ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

24 வயதினிலே..! - சுயசம்பாத்திய பெண்களின் தன்னம்பிக்கை வார்த்தைகள்

சுயசம்பாத்திய பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சுயசம்பாத்திய பெண்கள்

ஆம்பள பசங்ககிட்ட காசு இருந்தா அது அவங்களுக் கானது. ஆனா, பொண்ணுங்க சம்பாதிக்கிற காசு குடும்பத்துக்கானது

மகள் படிப்பை முடித்துவிட்டாலே, ‘என்ன இன்னும் மாப்பிள்ளை பார்க்கலையா?’ என்று கேட்டு பெற்றோருக்குப் பதற்றத்தைத் திணிக்கும் இந்தச் சமூகத்தில், ‘பொண்ணு படிப்பை முடிச்ச கையோட சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டா’ என்று ‘குட் நியூஸ்’ சொல்லும் பெற்றோர்கள், மற்ற பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் அந்த நம்பிக்கையைப் படரவிடுகிறார்கள். 24 வயதுக்குள் தாங்கள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதையும், பொருளாதார சார்பின்மை முதல் குடும்பத்துக்கான பங்களிப்பு வரை அது தங்களுக்குக் கொடுக்கும் தன்னம்பிக்கை அனுபவங்களையும், 24-ம் ஆண்டு சிறப்பிதழில் பகிர்கிறார்கள் அவள் விகடன் வயதிலிருக்கும் இந்தத் தோழிகள்!

24 வயதினிலே..! - சுயசம்பாத்திய பெண்களின் தன்னம்பிக்கை வார்த்தைகள்

இப்போ நான்தான் குடும்பத்துக்கு அப்பா!

``ஆம்பள பசங்ககிட்ட காசு இருந்தா அது அவங்களுக் கானது. ஆனா, பொண்ணுங்க சம்பாதிக்கிற காசு குடும்பத்துக்கானது’’ என்கிறார், திருச்சி அருகிலுள்ள விரகலூரைச் சேர்ந்த கேத்ரின் ராணி. ‘`பி.எஸ்ஸி மேத்ஸ் பட்டதாரி நான். எங்க அப்பா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கேன்சர்ல இறந்து போயிட் டாங்க. அதுக்கு அப்புறம் குடும்பச் சூழ்நிலை தலை கீழாச்சு. எங்கம்மா 100 நாள் வேலை, வயல் வேலைனு போயிட்டு இருக்காங்க. அவங்க பாரத்தைக் குறைக்க ‘சுகி பிரின்டர்ஸ்’ல வேலைக்குச் சேர்ந்தேன். மாசம் 9,000 சம்பளம். இப்போ எங்க அம்மாவோட பாதி சுமையை இறக்கி வெச்சிருக்கேன்.

மகளிர் குழுவுல வாங்கின லோனுக்கு தவணை கட்ட அம்மா படும் பாட்டை பார்க்கும்போது, ரொம்ப வேதனையா இருக்கும். ஆனா நான் வேலைக் குப் போன பிறகு, எங்க குடும்பத்தோட நிலைமையை மாத்தியிருக்கேன். தங்கச்சியைப் படிக்க வைக்கிறேன். வீட்டுல மூணு பேரும் பெண்களா இருந்தாலும், நாங்க யாரையும் எதிர்பார்க்காம வாழ்றதே பெரிய வெற்றியா தோணுது. இப்போ எங்க குடும்பத்துக்கு நான்தான் அப்பா!’’

24 வயதினிலே..! - சுயசம்பாத்திய பெண்களின் தன்னம்பிக்கை வார்த்தைகள்

சுயவருமானம் என்பது பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல!

``24 வயசாகுது, மாசம் 60,000 ரூபாய் சம்பாதிக் கிறேன்’’ என்று மிடுக்காகச் சொல்கிறார், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள முனிசிபல் காலனி பகுதியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கிளினிக் நடத்தி வரும் கலைமகள் ரவி.

