Published:Updated:

அ முதல் ஃ வரை - 9

சட்டம் பேசலாம் வாங்க!சா.வடிவரசு, படம் : ர.சதானந்த்  , பா.ஓவியா

ந்நேரமும் பரபரப்பாக இயங்கும் நீதி மன்ற வளாகங்களும், ஒவ்வொரு நாளும் குவிந்துகொண்டே இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையும் உரக்கச் சொல்கின்றன... சட்டம் படித்தவர்களுக்கு பரந்து, விரிந்து கிடக்கும் வாய்ப்புகளை! சட்டப் படிப்புகள், பயிற்சிகள், பணியிட வாய்ப்புகள், வருமானம், சாதக பாதகங்கள் என்று சட்டத்துறை பற்றிய முழு விவரங்களையும் அலசுவோம் இங்கு!

சட்டக் கல்வித்துறை இயக்குநராகவும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளராகவும், பல்வேறு கல்லூரிகளில் முதல்வராகவும் இருந்து ஓய்வுபெற்ற கோதன காந்தி, சட்டப் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து பேசுகிறார்... ''சட்டத் துறையைப் பொறுத்தவரையில், இன்றைக்கு மட்டுமல்லாமல், இனிவரும் காலங்களிலும் எக்கச்சக்கமான வேலைவாய்ப்புகள் கொட் டிக்கிடக்கின்றன. அதற்காக தகுதிபடுத்தும் வகையில் பி.ஏ-பி.எல்., பி.எஸ்சி-பி.எல் என்று படிப்புகள் நிறையவே இருக்கின்றன. மாநில அளவில், தேசிய அளவில் மற்றும் உலக அளவில் ஏகப்பட்ட படிப்புகள் இருக் கின்றன. படிக்கும் இடத்தையும் படிக்கும் விதத்தையும் பொறுத்து இத்துறையில் ஏகப் பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன'' என்ற படி சட்டப்படிப்புகளைப்  பட்டியலிட்டவர் (பார்க்க அட்டவணை), தொடர்ந்தார்...

அ முதல் ஃ வரை - 9

''சட்டப்படிப்பில் மாணவர்களுக்கு முத லாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை சட்டம் குறித்த பயிற்சிகள் ஒவ்வொரு நிலை யாக வழங்கப்படுகின்றன. அதற்காக கல்லூரியில் 'பயிற்சி வழக்காடு மன்றம்’ நடத்தப்பட்டு, கற்பனை வழக்குகள் கொடுத்து வாதாடச் சொல்லி பயிற்சி அளிக்கப்படும். மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் உள்ளிட்ட ஏதா வது ஒரு அலுவலகத்துக்குச் சென்று, அங்கே சட்டம் எப்படி நடைமுறைபடுத்தப்படுகிறது என்பது உள்ளிட்ட தகவல்களை நேரடியாகப் பார்த்து, மாணவர்கள் ஆய்வாக தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.  நீதிமன்றத்தில் வழக்குகளை நேரடியாக பார்வையிடுவது, இலவச சட்ட உதவி மையங்களில் பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது என்று பலவித மான பயிற்சிகளைக் கொடுத்து, தரமான வழக் கறிஞராக வெளியில் அனுப்புவோம்'' என்ற கோதன காந்தி, சட்டத்துறையில் கொட்டிக் கிடக் கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் கூறினார்.

வேலைவாய்ப்பு!

''நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடித்தான் ஆக வேண்டும் என்றில்லை... நீதிமன்ற படிகளை மிதிக் காமலேகூட கைநிறைய சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகளும் இந்தப் படிப்பு முடித்தவர்களுக்கு காத்துள்ளன. பல்வேறு நிறுவனங்களிலும் சட்ட ஆலோசகராக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உங் களின் திறமையைப் பொறுத்து வங்கி, மருத்துவ மனை என பலதரப்பட்ட தனியார் நிறுவனங்களில் எளிதில் பணி வாய்ப்புகளைப் பெறமுடியும். இதைத்தவிர, வருமானவரித்துறையிலும்... அறநிலையத் துறை, சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில், 'தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம்’ மூலமாகவும் பணியமர்த்தப்படுகிறார்கள். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பணி வாய்ப்பையும் பெற முடியும்.

