Published:Updated:

பாரம்பரியம் VS பார்லர் - 9

நார்மல் ஸ்கின்... நாம்தான் கியாரன்டி!இந்துலேகா.சி

டந்த இதழில் 'ஆய்லி ஸ்கின்' பராமரிப்புப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் 'நார்மல் ஸ்கின்' பராமரிப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்...

பார்லர்

''நார்மல் ஸ்கின் பராமரிப்புக்கு ரொம்ப மெனக்கெட வேண்டாம். ஏன்னா... நம்மவங்ககிட்ட காணப்படுற ஐந்து விதமான சரும வகைகள்ல 'ஆரோக்கியமான சருமம்’... இந்த 'நார்மல் ஸ்கின்'தான்'' என ஆரம்பித்தார் 'க்ரீன் டிரெண்ட்ஸ்’ சீனியர் டிரெயினர் பத்மா.

பாரம்பரியம் VS பார்லர் - 9

''சருமத்துக்குத் தேவையான எண்ணெய்த் தன்மை, ஈரப்பதத்தை சரியான அளவுல பெற்றிருக்கும் சருமம்தான்... நார்மல் ஸ்கின். தினமும் க்ளென்ஸர் பயன்படுத்தி முகத்தைக் கழுவின பிறகு, பஞ்சுல 'டோனர்' (காஸ்மெடிக் மற்றும் டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக் கும்) எடுத்து, முகத்துல பரவலா ஒத்தி எடுக் கணும். முகத்தைக் கழுவாமலே... மாய்ஸ்ச்ச ரைஸர் அப்ளை செய்துடணும். வெளியில எங்காவது போகணும்னா... சன் ஸ்க்ரீன், இல் லைனா... சன் ப்ளாக் பயன்படுத்தலாம்.

நார்மல் ஸ்கின்னுக்கு இரண்டு விதமான பிரச்னை வரும். முதல் பிரச்னை, வெயில் காரணமா கறுத்துப் போறது. இது எல்லா வகை சருமத்துக்கும் பொதுவான பிரச்னையும்கூட. அடுத்தது, குளிர்காலத்துல நார்மல் சருமம் வறண்டு போறது. நார்மல் ஸ்கின் உள்ளவங்களைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்னைகளுக்கு, மற்ற ஸ்கின் வகை மாதிரி அதிக பராமரிப்பு தேவை இல்லை. ஆனாலும், சீஸனுக்கு ஏத்த பராமரிப்பு அவசியம்.

வெயில் காலத்தில் சருமம் கறுக்காமல் இருக்க, தினமும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தணும். வெளியில போய் வந்ததும், மேலே சொன்ன மாதிரி க்ளென்ஸர், டோனர், மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்தி பராமரிச்சாலே போதும். தவிர, மாசத்துக்கு ஒரு முறையோ... இல்லை சருமம் நிறம் மங்கினாலோ, தரமான பார்லருக்குப் போய், ஒரு பிரைட்னஸ் ஃபேஷியல் செய்யலாம். குளிர்காலத்துல நார்மல் ஸ்கின் வறண்டு போக வாய்ப்பிருக்கு. அதனால, முகத்தை நல்லா கழுவிட்டு, மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை பண்ணினாலே போதும்'' எனும் பத்மா, பிரைட்னஸ் ஃபேஷியல் செய்முறையை விளக்குகிறார்.

''முதல்ல முகத்தில் க்ளென்ஸிங் மில்க் அப்ளை செய்து, சூப்பர்சோனிக் மெஷின் பயன்படுத்தி மசாஜ் கொடுப்போம். இது நுண்ணிய துவாரங்கள்ல உள்ள அழுக்கையும் வெளியேத்திடும். பிறகு, டோனர் அப்ளை பண்ணுவோம். அடுத்ததா... என்ஸைம் மாஸ்க் போட்டு 10 நிமிஷம் கழிச்சு ரிமூவ் பண்ணிடுவோம். இதுக்குப் பிறகு, ரெண்டுவிதமான ஸ்கரப்பர் பயன்படுத்துவோம். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிடும். முகத்துக்கு ஸ்டீமர் மெஷின் மூலம் நீராவி கொடுத்து, பிளாக் அண்ட் வொயிட் ஹெட்ஸை நீக்கிடுவோம்.