‘`எங்க அப்பா தேநீர் கடை நடத்திக்கிட்டு இருக்கார். பொருளாதார நெருக்கடிகளோடு தான் வளர்ந்தேன். கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்குனு சொல்ற மாதிரி, என்னோட வீஸிங் பிரச்னைக்கு இயற்கை மருத்துவம், யோகானு போக ஆரம்பிச்சு, அந்தத் துறையவே என் எதிர்காலம் ஆக்கிக்கிட்டேன்.

ப்ளஸ் டூ முடிச்சதும் நுழைவுத் தேர்வு எழுதி, கர்நாடக மாநிலம் மங்களூர்ல ஒரு கல்லூரியில இளநிலை இயற்கை மற்றும் யோக மருத்துவம் (Bachelor of Naturopathy & Yoga Science - BNYS) சேர்ந்தேன். படிச்சு முடிச்சதுமே அங்கயிருக்குற ஒரு மருத்துவ மனையில 20,000 ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு தஞ்சாவூர் திரும்பி, சொந்தமா கிளினிக் ஆரம்பிச்சேன். இயற்கை மருத்துவம், யோகாவோட நன்மைகள் பத்தி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினேன். இந்தச் சூழல்லதான் கொரோனா பிரச்னை வந்தது.

உணவு முறை, யோகா மேல மக்களுக்கு இயல்பாவே ஈடுபாடு வர, என் கிளினிக் நல்லா பிக்அப் அயிடுச்சு. ஜம்முன்னு சம்பாதிக்கிறேன். சுயவருமானம்ங்கிறது பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, பெண் களுக்கு அது தர்ற தன்னம்பிக்கை ரொம்பப் பெருசு!”

24 வயதினிலே..! - சுயசம்பாத்திய பெண்களின் தன்னம்பிக்கை வார்த்தைகள்

10 பேருக்கு வேலை கொடுக்குறோம்!

மதுரையைச் சேர்ந்த இரட்டை யர்கள் கார்த்திகா - ப்ரதீபா கல்லூரியில் படித்தபோது பொழுதுபோக்காகத் தொடங்கிய போட்டோகிராபி, இன்று

10 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு அவர்களை உயர்த்தி யுள்ளது.

“கல்லூரியில் படிக்கும்போதே போட்டோகிராபியில ஆர்வம் இருந்ததால டெக்னிக்குகளை கத்துக்கிட்டு புரொஃபஷனல் கேமரா வாங்கினோம். ஃபிரெண்ட்ஸ், உறவினர்கள்னு ஒரு வருஷம் ஃப்ரீயா எடுத்துக் கொடுத்தோம். எங்க புகைப் படங் களை சமூக வலைதளத்துல பகிர்ந்தப்போ, ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. காலேஜ் முடிச்சதும் என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வேலை தேடிட்டு இருந்தப்போ, நாங்க போட்டோகிராபி பிசினஸை ஆரம்பிச்சுட்டோம். ரெண்டு பேரும் போட்டோ, வீடியோனு வேலையைப் பிரிச்சுக் கிட்டோம்.

நாங்க சம்பாதிச்சு காசு கொண்டு வந்து கொடுத்தப்போ வீட்டுல ஆச்சர்யப்பட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா தொழில்ல வளர்ந் தோம். இப்போ சொந்தமா ஸ்டூடியோ வெச்சிருக்கோம். எங்ககிட்ட 10 பேர் வேலை பார்க் கிறாங்க. மாசத்துல 25 நாள்கள் வேலை இருக்கும். மதுரை மாதிரி ஒரு ஊர்ல போட்டோகிராபியில பொண்ணுங்க நாங்க இந்தளவுக்கு வளர்ந்துட்டு வர்றது ரொம்பப் பெருமையா இருக்கு. கடுமையா உழைக்கிறோம், மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறோம், குடும்பத்துக்கு சப்போர்ட் பண்றோம். கேர்ள்ஸ் பவர்!”

