Published:Updated:

எதுகை மோனை, சுவாரஸ்யம்.. முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை மேடையில் வர்ணனை செய்த பெண்கள்!

அன்னபாரதி

`பேசுறதுல என்ன வீரம், வரலாறு... களத்தில் இறங்கி மாடு பிடிக்கிறதுதான் வீரம்...' இப்படி சில கமெண்ட்களும் வந்துச்சு. அதையும் ‌விட‌ அதிகமா நல்ல பாராட்டுக்களும் கிடைச்சது. யார் என்ன சொன்னாலும் என் மனசுக்கு நிறைவா ஒரு வேலை பண்ண நிம்மதி இருக்கு...

Published:Updated:

எதுகை மோனை, சுவாரஸ்யம்.. முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை மேடையில் வர்ணனை செய்த பெண்கள்!

`பேசுறதுல என்ன வீரம், வரலாறு... களத்தில் இறங்கி மாடு பிடிக்கிறதுதான் வீரம்...' இப்படி சில கமெண்ட்களும் வந்துச்சு. அதையும் ‌விட‌ அதிகமா நல்ல பாராட்டுக்களும் கிடைச்சது. யார் என்ன சொன்னாலும் என் மனசுக்கு நிறைவா ஒரு வேலை பண்ண நிம்மதி இருக்கு...

அன்னபாரதி

ஜல்லிக்கட்டுப் போட்டி, காளைகள் என்றாலே அது ஆண்களுக்கானது... ஆண்களின் துணிச்சலுக்கானது என்பது நிரந்தரமாக்கப்பட்ட சொல்லாடல். ஜல்லிக்கட்டு மைதானத்தில் கூட பெண்களைப் பார்ப்பது அரிது. ஆனால் அதிலிருந்து சற்றே விலகி, முதன்முறையாக மதுரை சத்திரப்பட்டி பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைச் சிறப்பாக பெண் வர்ணனையாளர்கள் அன்னபாரதி, லாவண்யா ஆகியோர் தொகுத்து வழங்கி, பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.

வர்ணனை நிகழ்வின் போது...
வர்ணனை நிகழ்வின் போது...

``மாடா? மாடுபிடி வீரரா?” என கணீர் குரலில் தொகுத்து வழங்கும் ஆண்களுக்கு நிகராக, மணிக்கணக்காக மைதானம் முழுக்க ஒலித்துக் கொண்டிருந்தது பெண் வர்ணனையாளர்களின் குரல்கள். இருவரில் ஒருவரான அன்னபாரதியிடம் பேசினோம்.

``எனக்கு இந்த அனுபவம் ரொம்ப புதுசா இருந்துச்சு. முதல்ல, அமைச்சர் மூர்த்திதான் என்னைத் தொடர்பு கொண்டு, இத பண்றீங்களான்னு கேட்டாங்க. அப்புறம் அவங்க பி.ஆர்.ஓ பேசினாங்க. ஒரு சில நாள்களுக்கு முன்னாடிதான் சொன்னாங்க. நாம எப்படி பேசப்போறோமோனு நெனச்சேன்.

அந்த இரண்டு நாள்ல, இதுக்கு முன்னாடி நடந்த நிறைய ஜல்லிக்கட்டு தொடர்பான வீடியோக்களில பலர் பலவிதமா பேசுனதைப் பார்த்தேன். எல்லாரும் சொன்னதை மட்டும் பேசாம, கொஞ்சம் வித்தியாசமா ஏதாச்சும் பேசலாமான்னு நினைச்சேன். அதனால சங்க இலக்கியங்களில வர்ற புறநானூறு, கலித்தொகை பாடல்களில் இருக்கிற மாடுகள் பத்தி எல்லாம் பேசினேன். அப்புறம் அங்கே இருந்த இளைஞர்களை உற்சாகப்படுத்துறது, கொஞ்சம் எதுகை மோனையோட பேசுறதுனு, இப்படி கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணினேன்.

