Published:Updated:

பாரம்பரியம் Vs பார்லர் - 11

எண்ணெய் வழியும் முகம்... இனி பளீரிடும்!இந்துலேகா.சி

ல்லோருக்கும் ஒரேமாதிரியான ஸ்கின் (தோல்) அமைவதில்லை. பொதுவாக, மனிதர்களின் ஸ்கின், ஐந்து வகைகளாக பிரித்தறியப்படுகின்றன. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொருவிதமான பராமரிப்பு தேவைப்படும். இத்தகைய பராமரிப்பினை பியூட்டி பார்லர் மற்றும் பாரம்பரிய முறைகளில் எப்படி மேற்கொள்வது என்பது குறித்து தொடர்ந்து இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இதுவரை நான்கு ஸ்கின் வகைகளுக்கான பார்லர் மற்றும் பாரம்பரிய பராமரிப்பு முறைகள் பற்றிப் பார்த்திருக்கிறோம். இந்த இதழில் இடம்பிடிக்கிறது... 'காம்பினேஷன் ஸ்கின்' எனப்படும் தோல் வாய்த்தவர்களுக்கான பராமரிப்பு.

பொதுவாக, 'காம்பினேஷன் ஸ்கின்' என்பது 'டி' ஸோன் என்று சொல்லப்படும். அதாவது, நெற்றி, மூக்கு, தாடை வரையிலான பகுதியை இது குறிக்கும். இரண்டு கன்னப் பகுதியை 'சி' ஸோன் என்பார்கள். தாடையிலிருந்து கழுத்து வரையிலான பகுதியை 'ஒய்' என்பார்கள்.

பாரம்பரியம் Vs பார்லர் - 11

பார்லர்

முதலில், 'பார்லர் பராமரிப்பு' பற்றி பேசுகிறார்... 'க்ரீன் டிரெண்ட்ஸ்’ சீனியர் டிரெயினர் பத்மா.

''காம்பினேஷன் ஸ்கின் உள்ளவங்களுக்கு, 'டி ஸோன்'னு சொல்லப்படுற நெற்றி, மூக்கு, தாடை பகுதி... எண்ணெய்ப் பிசுக்கோடும், பருக்களோடும் இருக்கும். கன்னங்கள் வறண்டு, சுருக்கங்களோடு இருக்கும். சிலருக்கு அப்படியே நேரெதிரா... 'டி’ ஸோன் வறண்டும், கன்னங்கள் எண்ணெய்ப் பிசுக்குடனும் இருக்கும். பார்லர் ட்ரீட்மென்டுக்கு வரும்போது இதை கவனிச்சி, அதுக்குத் தகுந்த ட்ரீட்மென்ட் கொடுப்போம்.

பாரம்பரியம் Vs பார்லர் - 11

எண்ணெய்ப் பிசுக்கு அதிகமுள்ள காம்பினேஷன் ஸ்கின் வகையினருக்கு... பேர்ல் ஃபேஷியல் நல்ல ரிசல்ட் தரும். எப்பவும்போல முகத்தை கிளென்ஸிங் மில்க் கொண்டு சுத்தம்செய்து, மைல்ட் ஸ்கிரப் பயன்படுத்தி இறந்த செல்களை நீக்குவோம். முகப்பரு இருக்கறதால ஆய்லி ஸ்கின்னுக்கு மாசாஜ் கொடுக்கக் கூடாது, அப்படிக் கொடுத்தா, பரு அதிகமாயிடும். ஸ்கிரப் முடிச்சதும், நீராவி கொடுத்து, பிளாக் அண்ட் வொயிட் ஹெட்ஸை நீக்குவோம். தொடர்ந்து ஹை ஃப்ரீக்வன்ஸி ட்ரீட்மென்ட் கொடுப்போம். இது முகப்பரு உருவாகக் காரணமா இருக்கிற பாக்டீரியா போன்றவற்றை அழிச்சிடும். அடுத்த நாளே முகத்துல எண்ணெய்ப் பிசுக்கு குறைஞ்சி, முகப்பருக்களும் மறைய ஆரம்பிக்கும். வறட்சி மிகுந்த காம்பினேஷன் ஸ்கின் உள்ளவங்களுக்கு... சாக்லேட், கோல்டு போன்ற ஃபேஷியல் பண்றது நல்லது!''

பாரம்பரியம்

பாரம்பரிய முறையிலான பாராமரிப்புப் பற்றி பேசுகிறார்... 'கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக், கீதா அஷோக்.