24 வயதினிலே..! - சுயசம்பாத்திய பெண்களின் தன்னம்பிக்கை வார்த்தைகள்

மகள்களும் பெற்றோரை பார்த்துக்கணும்!

‘`22 வயசுலேயே வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன்’’ என்கிறார், கோவையில் ஒரு தனியார் நிறுவனத் தில் எடிட்டோரியல் பிரிவு மேலாள ராகப் பணியாற்றும் ஆதிரை.

‘`அப்பா, அம்மா, நான், என் இரட்டை சகோதரி இதுதான் எங்க குடும்பம். சின்ன வயசுல இருந்தே, நல்லா படிச்சு வேலைக்குப் போக ணும், சுதந்திரமா இருக்கணும்னு சொல்லிதான் பெற்றோர் வளர்த் தாங்க. நான் பி.டெக் பயோ இன்ஃபோமேட்டிக்ஸ் முடிச்சப்போ, மேற்படிப்புப் படிக்க ஆசை. என் சகோதரி மேற்படிப்புப் படிக்க முடிவெடுத்ததால, குடும்பத்துக்காக நான் வேலையில் சேர்ந்துட்டேன்.

இப்போ நான் என் வருமானத்தில் குடும்பத்தைப் பார்த்துக்குறேன். சம்பாதிக்க ஆரம்பிச்சதுமே தங்கை படிப்பு, வீட்டுச் செலவு, சேமிப்புனு பொறுப்பும் வந்துடுச்சு. ஒவ்வொரு மாசமும் பட்ஜெட் போட்டு, பார்த்துப் பார்த்து செலவு செய்றேன். உறவினர்கள் மற்றும் வெளி வட் டாரங்கள்ல, என்னைப் பார்க்கும் பார்வை உயர்ந்திருக்கு.

இளைஞர்கள் ஒருகட்டம் வரை தான் பெற்றோர்கிட்ட உதவி வாங் கணும், அப்புறம் நாமதான் பெற் றோரை பார்த்துக்கணும். மகன்கள் தான் பெற்றோரைப் பார்த்துக் கணும்னு இல்ல, மகள்களுக்கும் அந்தக் கடைமை இருக்கு. நம்ம கனவு, திருமணம்னு எல்லாத்தையும் நம்ம சம்பாத்தியத்துல நிறை வேத்திக்கணும். சுயசம்பாத்தியம் வரும்போது, தன்னம்பிக்கை, பொறுப்புனு எல்லாமே நமக்கு வந்துடும். நம்ம மேலேயே நமக்கு மரியாதை ஏற்படும். ஆதிரை மேல இப்போ எனக்கு ரொம்பவே மரியாதை தெரியுமா?!’’

24 வயதினிலே..! - சுயசம்பாத்திய பெண்களின் தன்னம்பிக்கை வார்த்தைகள்

மனநிறைவா இருக்கு!

நெல்லை நகரில் பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் ‘எமெர்ஜென்சி கேர் அண்டு ரெக்கவரி சென்டரில்’ (ECRC) பணி யாற்றுகிறார். சமூகவியல் பட்டதாரி.

“எங்கப்பா துணிக் கடையில வேலை செய்யுறாங்க. அம்மா இல்லத்தரசி. அண்ணனுக்கு இப்போ தான் மருந்து விற்பனைப் பிரதிநிதி வேலை கிடைச்சது. தாத்தாவும் எங்க கூட வசிக்கிறாங்க. படிச்சு முடிச்ச துமே ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலையில சேர்ந்துட்டேன். எங்க குடும்பச் சூழ்நிலைக்கு அது ஊன்று கோலா அமைஞ்சது.

