லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வினு விமல் வித்யா: இனி ‘டோன்ட் டச்’தான் சொல்லிக் கொடுக்கணும்!

 சானியா மிர்சா
பிரீமியம் ஸ்டோரி
News
சானியா மிர்சா

இரான்லதான் இப்போ பெண்கள் உரிமை களுக்காகப் போராட்டங்கள் நடந்துட்டே வருதே... அங்கே சிலர் பெண்கள் படிக்கும் பள்ளிகளை மூடணும்னு நினைக்கிறாங்க.

“புரட்சிகர உழைக்கும் பெண்கள் தின வாழ்த்துகள்” என்று விமலையும் வித்யாவையும் பார்த்துச் சொல்லிக் கொண்டே வந்தாள் வினு.

வினுவுக்கும் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு, “இன்னிக்கு நாம சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இளநீர் பாயசம் ஆர்டர் பண்ணிருக்கேன்” என்றார் வித்யா.

“இந்த இளநீர் பாயசம் நம்ம சானியா மிர்சாவுக்காக வச்சுக்கலாம் வித்யாக்கா. இந்தியால இதுக்கு முன்னால இப்படி ஒரு டென்னிஸ் வீராங்கனை இருந்ததில்லை. 18 வயசுல விளையாட ஆரம்பிச்ச சானியா, 18 வருஷங் களுக்குப் பிறகு 36 வயசுல ஓய்வை அறிவிச்சிட்டாங்க. உடல்நலப் பிரச்னையால அவங்களால ஒற்றையர் ஆட்டங்கள்ல பிரமாதமா வர முடியல. ஆனா, இரட்டையர், கலப்பு இரட்டையர் போட்டிகள்ல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஜெயிச்சிருக்காங்க. உலகத்தர வரிசையில முன்னணி வீராங்கனைகள்ல ஒருத்தரா இருந்திருக்காங்க.”

“ஆமா, வினு... அவங்க விளையாட்டுல மட்டுமல்ல, இஸ்லாமியப் பெண்ணா சந்திச்ச எதிர்ப்புகளையும் சரியா கையாண்டாங்க. உடை குறித்த சர்ச்சை களையெல்லாம் ரொம்ப போல்டா எதிர்கொண்டாங்க. சானியாகிட்டயிருந்து இந்த உறுதியைத்தான் பெண்கள் எல்லாம் எடுத்துக்கணும்” என்றாள் விமல்.

“சானியா நீண்ட ஆயுளோட சந்தோஷமா வாழணும். மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் இந்திய மல்யுத்த கூட்டமைப்போட தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மேல வச்ச பாலியல் குற்றச்சாட்டு என்ன ஆச்சு?”

“அதுக்கு விசாரணை கமிட்டி அமைச்சிருக்காங்க வித்யாக்கா... ஆனா, பலரும் ரொம்ப காலமா நடக்கிறதா சொல்ற பாலியல் குற்றச்சாட்டை ஏன் முன்னாடியே தெரியப்படுத்தலேன்னு அபத்தமா கேட்கறாங்க... யார் ‘மீ டூ’ குற்றச் சாட்டைச் சொன்னாலும் சமூகம் இப்படித்தான் கேள்வி கேட்குது. இது ரொம்ப மோசமான விஷயம்...” கோபமாகச் சொன்னாள் வினு.

“விளையாட்டுத் துறையில இருக் கிற உயரதிகாரிகள் எல்லாம் பெரும்பாலும் ஆண்கள்தானே... அவங்ககிட்டதான் அதிகாரம் இருக்கு. இப்படிச் செல்வாக்கான வங்களை எதிர்த்து குரல் வர்றதே பெரிய விஷயம். முன்னாடியே சொல்ல முடியாததுக்கு காரணம் இருக்கும்னு புரிஞ்சுக்கணும். அதை விட்டுட்டு சமூகமே குறுக்கு விசாரணையில இறங்கக் கூடாது. அதிகாரிகள்ல இருந்து பயிற்சி யாளர்கள் வரை பெண்கள் மீது பாலியல் சுரண்டல் செய்யறாங்கன்னு மல்யுத்த வீராங் கனைகள் ஒட்டுமொத்தமா சொல்றாங்க. இதை அரசாங்கம் சீரியஸா எடுத்துக்கிட்டு, நடவடிக்கை எடுக்கணும். எதிர்காலத்துல இந்த மாதிரி நடக்காத மாதிரி பாது காப்பைப் பாதுகாப்பைப் பலப்படுத்தணும்.”