அமைச்சர் மூர்த்தியுடன்...
அமைச்சர் மூர்த்தியுடன்...

“நீ பேசுக்கா, பேசுக்கா”னு மைதானத்தில் இளைஞர்களும் ரொம்ப உற்சாகப்படுத்துனாங்க. அப்புறம் பேசப் பேச எனக்கும் வந்துருச்சு. கிட்டத்தட்ட காலை 7:00 மணியிலிருந்து மதியம் 3 மணி வரைக்கும் வர்ணனையாளரா பேசினதுல ரொம்ப மகிழ்ச்சி. அடுத்தடுத்து மாடுகளும், மாடுபிடி வீரர்களும் களமிறங்கிட்டே இருந்ததனால சாப்பிடக்கூட நேரமில்ல‌. ஆனா சுத்தி இருந்தவங்க உற்சாகப்படுத்தினதுல பசியும் மறந்து போச்சு.

அவ்ளோ பெரிய மைதானத்துக்கு, அதுவும் அத்தனை ஆண்கள் மத்தியில் போய் பேசப்போறோமேன்னு ஒரு மாதிரி இருந்துச்சு. பெண்களுக்கென்றே இருக்கக்கூடிய உடல் உபாதைகள், இதெல்லாம் எப்படி சமாளிச்சு பேசப் போறோம்னு பயந்துட்டே இருந்தேன். ஆனா, கூட‌ இருந்தவங்க எங்களுக்குத் தேவையான எல்லா அடிப்படை வசதிகளும் செஞ்சு தந்தாங்க.

விழா மேடையில்
விழா மேடையில்

எனக்கு அங்க மேடைக்குள்ள இருக்க பந்தல்ல உக்காந்துட்டு பேச இஷ்டமில்லை. இறங்கி களத்துக்கு கொஞ்சம் முன்னாடி ‌நின்னு, மாடுகளையும் வீரர்களையும் கண்கொண்டு பார்த்து, ரசித்து வர்ணிக்கத்‌தான்‌ பிடிச்சிருந்துச்சு. அதுக்கு வெயில் கொடுத்த பரிசுதான் நல்லா கருத்து போயிட்டேன்” என்றார் சிரித்துக் கொண்டே.

மேலும் அவர் தனது அனுபவத்தை விவரித்தபோது, “கூடவே இருந்த ஆண் தொகுப்பாளர் செங்குட்டுவன் ரொம்பவே உதவியாக இருந்தார். இதுக்கு முன்னாடி நான் அவரை பார்த்ததோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோ இல்லை. ஆனாலும் அங்க பேசும்போது எங்களுக்குள்ள ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருந்துச்சு‌. அது ரொம்பவே முக்கியம். இத்தனைக்கும் நானும் அவரும் ஒரே இடத்தில் அருகருகே அமர்ந்து கூட பேசலை.

சு. வெங்கடேசன் எம்.பி..
சு. வெங்கடேசன் எம்.பி..

`பட்டிமன்றப் பேச்சாளர் இங்கேயும் வந்துட்டாங்களா?', `பேசுறதுல என்ன வீரம், வரலாறு... களத்தில் இறங்கி மாடு பிடிக்கிறதுதான் வீரம்...' - இப்படி சில கமென்ட்களும் வந்துச்சு. அதையும் ‌விட‌ அதிகமா நல்ல பாராட்டுகளும் கிடைச்சது. யார் என்ன சொன்னாலும் என் மனசுக்கு நிறைவா ஒரு வேலை பண்ணின நிம்மதி இருக்கு. இறங்கி வரும்போது வீரர்கள், `அக்கா உங்க பேச்சுதான் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்துச்சு’னு சொன்னப்போ அவ்ளோ மகிழ்ச்சியா இருந்துச்சு. அன்னைக்கு இரவு என்னோட கனவிலகூட மாடுகள் தான் முழுசா ஆக்கிரமித்து இருந்துச்சு. மறக்க முடியாத அனுபவம் இது” என்றார்.

வாழ்த்துகள் அன்னபாரதி!