பாரம்பரியம் Vs பார்லர் - 11

''எல்லா வகையான சருமத்துக்கான தினசரி பராமரிப்பு போலத்தான், காம்பினேஷன் சருமத்தையும் பராமரிக்கணும். காலை மற்றும் ராத்திரியில... தரமான ஹெர்பல் க்ளென்ஸிங் மில்க், டோனர், மாய்ஸ்ச்சரைஸர் இதெல்லாம் பயன்படுத்தி முகத்தை  க்ளீன் பண்ணுங்க. பிறகு... 'அஸ்ட்ரின்ஜென்ட்' (Astringent) லோஷனை (இது, மெடிக்கல் ஷாப், சூப்பர் மார்க்கெட், காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும்) பஞ்சில் தொட்டு, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை பண்ணணும். இதை, கொஞ்சம் வேகமா விசிறியடிக்கற மாதிரி அப்ளை பண்ணணும். அப்பதான், சருமத் துவாரங்கள் திறந்து, அதிலிருக்கும் அழுக்கு வெளியேறுறதோட... மறுபடியும் துவாரங்கள் மூடிக்கொள்ளும்; 'டி’ ஸோனில் உள்ள எண்ணெய்ச் சுரப்பு மட்டுப்பட்டு, முகப்பருவும் வராது.

வேலைக்குப் போறவங்களோட அவசர நேரத்துக்கு இந்த மாதிரி ரெடிமேட் ட்ரீட்மென்ட்ஸ் ஓ.கே! வீட்டுல இருக்கிறவங்களுக்கு நேச்சுரல் 'அஸ்ட்ரின்ஜென்ட்' எப்படி செய்யறதுனு சொல்றேன். 100 மில்லி மினரல் வாட்டரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வெச்சி, அதில் சாமந்திப்பூ (marigold) இதழ்களை ஒரு கைப்பிடி அளவு போட்டு, உடனே பாத்திரத்தை மூடி, அடுப்பை நிறுத்திடணும். இதை ஒரு நாள் முழுக்க திறக்காம ஊறவிட்டா... சாமந்திப்பூவுல இருக்கற முழு மருத்துவக் குணமும் அதில் இறங்கிடும். இந்த சாமந்தி டிகாக்ஷன்ல 100 மில்லி எடுத்து, டீ டிகாக்ஷன் 10 மில்லி, சர்க்கரை 5 டீஸ்பூன் சேர்த்து கலந்தா... இயற்கை 'அஸ்ட்ரின்ஜென்ட்' ரெடி. இதை ஒரு பாட்டில்ல ஊத்தி ஃப்ரிட்ஜில் வெச்சிட்டு, தினமும் பயன்படுத்தலாம். இதுல இருக்கும் சாமந்தி 'டி’ ஸோனுக்கும், சர்க்கரை 'சி’ மற்றும் 'ஒய்’ ஸோனுக்கும் பலன் தரும்.

காம்பினேஷன் சருமத்தினருக்கு முகத்துல 'ராடிக்கல்' வரும். இதைத் தடுக்க, ஆன்டி ஆக்ஸிடன்ட் தேவை. மருத்துவரோட பரிந்துரைப்படி... பத்து வயசுல இருந்தே விட்டமின்-சி மாத்திரையை எடுத்துக்கிட்டா, ராடிக்கல் வராம தடுக்கலாம்!''

பாரம்பரியம் Vs பார்லர் - 11

அடுத்த இதழ்ல சென்ஸிடிவ் ஸ்கின் பற்றி பார்ப்போம்...

மிளிரும்...

கீதா அஷோக் தரும் டிப்ஸ்...

பூவிலாங்கிழங்கு, கார்போக அரிசி, விளாமிச்சை வேர், காய்ந்த ஆவாரம் பூ அல்லது பொடி, அதிமதுரம் (இவையெல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும் இதனுடன் உலர்ந்த ரோஜா இதழ், கடலைப்பருப்பு இவற்றில் தலா 50 கிராம் சேர்த்து அரைத்து பொடி செய்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். தினமும் இதில் அரை ஸ்பூன் எடுத்து பன்னீருடன் கலந்து முகத்தில் பூசி, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இந்த பேக், காம்பினேஷன் சருமத்தில் ஏற்படும் அனைத்துவிதமான பாதிப்புகளுக்கும் சிறந்த நிவாரணி.