“பாதுகாப்பு மட்டுமில்ல பாடங்களை யும் புகட்டணும். நடிகையும், பிஜேபி கட்சியோட பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கூட சமீபத்துல தன் அப்பா மீதே இப்படியொரு குற்றச்சாட்டை முன்வெச்சிருக்காங்க. அப்பாவே அப்படி நடந்துக்கிட்டதை எப்படி வெளியில சொல்ல முடியும். அதுவும் சின்ன வயசுல. அதனால, சமூ கத்துக்கு சரியான பாடங்களைப் புகட் டிட்டே இருக்கணும். பாதிக்கப்பட்ட துக்கு எதிரா குரல் கொடுக்கிற தைரியத்தையும் வளர்த்தெடுக்கணும்.’’

 சானியா மிர்சா
சானியா மிர்சா

“ஆமா வினு... இதுவரை ‘மீ டூ’ புகார்கள் பெண்கள்கிட்டேருந்துதான் வந்துகிட்டு இருந் துச்சு. தமிழ்நாட்டுல முதல்முறையா ஆண்கள் கிட்டருந்து ‘மீ டூ’ புகார்கள் வெளி வந்திருக்கு. ஆண் எழுத்தாளர் ஒருத்தர் இளைஞர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததா பாதிக்கப் பட்டவங்களே சொல்லிருக்காங்க. அவங்க கிட்டேயும் ஏன் முன்னாடியே சொல்லலைன்னு தான் கேட்கறாங்க. ஏதோ மனத்தடை, தயக்கம், பயம் எல்லாம் இருந்திருக்கும். ஆணோ பெண்ணோ பாலியல் குற்றச்சாட்டைச் சொல்லும்போது, நாம பாதிக்கப்பட்டவங்க பக்கம் நிக்கணும். இந்த மாதிரி குற்றச்சாட்டை யாரும் சும்மா சொல்லிட மாட்டாங்க.”

“சரியா சொன்னே விமல். இனிமே ஆண் குழந்தைங்களுக்கும் ‘சேஃப் டச் - அன்சேஃப் டச்’ சொல்லிக் கொடுக்கணும்போல...”

“இல்ல வினு... இனி `டோன்ட் டச்'தான் சொல்லிக் கொடுக்கணும்போல. சரி.... இந்தக் காதலர் தினத்துல ஒரு காதல் பூத்து, கல்யாணத்துல முடிஞ்சிருக்கு, தெரியுமா?”

“இதுல என்னக்கா அதிசயம்?”

“ஆமா, அதிசயம்தான் வினு. 75 வயசு பாபுராவ் பாட்டீலும் 70 வயசு அனுசுயா ஷிண்டேவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதிசயம்தானே! மகாராஷ்டிரால உள்ள கோலாப்பூர்ல ஜானகி முதியோர் இல்லத்துல பாபுராவும் அனுசுயாவும் வாழ்ந்துகிட்டிருக்காங்க. நாலு மாசத்துக்கு முன்னால அனுசுயாவோட கணவர் இறந்துட்டார். முதியோர் இல்லத்துல காதலர் தினத்தன்னிக்கு ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கு. அது முடிஞ்சதும் அனுசுயாகிட்ட புரொபோஸ் பண்ணிருக்கார் பாபுராவ். அனுசுயா சம்மதம் சொல்லல. ஆனா, அவங்களுக்குள்ளேயும் காதல் பூத்திருக்கு. சமூகம் என்ன சொல்லுமோன்னு அமைதியா இருந்திருக் காங்க. ஆனா, அந்த இல்லத்தோட நிர்வாகி இவங் களுக்குள்ள இருந்த காதலைக் கண்டுபிடிச்சு ரெண்டு பேருக்கும் சட்டப்படி கல்யாணமும் செஞ்சு வச்சிட்டார். ரெண்டு பேருமே முதி யோர் இல்லத்துலதான் இருக்கப் போறாங் களாம்.”

“சந்தோஷமா இருக்கு வித்யாக்கா. இந்தக் கொடுமையைக் கேளுங்க... இரான்ல கடந்த சில மாசங்களா பள்ளி மாணவிகள் உடல்நலப் பிரச்னைகளால மோசமா பாதிக்கப்பட்டுட்டே வந்தாங்க. அதுக்கு காரணம் மாணவிகளுக்கு யாரோ விஷம் கொடுத்திருக்காங்கன்னு இப்போ தெரியவந்திருக்கு” -அதிர்ச்சித் தகவல் சொன்னாள் வினு.

“ஐயோ... எதுக்கு விஷம் கொடுத்திருக்காங்க?”

