மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா! - 'புள்ளி’ விவரங்கள்!

சின்னத்திரைரிமோட் ரீட்டா

தெய்வமகள் (சன் டி.வி)

கேபிள் கலாட்டா! -  'புள்ளி’ விவரங்கள்!

பெயர்: வாணி போஜன்.

சீரியலில்: சத்யா (மேடம், வாணினு கூப்பிடறதை விட சத்யானு கூப்பிட்டாதான் உடனே திரும்பி பார்ப்பாங்களாம்)

பிறந்த ஊர்: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி.

பிறந்த தினம்: அக்டோபர், 28.

நடிப்பதற்கு முன்: கிங்ஃபிஷர் ஏர்ஹோஸ்டஸ்.

முதல் கேமரா அனுபவம்: விளம்பரப் படங்கள்.

பிடித்த சீரியல் கேரக்டர்: நடிக்கும் ஒவ்வொரு கேரக்டருமே பிடித்து செய்தாலும், தெய்வமகள் கேரக்டர் சம்திங் ஸ்பெஷல். அதனாலதான் எல்லாருக்குமே சத்யா கேரக்டர் ரொம்ப பிடிக்குது.

ஊட்டியில் பிடித்த இடம்: ஊட்டி மொத்தமே பிடிக்கும். வெதர் எப்பவுமே ஜில்லுனு இருக்கு இல்ல (நீங்ககூட எப்பவுமே ஜில்லுனு ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க).

சென்னையில் பிடித்த இடம்: பெசன்ட் நகர் (போச்சு, சொல்லிட்டீங்களா... வர்ற சண்டே எப்பவும் இல்லாத கூட்டம் பெசன்ட் நகர்ல குவியப் போகுது டோய்!)

திறமை: டிராயிங், டான்ஸ் (ஒரு பெயின்ட்டிங்கே... பெயின்டிங் செய்கிறதே. அடடே!)

கனவு: கனவின் மேல் நம்பிக்கை கிடையாது. பிடித்த விஷயத்தை மட்டும் செய்வேன்.

மூன்று முடிச்சு (பாலிமர் டி.வி)

பெயர்: தீபிகா சாம்ஸன்.

சீரியலில்: சீமா.

பிறந்தது: புனே.

பிறந்த தேதி: ஆகஸ்ட் 6

உயரம்: 5.2 அடி

நடிப்பதற்கு முன்: ஏர் ஹோஸ்டஸ்

அப்பா: ஆர்மி ஆபீஸர் (யப்பா!)

கேபிள் கலாட்டா! -  'புள்ளி’ விவரங்கள்!

நெஞ்சம் பேசுதே (பாலிமர் டி.வி)

பெயர்: அகங்ஷா சிங்.

சீரியலில்: மீனா.

பிறந்தது: ஜெய்ப்பூர்.

பிறந்த தேதி: ஜூலை முப்பது.

படிப்பு: ஃபர்ஸ்ட் இன் யுனிவர்சிட்டி, ஹெல்த் சயின்ஸில்... ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்றாவது இடம் (செம பிரில்லியன்ட் போல.!

திறமை: டான்ஸ், ஆக்டிங், மியூசிக்.

பிடித்த உடை: கேஷ§வல் அண்டு வெஸ்டர்ன் உடைகள். டெனிம்ஸ், ஷார்ட்ஸ், ஸ்கர்ட்ஸ், ட்யூனிக், சல்வார்

நடிப்பதற்கு முன்: தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்.

கேபிள் கலாட்டா! -  'புள்ளி’ விவரங்கள்!

என் கணவன் என் தோழன் (விஜய் டி.வி)

பெயர்: தீபிகா சீங்.

சீரியலில்: சந்தியா.

பிறந்த ஊர்: டெல்லி (மேடம், ராஜ்புத்ர குடும்பத்தை சேர்ந்தவர்.)

படிப்பு: பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் இன் மார்க்கெட்டிங்.

