மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா

ஆக்ஸசரீஸ் ஆயிரம்!ரிமோட் ரீட்டா, படம் : இந்துலேகா.சி

எப்ப பார்த்தாலும் சும்மா.... ஒருத்தர் ரெண்டு பேர்கிட்ட பேசிப்பேசி, இந்த ரீட்டாவுக்கு போரடிச்சுப் போச்சு. நாட்டுல ஏகப்பட்ட சேனல்ஸ்... அதுல ஏகப்பட்ட புரோகிராம்ஸ்... அதுக்கு ஏகப்பட்ட ஆர்ட்டிஸ்ட்னு இருக்கறப்ப, எனக்கென்ன கவலை! ச்சும்மா ஒரு கலக்கு கலக்கிட்டோம்ல... ஏகப்பட்ட பேர்கிட்ட பேசி! அவங்ககிட்ட கறந்த கதையையெல்லாம் இங்க கொட்டியிருக்கேன்... புடிச்சுக்கோங்க, படிச்சுக்கோங்க!

பர்ணா, தன்னோட சீரியல் கேரக்டருக்கு ஏத்த மாதிரி காஸ்ட்யூம்ஸ் மற்றும் ஆக்ஸசரீஸ் வாங்க ஷாப்பிங் கிளம்பிட்டாங்க... பல ஆயிரங்கள் அவுட் ஆயிடுதாம். தேவைப்பட்டா மாசத்துக்கு ஒரு முறைனு பெருசா ஒரு ஷாப்பிங் முடிச்சுடுவாங்களாம். ஒரு முறை பயன் படுத்தின உடைகளோ... நகைகளோ ரிப்பீட் ஆகாம பார்த்துக்கற சபர்ணா, ஏற் கெனவே பயன்படுத்தின ஆக்ஸசரீஸை, தன்கூட சின்னச் சின்ன ரோல்கள் பண்ற, வளர்ந்து வரும் புது ஆர்ட்டிஸ்ட்களுக்கு கொடுத்துடுவாங்களாம்.

சம்மர் கேப்ல, மேடம் இப்ப கோவா ட்ரிப்ல இருக்காங்க. (நாம 'கோவா’ படம்தான் பார்க்க முடியும்!)

கேபிள் கலாட்டா

மோட்டார் மஹா!

மஹாலஷ்மி ரெண்டு, மூணு மாசத்துக்கு ஒரு முறை தன்னோட காரை மாத்துறதை பழக்கமாவே வெச்சுருக்காங்க. ரொம்ப தீவிரமா இந்தப் பழக்கத்தை, மூணு வருஷமா கடைப்பிடிச்சுட்டு வர்றாங்க. இதுவரைக்கும் அவங்க வெச்சிருந்த கார்லயே, அவங்களுக்கு ரொம்ப பிடிச்சது... டொயோடா செரா. அதாங்க... 'படையப்பா’ படத்துல ரம்யாகிருஷ்ணன் வெச்சுருப்பாங்களே, அதேமாதிரி கார். ஆனா, எவ்வளவுதான் பிடிச்சாலும், சென்டிமென்ட் எல்லாம் பார்க்காம காரை மாத்திட்டே இருப்பாங்க. இப்ப மேடம் வெச்சுருக்கிற கார்... பி.எம்.டபுள்யூ. (மஹா பேபி, ரஜினி சாருக்கும் 'செரா’ தான் ஃபேவரைட் கார்!) 'மோட்டார் விகடன்' வாசகியா இருப்பாங்களோ?!

ஷூ மகேஷ்!

விஜய் டி.வி. 'நடுவுல கொஞ் சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்’ ஈரோடு மகேஷ§க்கு ஒரு வித்தியாச மான பழக்கம். புடவை, வாட்ச், இல்லைனா கம்மல் இப்படி ஏதாச் சும் ஒரு அயிட்டம்ல நிறைய கலெக்ஷன் வெச்சுக்கறதை ஒரு ஹாபியாவே வெச்சுருப்பாங்க பொண்ணுங்க. சார்... எக்கச்சக்கமா

கேபிள் கலாட்டா

ஷூஸ் கலெக்ஷன் வெச்சுருக்கார். (ஷ்ஷ்ஷ்ஷூ!)

தேவ ரகசியம்!

தேவதர்ஷினி, தன்னோட 'ஐ போன்’ல கிட்டத்தட்ட 70 இசைஞானி பாடல்களை வெச்சிருக்காங்க. அவ்வளவும் 80’ஸ் பாடல்கள். எப்ப மூடு அவுட் ஆனாலும், ஐ போனே துணை... மேடத்துக்கு. அதேமாதிரி ஷெனாய் நகர், சாயிபாபா கோயிலுக்கு அடிக்கடி போறதும், தேவதர்ஷினியோட டென்ஷன் ஃப்ரீ ரகசியம். அப்பாவும் அம்மாவும் காலேஜ் பிரின்சிபால்ஸ், அக்கா லெக்சரர்னு ஒரே படிப்ஸ் குடும்பத்துல பொறந்துட்டு, நாம மட்டும் எதுக்கு சும்மா இருக்கணும்னு, பி.காம்., படிச்சுட்டு ஏ.சி.எஸ் சேர்ந்திருக்காங்க தேவதர்ஷினி. ஷூட்டிங்கையும் படிப்பையும் ஒருசேர சமாளிக்க முடியாம, படிப்புக்கு சின்னதா 'டாட்டா’ சொல்லிட்டு, மறுபடி எம்.காம்., அதுக்கப்புறம் அனிமேஷன் அண்ட் கிராஃபிக்ஸ், எம்.எஸ்சி., சைக்காலஜி முடிச்சிருக்காங்க. அடுத்தது... டிப்ளோமா இன் கவுன்சலிங் சேரப் போறாங்களாம். (அவங்கள மாதிரியே, அவங்க படிப்பும் வளர்ந்துட்டே போகுதே... அடடா ஆச்சர்யக்குறி!)