அ முதல் ஃ வரை - 9

சட்டம் படித்து முடித்த எல்லோரும் நேரடியாக நீதிமன்றங்களில் வழக்கை எடுத்து வாதாட முடியாது. அதற்கான தகுதித் தேர்வை 'பார் கவுன்சில்’ ஆண்டுக்கு இரண்டு முறை நடத்திவரு கிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, நீதிமன்றங்களில் வாதாட முடியும். இப்படி தேர்ச்சி பெறுபவர் கள், எந்த வழக்கறிஞரிடமும் உதவி யாளராகப் பணியாற்றியிருக்க வேண் டிய அவசியம் இல்லை என்பது குறிப் பிடத்தக்கது.

வழக்கறிஞர் டு நீதிபதி!

குறைந்தது மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணி அனுபவம் பெற்ற ஒருவர், நீதித்துறை நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால், 'முதல்நிலை குற்றவியல் அமர்வு நீதிமன்றத் தில்’ நீதிபதி பணி வாய்ப்பைப் பெறுவார். அதன்பின் திறமையைக் கொண்டு படிப்படி யாக உச்ச நீதிமன்றம் வரை பதவி உயர்வு பெறலாம். உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதி மன்றங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்று பவர்கள், நேரடியாக உயர் நீதிமன்ற நீதிபதி களாக பணி நியமனம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதற்கு... பிரபல வழக் கறிஞர், மிகுந்த பணி அனுபவம் மிக்கவர், குற்றவழக்குகளில் சம்பந்தப்படாதவர், அரசியல் கட்சிகளைச் சாராதவர் என்று பல தகுதிகள் உள்ளன. எம்.எல்., மற்றும் பிஹெச்.டி., முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பேராசிரியர் பணிகளுக்கு வாய்ப்புள்ளது. அரசு கல்லூரிகளில் பேராசிரியர் பணி வாய்ப்பை பெற வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு!

வெளிநாடுகளிலும் வேலை வாய்ப் புகள் உண்டு. ஆனால், ஒவ்வொரு நாட்டின் சட்டங்களும் மாறுபடும் என்பதால், குறிப்பிட்ட நாட்டில் வகுக் கப்பட்டுள்ள கூடுதல் சட்டப் படிப் பிலும் தேர்ச்சி பெற வேண்டியது அவ சியம். அவ்வாறு தேர்ச்சி பெறுபவர்கள், அந்த நாட்டின் சட்டம் சார்ந்த பணி யில் சேரத் தகுதி பெறுவார்கள்.

வருமானம் ஜேஜே!

சட்டத்துறையைப் பொறுத்தவரை ஒவ்வொருவரின் திறமையைப் பொறுத்து 5 ஆயிரம் ரூபாய் தொடங்கி, லட்சங்களில், ஏன்... கோடி களில்கூட சம்பாதிக்க முடியும். வெளி நாடுகளில் ஆரம்ப சம்பளமே லட்சங் களில்தான். மற்ற துறைகளைப் போல் இல்லாமல், சட்டத்துறையில் உள்ளவர்கள் படிக்கும்போது மட்டுமின்றி, பணியில் இருக் கும்போதும் தினந்தோறும் மெருகேற்றிக் கொள்வது முக்கியம். செய்தித்தாள், சட்டம் சார்ந்த விஷயங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்'' என்று விளக்கமாகச் சொன்ன கோதன காந்தி,

''இந்தியாவின் பல இடங்களில் சட்டக் கல்லூரிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட சில கல்லூரிகள் உண்மையிலேயே வாங்கும் பணத்துக்கு உரிய கல்வியைத் தருகின்றன. பெரும்பாலான கல்லூரிகள், சான்றிதழ் தரும் வேலையை மட்டுமே செய்கின்றன. எனவே, கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் முன்பாக, அவற்றின் தகுதியைத் தெரிந்துகொண்டு சேரவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நல்ல கல்லூரியில் படித்தாலும், எந்தளவுக்கு திறமையை வளர்த்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது நம்முடைய எதிர் காலம்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

அ முதல் ஃ வரை - 9

கறுப்பு கோட்டில் பெண்கள்!

 25 ஆண்டுகளுக்கு மேலாக சட்டத்துறை யிலிருக்கும்... சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர் அருள்மொழி, ''மற்ற துறைகளைப் போல் இல்லாமல், சந்திக்க வேண்டிய நெருக் கடியான சூழல்களால், இது பெண்களுக்கு சவால் மிகுந்த துறைதான். சில இடங்களில் பெண் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு இன்ன மும் இருக்கிறது. அதிகமான பெண் வழக் கறிஞர்கள் தங்கள் தொழிலால் திருமணத்துக்கு தடை வருவதாகவும் சொல்கிறார்கள். இருந்தாலும், அனைத்தையும் கடந்து பெயர் பெற்று விளங்கும் மூத்த பெண் வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் நாம் நம்பிக்கைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று நம்பிக்கை வார்த்தைகள் பகிர்ந்தார்.

