Published:Updated:

`ஆம், இனியும் அப்படித்தான் இருப்பேன்!' - 40 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்ட ரூபா ஐ.பி.எஸ்

ஐபிஎஸ் அதிகாரி ரூபா
News
ஐபிஎஸ் அதிகாரி ரூபா

சில வருடங்களுக்கு முன் சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கிச்சன் உள்ளிட்ட ஸ்பெஷல் வசதிகள் செய்துகொடுக்க ரூ.2 கோடி கைமாறியதாக அதிரடி புகார் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார் ரூபா.

Published:Updated:

`ஆம், இனியும் அப்படித்தான் இருப்பேன்!' - 40 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்ட ரூபா ஐ.பி.எஸ்

சில வருடங்களுக்கு முன் சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கிச்சன் உள்ளிட்ட ஸ்பெஷல் வசதிகள் செய்துகொடுக்க ரூ.2 கோடி கைமாறியதாக அதிரடி புகார் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார் ரூபா.

ஐபிஎஸ் அதிகாரி ரூபா
News
ஐபிஎஸ் அதிகாரி ரூபா

கர்நாடக மக்களைத் தாண்டி பிற மாநில மக்களுக்கும் தன் அதிரடி நடவடிக்கைகளால் அறிமுகமானவர், ரூபா ஐ.பி.எஸ். பெங்களூரு மக்களுக்குச் செல்லமாக 'தில்' ரூபா.

கர்நாடகாவை கலக்கிக்கொண்டுயிருக்கும் ரூபா ஐ.பி.எஸ், மிகவும் ஸ்டிரெயிட் ஃபார்வர்ட் ஆன காக்கி அதிகாரி. சில வருடங்களுக்கு முன்பு சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கிச்சன் உள்ளிட்ட ஸ்பெஷல் வசதிகள் செய்துகொடுக்க ரூ. 2 கோடி கைமாறியதாக அதிரடி புகார் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார் ரூபா ஐ.பி.எஸ்.

ஐ.பி.எஸ் அதிகாரி
ஐ.பி.எஸ் அதிகாரி

அப்போது அவர் சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்தார். சசிகலா ஹாயாக வெளியே ஷாப்பிங் சென்றுவிட்டு வந்ததையும் அம்பலப்படுத்தியவர் இதே ரூபாதான். இதனால், இது தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரிக்க அப்போது உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அது தொடர்பான வழக்கும் இப்போதும் நடந்து வருகிறது.

இந்த சிறைத்துறை ஊழல் புகார் மாநிலம் தாண்டி இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது, ரூபா பற்றிப் பேசப்படாத இடங்களே இல்லை.

ஆனால், ரூபாவின் புகாருக்கு அப்போதைய சிறைத்துறை டிஜிபி ராவ் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து வார்த்தைப் போரும் அப்போது வெடித்தது. விடாது கருப்பாக, சசிகலாவுக்கு சலுகைகள் காட்டப்பட்டதற்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று பின்வாங்காமல் அதிரவைத்தார் ரூபா. இந்த நிலையில், தற்போது ரூபா மீண்டும் ஒரு பரபரப்பில் சிக்கியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் உள்துறை செயலாளராக இருந்து வந்த ரூபா, மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பல்கர் மீது பகிரங்கமாக டெண்டர் மோசடி புகாரை அடுக்க, அதிர்ச்சி அடைந்தது கர்நாடக அரசு. நிம்பல்கர், ரூபாவின் புகார்களுக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். ஆனால், ரூபா விடவில்லை... ஆதாரங்களை எடுத்து அடுக்கினார். விளைவு... இருவரையும் பணிமாற்றம் செய்திருக்கிறது கர்நாடக அரசு. ரூபா கைவினைப் பொருள் வாரிய நிர்வாக இயக்குநராகப் பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

பரப்பன அக்ரஹாரா சிறை
பரப்பன அக்ரஹாரா சிறை

நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.619 கோடி மதிப்பிலான பெங்களூரு பாதுகாப்பான நகரத் திட்டத்தின்(Bengaluru Safe City project) டெண்டர் நிர்ணயம் செய்வதில், ஹேமந்த் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார் ரூபா. இதுதான் பிரச்னையாக மாறியது. தன்னை டிரான்ஸ்பர் செய்தாலும் அதனால் கலங்கவில்லை ரூபா.

40 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார்!

எதற்கும் அஞ்சாத ரூபா, எந்தக் காரியத்தையும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்வார். உண்மையும் வாய்மையும் வாய்ந்த இவரது 20 ஆண்டுக்கால காவல்துறை பணியில், கிட்டத்தட்ட 40 முறை பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐ.ஜி-யாகப் பதவி உயர்வு பெற்ற ரூபா, கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் உள்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் உள்துறை செயலாளர் ஆனதுமே சசிகலா விடுதலையாவதில் சிக்கல் நீடிக்கும் என்றும் செய்திகள் தீவிரமாகப் பரவி வந்தன.

ஆனால், தற்போது நிம்பல்கருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பணிமாற்றமாகியிருக்கிறார். இரும்புப் பெண்மணியாக அறியப்படும் ரூபா இது குறித்த தன் ட்வீட்டில், 'என் பணிக்காலத்தின் ஆண்டுகளைவிட இரண்டு மடங்கு அதிக முறை நான் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கிறேன். தவறுகளை வெளிக்கொண்டு வந்தது மற்றும் சில உறுதியான நடவடிக்கைகள் எடுத்தது இதற்குக் காரணமாக இருக்கலாம். அது எனக்குத் தெரியும். ஆனால், நான் தொடர்ந்து எனது வேலையைச் சமரசமின்றி செய்வேன். நான் உண்மையாக இருப்பதால்தான் இந்த டிரான்ஸ்பர் வந்துள்ளது. ஆனால், எங்கே போனாலும் நான் இப்படித்தான் சமரசம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து வேலைபார்ப்பேன்' என்றிருக்கிறார் கம்பீரத்துடன்.

- ஆனந்தி ஜெயராமன்