தமிழக அரசு, நெல்லை மாநகராட்சி மற்றும் ஆர்-சோயா தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் ஈசிஆர்சி மையத்தில் ஒரு வருஷத்துக்கு முன் வேலை கிடைச்சது. சாலைகள்ல சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட வங்களைக் கண்டுபிடிச்சு, மையத் துக்கு அழைத்து வந்து குளிக்க

வெச்சு, முடி வெட்டிவிட்டு, உணவு, உடை கொடுத்துப் பராமரிக்கிறோம். தேவையான மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யுறோம். மையத்துக்கு வரும்போது சிலர் ரொம்ப மூர்க்கமா நடந்துக்குவாங்க. கொஞ்சம் பொறுமையா கையாண்டா மன நலம் மேம்படுவாங்க. அப்புறம் அவங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து குடும்பத்துடன் சேர்த்து வைப்போம். இந்த வேலை எனக்கு ரொம்ப மனநிறைவா இருக்கு. குடும்பச் சுமையை இத்தனை

வருஷம் ஒற்றையாளா சுமந்துட்டு இருந்த அப்பாவோட கஷ்டங்களை இப்போ என்னால கொஞ்சம் குறைக்க முடியுறதை நினைக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு!’’

24 வயதினிலே..! - சுயசம்பாத்திய பெண்களின் தன்னம்பிக்கை வார்த்தைகள்

அடையாளத்தைக் கொடுத்த 24 வயது சுதந்திரம்!

“வேலைக்குப் போய் ஆசைப்பட்டதை, தேவையானதை வாங்கிக்கணுங்கிற நடுத்தரக் குடும்பப் பெண்களின் கனவு எனக்கும் இருந்துச்சு. என் உழைப்பாலும், முயற்சியாலும் அது நனவாகியிருக்கு. ஆமா, என்னுடைய 24 வயசுல பொருளாதாரத்துக்காக நான் யாரையும் சார்ந்தில்லைனு சொல்றது ரொம்ப கர்வமா இருக்கு” - பெருமையுடன் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஜா.

“படிப்புதான் நம் எதிர்காலத்துக்கான முதலீடுனு அப்பா அடிக்கடி சொல்வார். மிடில் கிளாஸ்ல பிறந்தவங்களுக்கு நினைச்சதும் எதுவும் கிடைச்சிடாது.

ஒரு பொருளை வாங்கணும்னா ஆயிரம் முறை யோசிக்கணும். குடும்பத்துல எல்லாருக்கும் தேவையானதை வாங்கிக் கொடுத்த பிறகு, அப்பா தனக்குன்னு எதுவும் வாங்காம வெறும் கையோடு, ஆனா சந்தோஷமா வந்த நாள்கள் நினைவிலிருக்கு. இதுதான், நான் நல்லா படிச்சு, வேலைக்குப் போய் சம்பாதிச்சு, என் குடும்பத்தைப் பார்த்துக்கணுங்கிற எண்ணத்தை சின்ன வயசுலயே என் மனசுக்குள்ள விதைச்சது.

காலேஜ் படிக்கும்போதே ஒரு ஐ.டி நிறுவனத்துல கேம்பஸ் இன்டர்வியூவுல செலெக்ட் ஆனேன். வேலைக்குச் சேர்ந்த போது எனக்கு 21 வயசு. சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, என் குடும்பத்தைப் பார்த்துக்கிறேன். என் அம்மாவுக்கு சாத்தியப்படாத நிதிச் சுதந்திரம் எனக்குக் கிடைச்சிருக்கு. நான் சம்பாதிக்கிறதால என்னுடைய கருத்துகளுக்கு முக்கியத் துவம் தர்றாங்க. செட்டிலான பிறகுதான் கல்யாணம்னு என் எதிர்காலத்தை

பிளான் பண்றதுலயும் எனக்கு சுதந்திரம் கிடைச்சிருக்கு. படிப்பும் பொருளாதார சுதந்திரமும் ஒரு பெண்ணுக்குக் கொடுக் குறது தன்னம்பிக்கையை மட்டுமல்ல, அவளுக்கான அடையாளத்தையும்தான்... அதுக்கு நானே உதாரணம்!’’