“இரான்லதான் இப்போ பெண்கள் உரிமை களுக்காகப் போராட்டங்கள் நடந்துட்டே வருதே... அங்கே சிலர் பெண்கள் படிக்கும் பள்ளிகளை மூடணும்னு நினைக்கிறாங்க. ஆனா, அதையும் மீறி பெண்கள் படிக்கப் போறாங்க. அவங்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்குற மாதிரி இதுவரைக்கும் சுமார் 650 பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்திருக் காங்க. இந்த விஷத்தால இதுவரை யாரும் உயிரிழக்கல. ஆனா, சுவாசப் பிரச்னைகளால கடுமையா பாதிக்கப்பட்டிருக்காங்க.”

“என்ன கொடுமை இது... அதிர்ச்சியா இருக்கு வினு.”

“விசாரணை ஆரம்பிச்சிருக்காங்க. ஒரு பக்கம் பெண்கள் முன்னேறிட்டே இருந்தாலும் இன்னொரு பக்கம் அடிப்படை விஷயங்களுக் காகக்கூடப் போராட வேண்டிய நிலைலதான் இருக்காங்க. இரான்ல உள்ள எட்டு நகரங்கள்ல மத அடிப்படைவாதிகள் இந்தக் கொடூரச் செயலைச் செஞ்சிருக்காங்க. இதுக்கு எதிரா வும் அங்கே போராட்டம் நடந்துட்டிருக்கு. சிலர் பயத்துல பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்னு சொல்லிட்டிருக்காங்க.”

“அடக் கொடுமையே... என்ன சொல்ற துன்னே தெரியல... பூகம்பம் வந்த துருக்கி யோட நிலைமை இப்போ எப்படி இருக்கு?”

“ ரொம்ப பரிதாபமா இருக்கு வித்யாக்கா. வீடு இல்லாம தெருவுல டென்ட் போட்டுத் தங்கிருக்காங்க. தெருவுலதான் சமைக்கறாங்க, சாப்பிடறாங்க. மீண்டு வர்றதுக்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ...” - கவலையோடு சொன்னாள் விமல்.

“என்ன படம் பார்த்தீங்க ரெண்டு பேரும்?”

“படம் எதுவும் பார்க்கல வித்யாக்கா. ‘கொச்சைக்கிடா’ங்கிற குறுநாவல் படிச்சேன். சரோஜா பிரகாஷ் எழுதியிருக்கார். அவரோட முதல் நாவலாம். மூடநம்பிக்கைகளால எப்படிப் பெண்களோட வாழ்க்கை சீரழிக்கப் படுதுன்னு சொல்லியிருக்கார். சின்ன நாவல்னாலும் சொல்லப்பட்ட கருத்தால ரொம்பவே அழுத்தமாயிருக்கு. பல இடங்கள்ல நையாண்டி எழுத்து ரசிக்க வச்சது. எல்லாரும் இந்த நாவலை அவசியம் படிக்கணும்.”

“அப்படியா, படிச்சிருவோம். ஒரு பெண் ணாலதான் இப்படியெல்லாம் எழுத முடியும்.”

“வித்யாக்கா, பேரைப் பார்த்துப் பொண் ணுன்னு நினைச்சிட்டீங்களா? இவர் ஆண். ஆனா, பெண்கள் தொடர்பா நல்லா சிந்திச் சிருக்கார். இந்த நாவலை இன்னும் பெரிசா எழுதியிருக்கலாம்னு தோணுச்சு.”

“ஓ... சரி, சரி... கதையைச் சொல்லிடாதே... இப்ப கிளம்பலாம்” என்று எழுந்தார் வித்யா.

“இன்னிக்கு நம்ம அரட்டையில இளநீர் பாயசத்தை மறந்துட்டேன்... இன்னொரு கப் சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்றாள் வினு.

- அரட்டை அடிப்போம்...

அன்னா கானெல்லி
அன்னா கானெல்லி

வினு தரும் வித்தியாசமான தகவல்

உயிர்களைக் காப்பாற்ற உதவிய Fire Escape நெருப்பிலிருந்து தப்பிக்க உதவும் Fire Escape சாதனத்தைக் கண்டுபிடித்தவர் அன்னா கானெல்லி என்ற பெண். வருடம் - 1887. இந்தச் சாதனம் கண்டுபிடிக்கப்படும் வரை, குடியிருப்புகளில் ஏற்படும் தீ விபத்துகளை சமாளிப்பது பெரும்சவாலாகவே இருந்தது. கானெல்லியின் இந்தக் கண்டுபிடிப்பு பல உயிர் களைக் காப்பாற்ற உதவியது. நியூயார்க் நகர கட்ட டங்களின் வளர்ச்சியையும் துரிதப்படுத்தியது.