என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அவள் பதில்கள் - 9 - ஹோம் பேக்கிங் பிசினஸ்... இன்றைய சூழலில் கைகொடுக்குமா?

அவள் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் பதில்கள்

- சாஹா

எனக்கு பீரியட்ஸ் நாள்களில் கடுமையான அடிவயிற்றுவலி வருகிறது. என் தோழி இந்த நாள்களில் வலியைக் கட்டுப்படுத்த ஆசனவாயில் வைத்துக்கொள்ளும் வலி நிவாரணி உபயோகிக்கச் சொல்கிறாள். சாதாரண வலி நிவாரணிக்கும் ஆசனவாயில் வைக்கும் மாத்திரைக்கும் என்ன வித்தியாசம்?

- கே.அனுபமா, கோவை

சஃபி
சஃபி

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் குழந்தைகள்நல மருத்துவர் சஃபி

உங்கள் தோழி குறிப்பிடுவதை ‘பெல்விக் பெயின் சப்பாசிட்டரி’ என்று சொல்வோம். கடுமையான இடுப்புவலி வரும்போது இதைப் பயன்படுத்த சிலருக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆசனவாய் வழியே வைப்பது, பிறப்புறுப்பின் வழியே வைப்பது என இதில் இரண்டு வகை இருக்கிறது.

என்னைக் கேட்டால் வாய்வழியே விழுங்கும் வலி நிவாரணியே இதைவிட சிறந்தது என்பேன். ஏனெனில், இந்த சப்பாசிட்டரி வகை மாத்திரைகளில் தூக்கத்தைத் தூண்டும் ‘டயாஸிப்பம்’ (Diazepam) எனப்படும் மருந்து கலந்திருக்கக்கூடும். எனவே, அதை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பயன்படுத்தினால் இடுப்பெலும்பு பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம்.

மாதவிடாய் நாள்களில் வரும் வலி சிலருக்கு மிக மோசமாக, தாங்க முடியாததாகத்தான் இருக்கும். அப்படி வலி அதிகரிக்கும்போது சரியான மருத்துவ ஆலோசனையை நாடுவதுதான் சிறந்தது. வலிக்கான காரணமறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதைத் தவிர்த்து தோழியோ, வேறு யாரோ சொல்கிறார் என்பதால் அவர்கள் பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளை உபயோகிப்பது ஆபத்தானது.

அவள் பதில்கள் - 9 - ஹோம் பேக்கிங் பிசினஸ்... இன்றைய சூழலில் கைகொடுக்குமா?

பொழுதுபோக்காக பேக்கிங் வகுப்பு போய் கேக், பிஸ்கட் செய்யக் கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்டதோடு சரி, அதைத் தொடரவில்லை. லாக்டௌனில் எனக்கு வேலை போய்விட்டது. ஹோம் பேக்கிங் பிசினஸ் ஆரம்பிக்கலாம் என்று ஒரு ஐடியா. தெருவுக்கு நான்கு பேக்கரிகள் வந்துவிட்ட இன்றைய சூழலில் என் முடிவு சரியா? என்னால் அதில் ஜெயிக்க முடியுமா? பிசினஸ் தொடங்கும் முன் நான் என்னை எந்தெந்த விஷயங்களில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்?

- சி.தனலட்சுமி, சென்னை-11

ஆனந்த்
ஆனந்த்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேக்கரி தொழில் ஆலோசகர் ஆனந்த்

லாக்டௌனுக்குப் பிறகு, ஹோம் பேக்கிங் ரொம்பவே பிரபலமாகியிருக்கிறது. அதனால் நீங்கள் எந்தத் தயக்கமும் இன்றி உங்கள் பேக்கிங் திறமையை வெளியே கொண்டுவரலாம். ஹோம் பேக்கிங்கும், பேக்கரி பிசினஸும் வேறு வேறு. பட்ஜெட், தயாரிப்பு அளவு என எல்லாவற்றிலும் இரண்டும் வேறுபடும். மக்களும் ஹோம் பேக்கர்ஸைப் பெரிய அளவில் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ஹோம் பேக்கிங்கில் அவர்கள் பயன்படுத்துகிற பொருள்களின் தரம், கெமிக்கல்களை தவிர்ப்பது அல்லது குறைப்பது என ஆரோக்கியத்துக்கான சாய்ஸ் இருப்பதுதான் காரணம்.

நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங் களை நன்றாக பிராக்டிஸ் செய்ய வேண்டும். லேட்டஸ்ட் டிரெண்டுகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள். மார்க்கெட்டிங் தகவல்களையும் ஓரளவு தெரிந்துகொள்ளுங்கள். இன்று நிறைய ஹோம் பேக்கர்கள் ஆன்லைனிலேயே பிசினஸ் செய் கிறார்கள். குறைந்த முதலீட்டில், பெரிய வளர்ச்சியைக் காண ஹோம் பேக்கிங் துறை நிச்சயம் உத்தரவாதம் தரும். டிஜிட்டல் தளங்களிலும் உங்களை அப்டேட் செய்துகொண்டு பிசினஸை வளர்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். நிறைய பெண்கள் வேலையை விட்டுவிட்டு, ஹோம் பேக்கிங் ஆரம்பித்து வெற்றிகரமாக பிசினஸ் செய்வதைப் பார்க்கிறோம்.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டத்திலிருந்து முதலில் பிசினஸை ஆரம்பியுங்கள். மெள்ள மெள்ள வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுபடுத்துங்கள். வேலை போனது பற்றிய கவலை யைத் தவிர்த்து உங்களுக்கு முன் காத்திருக்கும் பிரகாசமான வாய்ப்பை வெற்றிபெறச் செய்யும் முயற்சிகளில் இறங்குங்கள்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை `அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ, avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.