Published:Updated:

`ஆண்களின் பதவிகளில் பெண்களை ஏன் அமர்த்துகிறீர்கள்?' - 100 நாள் வேலைத்திட்டத்தில் பாகுபாடு புகாரா?

ராஜஸ்தான்
News
ராஜஸ்தான் ( pixabay )

`அனைத்து வேலைகளையும் பெண்களுக்கே கொடுத்துவிட்டால், ஆண்கள் எங்கே செல்வார்கள்? அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்' என்று, அரசின் செயலுக்கு ஆண்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Published:Updated:

`ஆண்களின் பதவிகளில் பெண்களை ஏன் அமர்த்துகிறீர்கள்?' - 100 நாள் வேலைத்திட்டத்தில் பாகுபாடு புகாரா?

`அனைத்து வேலைகளையும் பெண்களுக்கே கொடுத்துவிட்டால், ஆண்கள் எங்கே செல்வார்கள்? அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்' என்று, அரசின் செயலுக்கு ஆண்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ராஜஸ்தான்
News
ராஜஸ்தான் ( pixabay )

கிராமப்புற இந்தியாவில் `ஆண்களுக்கான வேலைகளைப் பெண்கள் எடுத்துக் கொள்கிறார்கள்' என்று, ஆண்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானைப் பொறுத்தவரைப் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே அங்குள்ள பெண்களுக்கு உறுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில், பில்வாரா அரசு ஒரு செயல் திட்டத்தைக் கொண்டு வருகிறது.

ஆண்கள்
ஆண்கள்
pixabay

அதாவது, மத்திய அரசின் கிராமப்புற மக்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ), 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள பணிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளது. அதாவது இவ்வேலைகளில் மேற்பார்வையாளர் பொறுப்புகளில் பெண்களுக்கு இடமளித்து வருகிறது.

மேற்பார்வையாளர்களாக பணிபுரிபவர்கள், வருகை பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும், நாள் முடிவில் செய்யப்படும் வேலையைக் கணக்கிட வேண்டும், படிக்காத தொழிலாளர்கள் கையெழுத்திட வைத்து, அவர்களின் ஊதிய தொகையைக் கணக்கிடவும் உதவ வேண்டும். 

ஆனால் `பில்வாராவில் உள்ள அனைத்து வேலைகளையும் பெண்களுக்கே கொடுத்து விட்டால், ஆண்கள் எங்கே செல்வார்கள், அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்' என்று அரசின் செயலுக்கு ஆண்கள்எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நூறு நாள் வேலை வாய்ப்பு
நூறு நாள் வேலை வாய்ப்பு

இதுகுறித்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிர்வாக பொறியாளர் ரிஷிகேஷ் சிங்க் கூறுகையில்,

``பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வேலையில் நியமித்த உடன், நேர்மறையான முடிவுகளைக் கண்டோம். முன்பு தொழிலாளர்களின் வருகை பதிவேட்டில் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் வந்தன. ஆனால் இப்போது இல்லை. பணியின் தரமும் மேம்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். 

`ஆண்கள் ஏன் இவ்வளவு பொறாமை கொள்ள வேண்டும். பெண்கள் சம்பாதிப்பது எப்படியாயினும் குடும்பத்திற்கு தானே செல்லும். நாங்கள் முன்னுக்கு வருவதை ஆண்களால் ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை' எனப் பெண்கள் தங்களது தரப்பு ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். 

பெண்களை வேலைக்கு அமர்த்தும் இந்தத் திட்டத்தால், பெண்கள் முன்னேறி உள்ளதாகவும், வேலைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.