பணி ஓய்வே கிடையாது!

''சட்டத்துறையில் உள்ளவர்களுக்கு ஓய் வும் இல்லை, பணி ஓய்வும் இல்லை!'' என்று சொல்லும் திருச்சி மாவட்ட நீதிமன்ற வழக் கறிஞர் ஜெயந்திராணி, ''பணி ஓய்வு என்பது இத்துறையில் இல்லவே இல்லை. விரும்பும் வரை, இறுதிக்காலம் வரைகூட வழக்கறிஞராக பணியாற்றலாம். நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களும், தாங்கள் பணியாற்றிய நீதிமன்றங்களைத் தவிர்த்து மற்ற நீதிமன்றங் களில் வழக்கறிஞராக ஆஜராகலாம். பெரிய நிறுவனங்களிலோ, அரசியல் கட்சியிலோ, தனியார் அமைப்புகளிலோ சட்ட ஆலோசக ராகவும் பணிபுரியலாம். இது, இந்தத் துறைக்கு மட்டுமே இருக்கும் கூடுதல் சிறப்பு'' என்ற ஜெயந்திராணி,

எவர்கிரீன் எதிர்காலம்!

''மனிதர்கள் உலகத்தில் இருக்கும் கடைசி நிமிடம் வரை குற்றங்களும், அவற்றுக்கான சட்டங்களும் இருந்துகொண்டுதான் இருக் கும். அதனால் சட்டத்துறை பணிவாய்ப்பு களும் மக்கள்தொகை பெருகுவதைப் போல் பெருகிக்கொண்டுதான் போகும்'' என்றார் முத்தாய்ப்பாக!

ப்ளஸ், மைனஸ்!

ப்ளஸ்: சட்டத்துறையில் இருப்பவர்கள், பெரும்பாலான துறைகளுக்கு எளிதாக மாறிவிட முடியும். ஆனால், மற்ற துறையில் இருப்பவர்களால் அவ்வளவு சுலபமாக சட்டத்துறைக்குள் வரமுடி யாது. சட்டம், அடிப்படை உரிமைகள் தெரிந்தவர்கள் என்பதால், எந்தப் பிரச்னையையும் தெளி வுடன், துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். நல்ல வருமானம், சமுதாயத்தில் மரியாதை போன்றவையும் உண்டு. நீதிபதிகளாக பணியாற்று பவர்களுக்கு நல்ல சம்பளம், அரசாங்க சலுகை கள் என்று இன்னும் பல உண்டு.

மைனஸ்: பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு இடையில் பணியாற்ற வேண்டிய சூழல் என்பதால், எப்போதும் கவனம் தேவை. ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராக காலூன்ற, ஓயாத உழைப்பை கொடுக்க வேண்டியது அவசியம். வாடகைக்கு வீடு கொடுக்க பலரும் முன்வருவ தில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

ஆண்டுக் கட்டணம்... 20 லட்சம்!

தேசிய சட்டக் கல்லூரிகள் பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பார் கவுன்சில் மூலமாக இவை நடத்தப்படு வதால், இந்தக் கல்லூரிகளுக்கு சமூகத்தில் பெரிய மரி யாதை இருக்கிறது. இவற்றில் சேர்வதற்கு போட்டியும் இருக்கிறது. இவற்றில் படிக்க ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் (உணவு, தங்குமிடம் உட்பட) வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ப்ளஸ் டூ மதிப்பெண்கள், நுழைவுத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் போன்ற வற்றின் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறுகிறது. கட்டாயமாக விடுதியில் தங்கிப் பயில வேண்டும்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை மூலமாக வும் சட்டப்படிப்பை படிக்க முடியும். இதற்கு ஆண்டுக்கு 4 லட்ச ரூபாய் முதல் 7 லட்ச ரூபாய் வர கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டெல்லி அருகில் உள்ள சோன்பேட் என்ற இடத்தில் 'ஜிண்டால் குளோபல் லா ஸ்கூல்' இருக்கிறது. இதில் சேர்ந்து படிக்க ஆண்டுக் கட்டணமாக 20 லட்சத்துக்கும் மேல் வசூலிக்கப்படுகிறது. உள்நாட்டு மாணவர்களைவிட, வெளிநாட்டு மாணவர்களே இங்கே அதிகம் படிக்கிறார்கள்.