Published:Updated:

தோழிகளே... தி கிரேட் இந்தியன் கிச்சனும் உங்களிடம் சில கேள்விகளும்! #AvalVikatanPoll

#GreatIndianKitchen
News
#GreatIndianKitchen

`தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்து வரும் இவ்வேளையில் வீட்டு வேலை தொடர்பாக நம் வீட்டுப் பெண்களின் கருத்து என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா... அதற்காகத்தான் இந்த சர்வே...

Published:Updated:

தோழிகளே... தி கிரேட் இந்தியன் கிச்சனும் உங்களிடம் சில கேள்விகளும்! #AvalVikatanPoll

`தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்து வரும் இவ்வேளையில் வீட்டு வேலை தொடர்பாக நம் வீட்டுப் பெண்களின் கருத்து என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா... அதற்காகத்தான் இந்த சர்வே...

#GreatIndianKitchen
News
#GreatIndianKitchen

பெண்களின் பாடுகளை வெளிப்படுத்தும் வண்ணம் சில படங்கள் வரும்போதெல்லாம், இந்தச் சமூகம் `அட ஆமால்ல... பெண்கள் இந்தப் பிரச்னையோட தான் வாழ்ந்துகிட்டிருக்காங்க இல்ல’ என்று தன் மனசாட்சியின் சோம்பலை மெள்ள முறித்துக் கொள்ளும். `தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்கிற மலையாளப்படமும் அப்படித்தான் தற்போது சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறது. புகுந்த வீட்டு மனிதர்களின் இயல்புகளுக்காக, அவர்களுடைய வெகு சாதாரண விருப்பங்களுக்காக தங்கள் கனவுகளைக் கருக்கிக்கொண்டு, குடும்ப அமைதிக்காக அதை வெளியில் சொல்வதற்கும் பயந்துகொண்டு வாழ்வது பெண்களுக்குப் பழகிப்போன ஒன்றுதான். இந்த விஷயத்தைத்தான் சற்று கூடுதலாகவே முகத்தில் ஓங்கியறைந்து பேசியிருக்கிறது `தி கிரேட் இந்தியன் கிச்சன்’. டான்ஸரான கதாநாயகி, `அம்மியில் தேங்காய் சட்னி அரைச்சாதான் டேஸ்ட்’ என்கிற குடும்பத்துக்கு வாழ்க்கைப்படுகிறாள். எந்நேரமும் சமையற்கட்டு, கணவன் மென்று துப்பிய முருங்கைக்காய் சக்கையை கைகளால் எடுத்துப்போட்டு, அடைத்துக்கொண்ட சிங்க்கை சுத்தம் செய்து, காதலே இல்லாத காமத்துக்கு உடம்பைக் கொடுத்து வாழ்ந்து வருகிற நாயகி ஒருகட்டத்தில் தன் கனவை நனைவாக்க கணவன் குடும்பத்தைவிட்டுக் கிளம்புகிறாள்.

#GreatIndianKitchen
#GreatIndianKitchen

புகுந்த வீடும் கணவனும் வீட்டுக்கு வரும் பெண்ணின் கனவுகளையும் உணர்வுகளையும் புறந்தள்ளி, அவளைச் சமையற்கட்டுக்கும் படுக்கையறைக்கும் மட்டுமே என்று நடத்தினால், அவள் என்ன செய்வாள் என்பதை உணர்த்திவிட்டு முடிகிறது படம். இதையொட்டி, `மெனோபாஸ் வயதில் காலடியில் கோணியைப் போட்டுக்கொண்டு சமைத்த அம்மாக்களை உங்கள் வீட்டுச் சமையலறையில் நீங்கள் பார்த்ததில்லையா’ என்பது உள்ளிட்ட பல்வேறு ஆதங்கங்கள் சமூக வலைதளமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் வீட்டு வேலை தொடர்பாக நம் வீட்டுப் பெண்களின் கருத்து என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா... அதற்காகத்தான் இந்த சர்வே... பெண்களுக்கான கேள்விகள் இதோ...