ஸ்பெஷல் 1
Published:Updated:

அகராதி பிடிச்ச புள்ளைங்க!

அகராதி பிடிச்ச புள்ளைங்க!

காலேஜ் ஸ்டூடென்ட்ஸோட கேம்பஸ் டிக்ஷ்னரி, எப்பவும் கலகல கலாட்டா! ஊர் ஊரா அலைஞ்சு, சில கேம்பஸ் சங்கேத வார்த்தைகளை சேகரிச்சுட்டு வந்திருக்கோம்... உங்களுக்காக! படிச்சு, உங்க அறிவை (!) வளர்த்துக்கோங்க!

கோவை

''அதுல பாருங்க... நிறைய கோட் வேர்ட்ஸ் எல்லாம் உண்டு பாஸ். அதையும் சொல்லுனா என்ன அர்த்தம்? நாளபின்ன பப்ளிக்ல பேசும்போது மாட்டிக்க மாட்டோமா..?''னு கொஞ்சம் பிகு பண்ணிட்டு, கொட்டோ கொட்டுனு கொட்டினாங்க கோவை கேர்ள்ஸ்...

சத்ய சோதன - கலாய்க்கப்படும்போது

ஸ்டவ்வ கொற - அதிகமா கப்சா விடாத / பொய் சொல்லாத

பல்ப மாத்து / பஞ்சர் போட்டாச்சு வேற சொல்லு - பழைய ஜோக் சொல்லாதே

நூல் அந்துடுச்சா / காபி ஆறிடுச்சா / மிட்டாய் கசக்குதா? - லவ் ஃபெயிலியரா?

கனைக்காத - புலம்பாத

புது சர்பத் போட்டாச்சா/செகண்ட் இன்னிங்ஸா? - பழைய லவ் விட்டுட்டு புது ஆள் பிடிச்சாச்சா?

லொடுக்ஸ், பர்ஃபி - அப்பாவிப் பையன்

குல்ஃபி - அழகான பையன்

வெடி, டெட்டனேட்டர் - ஓவர் பீலா ஆசாமி    

அகராதி பிடிச்ச புள்ளைங்க!

சென்னை

''காலேஜ் டிக்ஷ்னரியில ஒவ்வொரு வருஷமும் வார்த்தைகள் சேர்ந்துட்டே இருக்கும்...''னு உற்சாகமா லிஸ்ட் சொன்னாங்க, சென்னை கேர்ள்ஸ்!

பசுபதி/அகோரா - பயங்கரமான (!) பையன்

ஆக்ஸ் - குளிக்காதவன்

டைரி மில்க் - சாக்லேட் பசங்க

கே கே வி - குடும்ப குத்துவிளக்கு பெண்கள்

ராக்கோழி - இரவு முழுக்க கடலை போடுபவர்கள்

ஐடெக்ஸ் - ஓவர் மேக்கப் பார்ட்டி

பிபிசி - பீட்டர் பார்ட்டி

மேட்ரிக்ஸ் மண்டை - ஓவர் புத்திசாலிகள்

மதுரை

''மதுரைக்காரய்ங்க எது பேசினாலும் அதை சினிமாவுல காட்டிடுறீக. இப்போ காலேஜ்குள்ள யும் கேமராவோட வந்துட்டீகளா..? மொதல்ல 'பேடன்ட்’ வாங்கணும்யா!''னு 'கெத்து’ காட்டி ஆரம்பிச்சாங்க, மதுரை கேர்ள்ஸ்!

கெட்ட தோரண மச்சி - டிரெஸ் நல்லாயிருக்கு

கோட்டான கோட்டி நன்றி ஏசப்பா - எக்ஸாம் கேன்சல்/மேம் லீவ்

பொடிமாஸ் - குட்டி உருண்டையா... சிக்குனு இருக்கும் தோழிகள்

ஃப்ரீயா இருந்தா வாங்களேன்... கேன்டீன் பக்கம் போய் பேசலாம் - ட்ரீட் வை

கடல்லயே இல்லியாம் மச்சி - அவுட் ஆஃப் போர்ஷன், புக்லயே இல்ல

மரண பயத்த கண்ல காட்டிட்டாங்க பரமா - கொஸ்டீன் பேப்பரை பார்த்தவுடன்

அப்பாலே போ சாத்தானே - எக்ஸாம் எழுதிட்டு ஹாலைவிட்டு வெளிய வந்தவொடன, ஆன்சர் கீன்சர் டிஸ்கஸ் பண்றேன்னு பக்கத்துல வந்துடாதே

காட்டுப்பூச்சி - கிளாஸில் டவுட் கேட்கும் குழப்பவாதிகள்

திண்டுக்கல்

''திண்டுக்கல்ல ஃபேமஸ் பூட்டு.. நாங்க வாயைத் திறந்தா அதிர்வேட்டு... ஏ டண்டனக்கா.. ஏ டணக்குனக்கா!'' என்று அதிபயங்கரமாக ஆரம்பித்த திண்டுக்கல் மாணவிகளை 'கூல்’ செய்து நாம் வாங்கிய சங்கேத வார்த்தைகள் சில...

அகராதி பிடிச்ச புள்ளைங்க!

வாட்ஸ் அப் - மத்தவங்களை பத்தி அதிகமா தகவல் சொல்றவங்க

பக்கெட் - பாட்டு, கவிதை எழுதுற பார்ட்டீஸ்

விஷம் - கேன்டீன் டீ

போஸ் பாண்டி - ஸ்ட்ரிக்ட் அப்பா

கருட புராணம் - அசைன்மென்ட், எக்ஸ்ட்ரா கிளாஸ்

ஜேக் ஃப்ரூட் - ஸ்பைக் ஹேர்ஸ்டைல் வைச்ச பசங்க

பெங்களூரு  மைசூர்

''கமான் கைஸ்... கலாய் மொழியை (கலாய்க்கும் மொழி) பலமொழியில கத்துக்கலாம்''னு சொன்னபடி கிளாஸ் எடுக்க ரெடி ஆனாங்க, பெங்களூரு, மைசூர் கேர்ள்ஸ்!

ஓவர் ஸீன், பாடி பெயின் - ஆடினது போதும் அடங்குடா

மஸ்த் மஜா மாடி - களத்துல இறங்கி தூள் கிளப்புடா மக்கா

பாபா ஜி க டுல்லு (ஹிந்தி) - ஒண்ணுமே இல்ல

பண்டக சேஸ்துன்னாவு போ வே (தெலுங்கு) - தூள் கிளப்பற போடி    

மிக்ஸிங் மிக்ஸிங் (இங்கிலீஷ்) - கலக்குற மாப்புள்ள

தொகுப்பு: ஞா.சுதாகர், ந.கீர்த்தனா, இ.பிரியதர்ஷினி, லோ.இந்து, உ.சிவராமன்

படம்: வீ.சிவக்குமார்