நடிப்பதற்கு முன்: படிப்பு முடித்ததும் அப்பாவின் கார்மென்ட் கம்பெனி மேனேஜ்மென்ட் (துணிக்கடையா, அதான் சீரியல்ல, கலர் கலரா பொடவை கட்றீங்களா... ஹும், கலக்குங்க!)

பிறந்த தினம்: ஜூலை 26.

கணவர்: என் கணவன் என் தோழன் சீரியலின் டைரக்டர் ரோஹித் ராஜ்.

கேபிள் கலாட்டா! -  'புள்ளி’ விவரங்கள்!

அரங்கேற்றம் (புதுயுகம் )

பெயர்: சிவரஞ்சனி

சீரியலில்: விஜயலட்சுமி.

பிறந்த இடம்: சென்னை.

பிறந்த தேதி: மே 5

பிடித்த இடம்: பெசன்ட் நகர். (அட இந்த சீரியல் பொண்ணுங்களுக்கு ஏன் பெசன்ட் நகர் பிடிக்குதோ தெரியல)

முதல் கேமரா அனுபவம்: ஜெயா டி.வியில், பிசினஸ் ஷோ ஆங்கர்.

நடித்ததில் பிடித்தது: அரங்கேற்றம் ஹீரோயின்,  ஆண் ஆவி புகுந்த பெண் கேரக்டர். (என்னது ஆவியா...எஸ்...கே...ப்)

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா! -  'புள்ளி’ விவரங்கள்!

 150

சல்யூட்!

''மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு 'நொடிக்கு நொடி அதிரடி’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.  அதில், 'நாம் அறிந்த தமிழ்ச்சொற்களுக்கு, அறிந்திராத தமிழ் அர்த்தங்கள் இத்தனை உள்ளனவா?’ என வியக்கும் அளவுக்கு தமிழ் அகராதி புரட்டிப் புரட்டிக் காட்டப்படுகிறது. போட்டி போட்டிக்கொண்டு சீரியல்களை மட்டுமே காட்டிக்கொண்டிருப்பதற்கு நடுவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பும் மக்கள் தொலைக்காட்சிக்கு ஒரு சல்யூட்'' என்று பாராட்டுகிறார் சேலம், அம்மாப்பேட்டையில் இருந்து சுமதி.

இப்படியா பேசுவது..?

''விஜய் டி.வி-யில் சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பான 'காபி வித் டி.டி.' நிகழ்ச்சி யில், ஒரு நடிகையோடு பேசிக்கொண்டிருந்தார் தொகுப்பாளர், 'டி.டி' எனும் திவ்யதர்ஷினி. அப்போது, ஓரிடத்தில்... 'நீ ஒரு ஆணியே புடுங்க வேணாம்’ என்று டி.டி. சொன்னது, என்னை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனிச்சிறப்புமிக்க ஒரு தொலைக்காட்சி நிறு வனம் இதையெல்லாம் கவனித்து, எதிர்காலத்திலாவது இப்படியெல்லாம் கொச்சையாக பேசுவதைத் தவிர்க்க முயற்சிக்கலாமே!'' என்று மிகவும் வேதனைப்படுகிறார் சென்னை, கே.கே.நகரில் இருந்து சங்கீதா.

திருநங்கைகளின் சிம்மாசனம்!

''பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'காற்று சிம்மாசனம்’ என்ற நிகழ்ச்சியில் முழுக்கமுழுக்க திருநங்கைகள் பங்கேற்றனர். அதில் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும்போது, தங்களின் திறமை, சமூகப்பணி என பல்வேறு முகங்களை அவர்கள் காட்டியபோது, நெஞ்சம் நெகிழ்ந்தது. அதேசமயம், தம் பிறப்பின் காரணமாக பட்ட கஷ்டங்கள் பற்றி சொன்னபோது, நெஞ்சு ரணமானது'' என்று மகிழ்ச்சியையும், வேதனையையும் ஒருசேர பகிர்கிறார் சென்னை, மயிலாப்பூரில் இருந்து சீனு.சந்திரா.