கேபிள் கலாட்டா

மகளிர் ஆட்சி!

'அரசியலுக்கும் பெண்களுக்கும் சம்பந்தம் இல்லை'ங்கற கருத்தை உடைக்கும் விதமா, 'புதியதலைமுறை' சேனல்ல 'மகளிரும் மக்களாட்சியும்’னு ஒரு புது நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2.30-க்கு ஒளிபரப்பாகுது. வழக்கமான 33% இட ஒதுக்கீட்டைத் தவிர, பரபரப்பா இருக்கும் இந்த தேர்தல் நேரத்துக்கு ஏத்த மாதிரி, ஆனா... எந்தக் கட்சியையும் சாராத பெண்களை, தினமும் ஒவ்வொரு கோணத்தில் அரசியல் பேச வைக்கிற வித்தியாசமான நிகழ்ச்சி இது.

பெண்களுக்கு எந்த அளவுக்கு அரசியல் விழிப்பு உணர்வு தேவைப்படுது, ஏன் பெண்களின் பங்கு அரசியலில் அதிகரிக்கணும், பெண்கள் அரசியலுக்கு வந்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும்... இப்படி பல தலைப்புகளில் மாணவிகள், குடும்பத் தலைவிகள், விளையாட்டு வீராங்கனைகள்னு பலதரப்பு பெண்களும் அரசியலை அலசுறது... நல்லாவே விழிப்பு உணர்வூட்டும் விதமா

கேபிள் கலாட்டா

இருக்குனு பேச்சா இருக்கு.

உங்களுக்கு... . அரசியல் தாகமும், தாக்கமும் இருக்கா? உள்ள பெண்கள், தவறவிடக்கூடாத ஒரு நிகழ்ச்சி!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  

கேபிள் கலாட்டா

 150

ஜூஸி நிகழ்ச்சி!

''இந்தியா இந்த வாரம் என்ற நிகழ்ச்சி, பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கும், ஞாயிறு காலை 10 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இந்தியா முழுவதும் நடைபெற்ற விதம்விதமான செய்திகள், கோர்ட்டுகளில் நடைபெற்ற விநோத வழக்குகள் என நிறைய விஷயங்கள் இடம்பெறுகின்றன. நிகழ்ச்சித் தொகுப் பாளரின் ஆங்கில கலப்பில்லாத தெளிவான தமிழ் உச்சரிப்பு மிக அருமை. பேப்பர் படிக்க நேரமில் லாதவர்களுக்கு, மிகமிக பயனுள்ள நிகழ்ச்சி என்றால் மிகையில்லை. பொதிகை தொலைக் காட்சிக்கு 'ஜே’ போடலாம்'' என்று பெருமையோடு பேசுகிறார் மயிலாப்பூரில் இருந்து சீனு.சந்திரா.

இணைத்தோம்... இணைப்போம்...

''அது ஏர்செல் விளம்பரம். நன்றாகப் படிக்கும் கிராமத்துப் பையன், நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகனாக இருக்கிறான். சூர்யாவை நேரில் பார்த்து பேசவேண்டும் என்கிற ஆதங்கத்தோடு படுத்து உறங்குகிறான். பருத்திப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த அந்த பையனின் ஆசையை நிறைவேற்ற, ஏர்டெல் உதவியாக இருப்பதை அழகாகக் காட்டுகிறார்கள். 'இணைத்தோம்... இணைக்கின்றோம்... இணைப்போம்...’ என்று சொல்வது, யதார்த்தமாக உள்ளது'' என்று நெகிழ்கிறார் திருநெல்வேலியில் இருந்து ஆர்.ஜெயலட்சுமி.

உறுத்தலான வசனம்!

''சினிமாவில் பிரபலமான சில வசனங்களைப் பேசி, பொதுமக்களை நடிக்க வைக்கும். 'கொஞ்சம் நடிங்க பாஸ்’ நிகழ்ச்சி ஆதித்யா டி.வி-யில் ஒளிபரப்பாகிறது. சுவாரஸ்யமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியே என்றாலும், சமீபத்தில் 'நாம வாழணும்னா எத்தனை பேரை வேணாலும் கொல்ல லாம், தப்பில்லை’ என்ற வசனத்தை, பத்து வயது குழந்தைகளிடம் சொல்லி பேச வைத்தது மிகவும் உறுத்தலாக இருந்தது. எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லும் வசனங்கள் சினிமாவில் உள்ளபோது இதுபோன்ற எதிர்மறை சிந்தனையைத் தூண்டும் வசனங்களைத் தவிர்க்கலாமே'' என்று வேண்டுகோள் விடுக்கிறார் திருமுடிவாக்கத்தில் இருந்து லதா சுந்தரராஜன்.