கொஞ்சமா சீரம் எடுத்து. முகத்தில் தடவி, மறுபடியும் சூப்பர்சானிக் மெஷினின் உதவியால் மசாஜ் கொடுப்போம். இதனால் சீரம், நுண்ணிய துவாரங்கள் வழியாக உள்ளிறங்கி, மெலனின் பிக்மென்ட்டை கன்ட்ரோல் செய்யும். இதைத் தொடர்ந்து முகத்துக்கு 'பீல் ஆஃப் மாஸ்க்’ அப்ளை செய்து, உலர்ந்ததும் உறித்தெடுப்போம். இதனால் தளர்வான ஸ்கின் இறுக்கமாகும். கடைசியா... சன் ஸ்க்ரீன் அப்ளை செய்துடுவோம்.

மொத்தத்தில், நார்மல் ஸ்கின் இருப்பவர்கள், தினமும் வீட்டிலேயே முகத்தை சுத்தப்படுத்துவதுடன், மாதம் ஒருமுறை பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்துக்கிட்டாலே... சருமம் எந்தப் பிரச்னையும் இல்லாம பொலிவோட இருக்கும்.''

பாரம்பரியம்

'நார்மல் ஸ்கின்'னுக்குரிய இயல்பு, அதன் நன்மை - தீமைகள் மற்றும் பராமரிப்பு டிப்ஸ்கள் சொல்கிறார், 'கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக் நிர்வாகி, கீதா அஷோக்.

பாரம்பரியம் VS பார்லர் - 9

''வறண்டும் இல்லாமல், எண்ணெய் பிசுக்குடனும் இல்லாமல்... ரெண்டையும் மிதமான அளவில் பெற்றிருப்பதுதான் நார்மல் ஸ்கின். நார்மல் ஸ்கின்னை கண்டுபிடிக்க சுலபமான வழி, உள்ளங்கையைத் தொட்டுப் பார்ப்பதுதான். ஆய்லி ஸ்கின் இருக்கறவங்களோட உள்ளங்கையை தொட்டுப் பார்த்தால், சூடா இருக்கும். அதுவே நார்மல் ஸ்கின்னா இருந்தா, உள்ளங்கை குளிர்ச்சியா இருக்கும். இந்த வகை சருமத்தில் சுருக்கம் இருக்காது, முகப்பரு இருக்காது, வயதானாலும் இளமையான சருமமா தோற்றம் அளிக்கும்.

சோப்பு, ஃபேஸ் வாஷ் முதல், முகத்துக்கான ஃபவுண்டேஷன் வரை, மார்க்கெட்டில் எல்லா வகையான காஸ்மெடிக் அயிட்டங்களும் ஒவ்வொரு சரும வகைக்கும் மாறுபடும். ஆனா... நார்மல் ஸ்கின் உள்ளவங்களுக்கு மட்டும், எல்லா வகையான காஸ்மெடிக் அயிட்டங்களும் பொருந்தும். முகத்துக்கு மேக்கப் போடும்போது, வறண்ட சருமத்துக்கு ஹெவி மேக்கப், ஆய்லி ஸ்கின்னுக்கு குறைவான மேக்கப், நார்மல் ஸ்கின்னுக்கு மிதமான அளவு மேக்கப்... இப்படி போடணும். ஒருவேளை நார்மல் ஸ்கின்னுக்கு ஹெவி மேக்கப் போட்டா, சருமம் வறண்டுடும்.

நார்மல் ஸ்கின், அதோட இயற்கைத் தன்மை மாறாமல் இருக்கறதுக்கு பராமரிப்பு அவசியம். அப்படி பராமரிக்காம விட்டா, அதிகபட்ச வறண்ட சருமமாவோ அல்லது அதிகபட்ச எண்ணெய்ப் பசை சருமமாவோ மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கு. தினமும் முகத்தை 3 - 5 முறை கழுவணும். இரவு சி.டி.எம் முறையை... அதாவது, க்ளென்ஸர், டோனர், மாய்ஸ்ச்சரைசர் முறையைக் கட்டாயம் கடைபிடிக்கணும்.

