றும் ஜங்க் ஃபுட் பழக்கத்தால குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதையும் குறிப்பிட்டாகணும். டயாபர் அதிகமா பயன்பாட்டுக்கு வந்த இந்தக் காலத்தில், குழந்தையின் மேனியை இயல்பாக காக்கும் பருத்தித் துணி பாதுகாப்பு காணாமல் போனது.

நியூக்ளியர் குடும்பங்கள் அதிகரித்தது, குழந்தை மனநல வளர்ப்பில் சரிவை ஏற்படுத்தியது. காசை நோக்கி அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு ஓட, குழந்தையோட உரிமையான தாய்ப்பாலே அதுக்குக் கிடைக்காமப் போனது முதல் சோகம். வீட்டில் தனியாக இருக்க நேரும் குழந்தைகள் ஓடியாடி விளையாடாம டி.வி, கம்ப்யூட்டர் முன் அமர ஆரம்பித்து ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கிட்டதோட, மனதளவிலும் பாதிக்கப்பட்டாங்க. இப்போ குழந்தை மனநல மருத்துவர்களின் கிளினிக்கில் குடும்பங்கள் குவிய ஆரம்பித்திருக்கும் காட்சி, கவலை தருவதா இருக்கு.

படிப்பின் பின்னாடியே துரத்தாம, குழந்தைகளோட உணவுப் பழக்கம், மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய தருணத்தில் இருக்கிறார்கள் இந்தத் தலைமுறை பெற்றோர்கள்!''