உணவு ஸ்பெஷல்
Published:Updated:

''வரத்தை சாபமாக்கிக் கொள்ளாதீர்! ''

செல்நெட் 2014

சோறு, தண்ணீர் இல்லாமல்கூட இருப்பார்கள்... செல்போன், இன்டர்நெட் இல்லாமல் இருக்க மாட்டார்கள் இன்றைய இளம்தலைமுறையினர். இந்தத் தொழில்நுட்ப சார்பு காரணமாக விளையும் நன்மைகளையும் தீமைகளையும் கல்லூரி மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த அவள் விகடன் தொடங்கியிருக்கும் முயற்சி, 'செல்நெட் - 2014!’

சென்னை, அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில், ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இருநாட்கள் நடைபெற்ற 'செல்நெட் 2014’ நிகழ்ச்சியின் முதல் நாள், ரங்கோலி, கவிதை, கட்டுரை, ஓவியம், மௌன நாடகம், நடனம், ஃபேஷன் ஷோ என ஏழு பிரிவுகளில் மாணவிகளுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டன. மறுநாள் நிகழ்வில் முதல் விருந்தினராகப் பேசிய 'சாஃப்ட் ஸ்கில்' டிரெயினர் ரேகா ஸ்ரீநிவாசன், ''வேலைக்காக கம்பெனிகளில் ஏறி இறங்கிய காலம் போய், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து, வாய்ப்பைப் பெறும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய ஆன்லைன் வேலைகளும் வந்துவிட்டன. ஆனால், வேலை மற்றும் ஆன்லைன் வேலைகளுக்காக விண்ணப்பிக்கும்போது ஏதாவது கட்டணம் வசூலித்தால், பெரும்பாலும் அது ஏமாற்று நிறுவனம் என்பதை உணருங்கள். கல்லூரிப் படிப்பை முடித்துதான் வேலை தேடவேண்டும் என்று நினைக்காமல், படிக்கும்போதே தேடத் தொடங்குங்கள்... வசப்படுத்துங்கள்!'' என்று அக்கறையோடு சொன்னவர், வேலை தேடல் பற்றி விரிவாக பேசினார்.  

''வரத்தை சாபமாக்கிக் கொள்ளாதீர்! ''

சென்னை, 'சைபர் செக்யூரிட்டி’ நிறுவனர் ராமமூர்த்தி பேசுகையில், ''தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்திலிருக்கிறது. அதேசமயம், இதில் ஆபத்துகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக, பெண்களைக் குறிவைக்கும் சதி வேலைகள் அதிகம் என்பதால், இணைய உலகில் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்துவைக்க வேண்டும். இணையம் சார்ந்த ஒவ்வொரு நடவடிக்கையிலும் எச்சரிக்கை உணர்வு மிக அவசியம்'' என்று எச்சரிக்கைகளைத் தந்தவர், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இன்னும் பல விஷயங்களையும் பகிர்ந்தார்.

''வரத்தை சாபமாக்கிக் கொள்ளாதீர்! ''

செல்போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டால் மக்களிடம் பெருகிவரும் மனநல பாதிப்புகளைப் பட்டியலிட்ட மனநல மருத்துவர் அபிலாஷா, ''இப்போது புதிதாகப் பரவி வரும் செல்ஃபி மற்றும் செக்ஸ்டி டிரெண்ட் காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளாகி பாதிக்கப்படுபவர்கள் பலர். ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்யும் ஸ்டேட்டஸுக்கு எதிர்பார்த்த லைக்ஸ், கமென்ட்ஸ் வரவில்லை என்பதால் மனவேதனை அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் கொடுமையை என்னவென்று சொல்ல?! ஒரு பெண்ணின் புகைப்படம், ஓர் ஆணிடம் கிடைத்தால், அது அந்த ஆணிடம் மட்டும்தான் இருக்கும் என்று நினைப்பது தவறு. நிச்சயம் அது அவனைச் சார்ந்த பலருக்கும் பகிரப்படும். அதனால் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, போனில் பேசும்போது நீங்கள் ஒரு பெண் என்பதை எக்காரணம் கொண்டும் மறந்துவிட்டு பேசாதீர்கள். தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களுக்கு சட்டங்களும், தண்டனைகளும் இருந்தாலும், அவையெல்லாம் நாம் இழந்ததை எப்போதும் திருப்பித் தராது. செல்போன் இல்லாமலும் நம்மால் வாழ முடியும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்... ஆனால், அடிமை ஆகாதீர்கள்!'' என்றெல்லாம் அறிவுரைகளை வழங்கினார்.

''வரத்தை சாபமாக்கிக் கொள்ளாதீர்! ''

தொடர்ந்து, 'செல்போன் மற்றும் இன்டர்நெட்... வரமா, சாபமா?’ என்கிற தலைப்பில் மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடத்தப்பட, நடுவராகப் பொறுப்பேற்றார் பட்டிமன்றப் பேச்சாளர், பேராசிரியர் பர்வீன் சுல்தானா. ''பக்கத்து வீட்டுக்காரர்களின் பெயர்களைக்கூடத்

''வரத்தை சாபமாக்கிக் கொள்ளாதீர்! ''

தெரிந்துகொள்ளாத நாம், முகநூலில் உலகின் பல மூலைகளில் இருந்தும் யார் யாரையோ நண்பர்களாக இணைத்துக்கொள்கிறோம் என்பது எவ்வளவு முரண்! செல்போன் மற்றும் இன்டர்நெட் என்பது வரம்தான். ஆனால், அது இன்றைக்கு தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதால்தான் சாபமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. வரங்களைச் சாபமாக நாம்தான் மாற்றிக்கொண்டோம். தவறு நம்மேல்தானே தவிர, தொழில்நுட்பத்தின் மீது அல்ல'' என்று தீர்ப்பு சொன்னார் பர்வீன் சுல்தானா.

அதன்பின், முதல் நாள் நடந்த போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு அவள் விகடன் சார்பாக பரிசுகள் வழங்கப்பட, ''தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நீங்க சொன்ன விழிப்பு உணர்வு விஷயங்களை எல்லாம் மனசில் ஏத்திக்கிட்டோம். தேங்க்ஸ்!'' - கூட்டம் கூட்டமாக வந்து நன்றி தெரிவித்துச் சென்றனர் கேர்ள்ஸ்.

- சா.வடிவரசு, கே.அபிநயா  படங்கள்: தே.தீட்ஷித்