Published:Updated:

`உழைப்பே திருப்புமுனை!' - நாட்டின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண், துணை கலெக்டர்

பிரஞ்சால் பட்டில்
News
பிரஞ்சால் பட்டில் ( ANI )

தன் முதல் முயற்சியாக, 2016-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வை எழுதினார். அதில், தேசிய அளவில் 733-வது இடத்தைப் பிடித்தார்.

Published:Updated:

`உழைப்பே திருப்புமுனை!' - நாட்டின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண், துணை கலெக்டர்

தன் முதல் முயற்சியாக, 2016-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வை எழுதினார். அதில், தேசிய அளவில் 733-வது இடத்தைப் பிடித்தார்.

பிரஞ்சால் பட்டில்
News
பிரஞ்சால் பட்டில் ( ANI )

மகாராஷ்டிராவில் உள்ள உள்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர், பிரஞ்சால் பட்டில். இவர், தனது 6 வயதில் பார்வையை இழந்துள்ளார். இருந்தபோதிலும், தனது தொடர் உழைப்பு மற்றும் விடாமுயற்சியால், பார்வையற்றோருக்கான பள்ளியில் தனது கல்வியை முடித்தார். தொடர்ந்து, தனியார் கல்லூரி ஒன்றில் அரசியல் அறிவியல் பாடத்தைத் தேர்வுசெய்து படித்தார். பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் தொடர்பான தனிப்பாடத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

பிரஞ்சால் பட்டில்
பிரஞ்சால் பட்டில்
ANI

அடுத்து, ஐஏஎஸ் அதிகாரியாக முடிவெடுத்தவர், அது சார்ந்து படிக்கத் தொடங்கினார். பார்வையற்றவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மென்பொருள்கள் மூலம், பாடங்களை கற்கத்தொடங்கினார். தன் முதல் முயற்சியாக 2016 -ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வை எழுதினார். அதில், தேசிய அளவில் 733-வது இடத்தைப் பிடித்தார்.

அடுத்த முயற்சியாக, 2017-ம் ஆண்டு மீண்டுமொரு முறை தேர்வு எழுதினார். இந்தத் தேர்வில் தேசிய அளவிலான தரப்பட்டியலில் 124-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையை பிரஞ்சால் பட்டில் பெற்றுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வானவர், கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராகப் பணியாற்றினார்.

``நாம் ஒருபோதும் தோற்கடிக்கப்படக்கூடாது. பின்வாங்கவும் கூடாது.
பிரஞ்சால் பட்டில்

இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெற்ற பணி அனுபவத்தின் அடிப்படையில், திருவனந்தபுரம் மாவட்ட துணை கலெக்டராக பிரஞ்சால் பட்டில் (31) இன்று பதவியேற்றார்.இதுகுறித்து அவர் பேசுகையில், ``நாம் ஒருபோதும் தோற்கடிக்கப்படக்கூடாது. பின்வாங்கவும் கூடாது. நம்முடைய உழைப்பு திருப்புமுனையை ஏற்படுத்தும். உதவி கலெக்ராகப் பொறுப்பேற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.