சருமத்தில் உள்ள இறந்த செல்களை மாதம் ஒரு முறை அகற்றலைனா, சருமம் வறண்டு பொலிவிழந்துடும். இதுக்கு ஃப்ரூட் ஃபேஷியல், ஹெர்பல் ஃபேஷியல் இல்லைனா... அரோமா ஃபேஷியல் செய்றது அவசியம். சில வகை ஃபேஷியல், அதாவது... கோல்டு ஃபேஷியல் போன்றவை நார்மல் ஸ்கின்னை வறண்டு போகச் செய்துவிடும். கோகோ பட்டர் ஃபேஷியல், ஆய்லியாகவும் மாத்திடும். அதனால இதுபோன்ற ஃபேஷியலை தவிர்க்கறது நல்லது.

ஃபேஷியல் செய்யுறப்ப ஈரப்பதம் மற்றும் எண்ணெய்த் தன்மை மிதமா இருக்கும் மசாஜ் க்ரீம்களை பயன்படுத்தணும். மசாஜ் க்ரீமில் கெரேனியம் ஆயில் (Geranium oil) ரெண்டு சொட்டு, கேமொமைல் ஆயில் (Chamomile oil) ரெண்டு சொட்டு கலந்து மசாஜ் பண்ணினா, நார்மல் சருமத்தின் இயற்கைத் தன்மை மாறாமல் பாதுகாக்கலாம்.

வெயிலிலிருந்து பாதுகாக்கறதுக்கு சன் ஸ்கிரீன் (குறைந்த நேரம் வெயிலில் வேலை செய்பவர்களுக்கு) அல்லது சன் ப்ளாக் (அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்களுக்கு) அவசியம். பெஸ்ட் காம்பினேஷனான டைட்டானியம் - டை - ஆக்ஸைடு மற்றும் ஜின்க் கலந்துள்ள தரமான சன் ஸ்க்ரீன் அல்லது சன் ப்ளாக் பரிந்துரைக்கத்தக்கது. நார்மல் சருமத்துக்கு ஆய்லியாக உள்ள க்ரீம் பேஸ்டு சன்ஸ்க்ரீனைவிட, அக்வா அல்லது வாட்டர் பேஸ்டு லோஷன் வடிவில் உள்ள சன் ஸ்கிரீன் அல்லது சன் ப்ளாக்தான் பயன்படுத்தணும்.

தினமும் நிறைய தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ள காய்கறி, பழங்கள் சாப்பிடுவதும், வால்நட், பாதாம், ப்ளூ பெர்ரி (பெரிய பழக் கடைகளில் கிடைக்கும்), செர்ரி, தக்காளி, புரூக்கோலி, மஞ்சள் பூசணி சாப்பிடுவதும் சருமத்துக்கு பிங்க் நிறம் மற்றும் பளபளப்பை கொடுக்கும். மருத்துவரின் ஆலோசனையோடு தினசரி, சாலமன் (Salomon) மீன் எண்ணெய் மற்றும் விட்ட மின்-சி

பாரம்பரியம் VS பார்லர் - 9

மாத்திரையும் எடுத்துக்கலாம்.''

பளீரிடும்...

'நார்மல் ஸ்கின்’ பராமரிப்புக்கு கீதா அஷோக் தரும் டிப்ஸ்...

''இது வீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஸ் பேக்... மூன்று கிவி பழங்களை மிக்ஸியில் அரைத்து, இரண்டு ஸ்பூன் திக்கான தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு 10 - 15 சொட்டுக்கள், ஒரு டீஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றைக் கலந்து, பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். இந்தக் கலவையை தினசரி ஒரு ஸ்பூன் அளவில் முகத்தில் தடவி, மூன்று நிமிடம் மசாஜ் செய்து, அப்படியே ஊறவிட வேண்டும். பேக் காய்ந்ததும், குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட வேண்டும். இது, இறந்த செல்களை நீக்குவதுடன் சருமத்துக்கு நல்ல ரத்த ஓட்டத்தை அளித்து, நல்ல நிறம் மற்றும் பளபளப்பையும் கொடுக்கும். சருமத்தின் தன்மை மாறாமல் பாதுகாக்கும்.''