Published:Updated:

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் லீவ்! - கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றிய பெண் மருத்துவரின் துணிச்சல் முடிவு

மருத்துவர் பல்நாம்சி சங்மா
News
மருத்துவர் பல்நாம்சி சங்மா ( Shillong Times/East Mojo )

மேகாலயாவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்று அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்த பெண் மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

Published:Updated:

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் லீவ்! - கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றிய பெண் மருத்துவரின் துணிச்சல் முடிவு

மேகாலயாவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்று அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்த பெண் மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

மருத்துவர் பல்நாம்சி சங்மா
News
மருத்துவர் பல்நாம்சி சங்மா ( Shillong Times/East Mojo )

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா மலைகள் சூழ் மாநிலம். போக்குவரத்து, சாலை என அடிப்படை வசதிகள் பலவும் பின்தங்கியுள்ள அந்த மாநிலத்தில், மேற்குகரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பல்நாம்சி சங்மா (Balnamchi Sangma) பணியாற்றி வருகிறார். இந்த மருத்துவமனையில் கோரமாரா கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. அந்தச் சூழலில் அவருக்கான மருத்துவ சிகிச்சைகளை அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவர் பல்நாம்சி சங்மா
மருத்துவர் பல்நாம்சி சங்மா
East Mojo

தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டுமென்றால், அங்கிருந்து 36 கி.மீ தொலைவில் உள்ள டுரா எனும் பகுதியில் இயங்கிவரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தால் மட்டுமே முடியும் என்ற நிலை. அந்தச் சூழலில் மருத்துவமனையில் மருத்துவர் பல்நாம்சி மட்டுமே இருந்திருக்கிறார். அந்த மருத்துவமனையில் நோயாளிகளின் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் இருந்தும், ஓட்டுநர்களாகப் பணிபுரிந்து வந்த இருவருமே விடுப்பில் இருந்திருக்கிறார்கள். அவர்களைத் திரும்ப பணிக்கு அழைத்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அந்தக் கர்ப்பிணியை டுரா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல தாமதம் ஆகலாம் என்ற சூழலில் துணிச்சலான முடிவை மருத்துவர் பல்நாம்சி சங்மா எடுத்திருக்கிறார்.

துணிச்சல் முடிவு!

ஆம்புலன்ஸ் வாகனத்தில் கர்ப்பிணியை ஏற்றி, 36 கி.மீ தூரத்தில் உள்ள டுரா மருத்துவமனைக்கு அவரே ஓட்டிச் சென்றிருக்கிறார். கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்த நிலையில், அவரைப் பத்திரமாக மகப்பேறு மருத்துவமனை கொண்டு சென்று அனுமதித்து தாயையும் சேயையும் காப்பாற்றியிருக்கிறார் மருத்துவர் பல்நாம்சி சங்மா.

உரிய ஓட்டுநர் உரிமமும் என்னிடம் இருந்ததால், அந்த நேரத்தில் அதுவே சரியான முடிவாக எனக்குத் தோன்றியது. மனதில்பட்டதை செய்தேன்.
மருத்துவர் பல்நாம்சி சங்மா

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் விடுமுறையில் இருந்தநிலையில், கர்ப்பிணிப் பெண்ணின் சூழலைக் கருத்தில் கொண்டு தாமே வாகனத்தை இயக்கி அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் பல்நாம்சி சங்மாவுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. தன்னிடம் வாகனம் இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் இருப்பதாகச் சொல்லும் பல்நாம்சி சங்மா, கர்ப்பிணிப் பெண்ணின் நிலையால் ஆம்புலன்ஸை தாமே இயக்கும் முடிவுக்கு வந்ததாகச் சொல்கிறார்.

இதுகுறித்து ஈஸ்ட் மோஜோ ஊடகத்திடம் பேசிய பல்நாம்சி சங்மா, ``மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது. குறிக்கப்பட்டிருந்த நாளுக்கு முன்பாகவே கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி வருவது இயல்புதான். அன்றைய சூழலில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல், எங்கள் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் விடுமுறையில் இருந்தார்.

மருத்துவர் பல்நாம்சி சங்மா
மருத்துவர் பல்நாம்சி சங்மா
Twitter/@Naushadaamanind

அந்த கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பமும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலில் இருந்தனர். அதனால், தனியார் ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்யும்படி அவர்களிடம் கேட்க எனக்கு மனமில்லை. அந்தச் சூழலில் வேறுவழியில்லாததால், ஆம்புலன்ஸை ஓட்டிச்சென்று அவரை மருத்துவமனையில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தேன். உரிய ஓட்டுநர் உரிமமும் என்னிடம் இருந்ததால், அந்த நேரத்தில் அதுவே சரியான முடிவாக எனக்குத் தோன்றியது. மனதில்பட்டதைச் செய்தேன்'' என்று நெகிழ்ந்திருக்கிறார்.