அவள் 25... அவர்கள் 25! - ஒரு சர்ப்ரைஸ் திட்டம் - சொந்தக்காலில் நின்று ஜெயிக்க ஆசைப்படுபவரா நீங்கள்?

‘சுயமா தொழில் பண்ணணும்; சொந்தக்கால்ல நின்னு ஜெயிக் கணும்’ என்ற கனவுடன், அதற்கான வழிகாட்டுதல்கள் கிடைக்காமல் இருப்பவர்கள் பலர்
‘பசி வந்த பிறகு, விதைகளை நடுவது அர்த்தமற்றது!’ எனும் ஜப்பானிய பழமொழி, தொழில்துறையில் முன்னேற நினைப்பவர் களுக்குச் சிறந்த உதாரணம். இதன்படி, தெளிவான இலக்குடன் படித்து முடித்ததுமே சுயதொழிலில் களமிறங்குபவர்கள் மற்றும் தங்கள் வேலையிலிருந்து விலகி, தொழில்முனைவோராக புதிய பாய்ச்சலைத் தொடங்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இதனால், தனிநபர் வளர்ச்சியுடன், நாட்டின் பொருளாதார பலமும் கூடுவது ஆரோக்கியமான வளர்ச்சிக்கான கண்கூடான சான்று!
‘சுயமா தொழில் பண்ணணும்; சொந்தக்கால்ல நின்னு ஜெயிக் கணும்’ என்ற கனவுடன், அதற்கான வழிகாட்டுதல்கள் கிடைக்காமல் இருப்பவர்கள் பலர். அவர்களின் கனவுகளை நிறைவேற்ற கைகொடுப்பதுதான், ‘அவள் 25... அவர்கள் 25!’ திட்டம். வருங்கால பெண் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவள் விகடனின் 25-ம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் குறித்த விவரங்களும் வழிகாட்டுதல் களும் கடந்த சில இதழ்களில் வெளியாகின. 03.01.2023 தேதியிட்ட அவள் விகடனில், இந்தப் புதிய திட்டத்துக்கான விண்ணப்பப் படிவம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து ஏராளமான விண்ணப் பங்கள் எங்களுக்கு வந்துள்ளன. அவை பரிசீலனையில் உள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப ஜனவரி 31-ம் தேதி கடைசி தினமாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தக் காலக் கெடுவை நீட்டிக்குமாறு வாசிகளிடமிருந்து வேண்டுகோள்கள் வந்தன. எனவே, இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை அனுப்பு வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோராகும் கனவுடன் இருப் பவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க லாம். அந்த விண்ணப்பங்களும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
விகடன் இணையதளத்தில் இடம்பெற்ற ‘அவள் 25... அவர்கள் 25!’ திட்டத்துக் கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய https://bit.ly/3IdP5z1 லிங்க்கில் க்ளிக் செய்யவும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி
‘அவள் 25... அவர்கள் 25!’ அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.
இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி: avalvikatan@vikatan.com