ஸ்பெஷல் 1
Published:Updated:

பழசுக்கு மரியாதை!

ஆச்சர்யப்பட்டு... ஆசைப்பட்டு... ம.பிரியதர்ஷினி, படம் : வீ.நாகமணி

ழமைக்கு எப்போதும் கிரேஸ் உண்டு. நீளமான கைவைத்த ஜாக்கெட், டிசைன் கொண்டை என இப்போதைய டிரெண்டாக பார்க்கப்படுபவை எல்லாம் அந்தக் காலத்து கலெக்ஷன்கள்தான். அந்த வரிசையில், தாங்களே மிகவும் ஆச்சர்யப்பட்டு, ஆசைப்பட்டு பழங்கால நகைகளாகச் சேகரித்து, அசத்தலான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் சென்னை, தி.நகர், என்.ஏ.சி ஜுவல்லர்ஸ்.

பழசுக்கு மரியாதை!

''15, 20 வருஷமா நாங்க தேடித்தேடி சேகரிச்ச பழங்கால, குந்தன் நகைகளை எல்லாம் காட்சிப் படுத்தியிருக்கோம். ரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நகைகளை சேகரிச்சு இதுல வெச்சுருக்கோம்'' என்று பெருமையோடு பேசினார் என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் அனந்த பத்மநாபன்.

இந்தக் கண்காட்சி, பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி, மார்ச் 16-ம் தேதி வரை நடக்கிறது!