ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

2022 - டாப் 10 பெண்கள் - உலகம்

2022 - டாப் 10 பெண்கள் - உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
2022 - டாப் 10 பெண்கள் - உலகம்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் சக்தி வாய்ந்த் பெண்கள் பட்டியலில் தொடர்ந்து 4-வது முறையாக தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2022-ம் ஆண்டில் அரசியல், அறிவியல், கலை, சமூகம் எனப் பல்வேறு துறைகளில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த டாப் 10 பெண்களின் பட்டியல்.
உர்சுலா வான் டேர் லேயான்
உர்சுலா வான் டேர் லேயான்

ஜனநாயகத்தின் வேர் அறுபடவிடாமல் போராடிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய ஆளுமையாக அறியப்பட்டிருக்கிறார் ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வான் டேர் லேயான். ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்த முதல் வாரத்தில், ரஷ்யாவுடனான சென்ட்ரல் வங்கியின் வர்த்தகப் பரிமாற்றம், ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளி யில் பறப்பது, ரஷ்ய செய்தி நிறுவனங்கள் ஆகிய மூன்றுக்கும் அதிரடியாகத் தடைவிதித்து, `சுதந்திரம் விலைமதிப்பற்றது’ என்ற அறைகூவலுடன் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். 2022-ம் ஆண்டில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த பெண்களில் முன்னணியில் உள்ளார்.

ஓப்ரா வின்ஃப்ரே
ஓப்ரா வின்ஃப்ரே

செய்தி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி 50 ஆண்டுகளாக தொலைக்காட்சித் தொகுப்பாளராக பிரபலமானவர், 68 வயதாகும் ஓப்ரா வின்ஃப்ரே. 25 ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளி பரப்பான ‘தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’, மற்றும் இவர் தயாரித்து வெற்றி பெற்ற திரைப்படங்களில் கிடைத்த லாபத்தை மட்டும் மறுமுதலீடு செய்து 2 பில்லியன் டாலர்களுக்கும் மேல் சம்பாதித்துள்ளார். பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களிலும் நடித்துள்ள இவருக்கு புதிதாகச் சேர்ந்துள்ளது, ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் உலகின் பணக்காரப் பெண் என்ற பெருமை.

பில்லி எலிஷ்
பில்லி எலிஷ்

ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற முதல் 2கே கிட் என்ற பெருமையை இந்த வருடம் பெற்றிருக்கிறார், அமெரிக்கப் பாடகி பில்லி எலிஷ். 20 வயதான இவர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘நோ டைம் டு டை’ திரைப்படத்துக்கு தனது சகோதரருடன் சேர்ந்து இசையமைத்திருந் தார். 13 வயதிலிருந்தே இசையுடன் பயணிப்பவர்; இசை உலகின் உயரிய விருதுகள் அனைத்தையும் பெற்றுள்ளவர். தான் மோசமானவர் என்று தானே நினைத்துக்கொள்ளும் ‘இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ என்ற தீவிரப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கும் எலிஷ், தனது இசைத் திறமையால் ஹிப் பாப் உலகில் உயரம் தொட்டுள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 18 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

நவோமி லாங்
நவோமி லாங்

வடக்கு அயர்லாந்தின் சட்டத்துறை அமைச்சரான நவோமி லாங், ஒருவரின் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுப்பது, இணைய தளத்தில் ஆபாசமாக சித்திரித்துப் பதிவிடுவது, மூர்க்கமான பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு சித்ரவதை செய்வது உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்தி அப்ளாஸ் அள்ளினார். இதனால் கொலை மிரட்டல்களைச் சந்தித்த அவர், பெண் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். “பொது இடங்களில் பாலியல் அத்துமீறல் நடைபெறுவதற்கான சூழலைத் தகர்த்தெறிய வேண்டும்” என்கிறார் உறுதியுடன்.

கிறிஸ்டைன் லகார்டே
கிறிஸ்டைன் லகார்டே

ஐரோப்பாவின் 17 உறுப்பு நாடுகளின் நிதிக் கொள்கைகளை நிர்வகிக்கும் உலகின் முக்கியமான நடுவண் வங்கியான ஐரோப்பிய மத்திய வங்கியின் முதல் பெண் தலைவர் கிறிஸ்டைன் லகார்டே. பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் பெண் தலைவர், ஜி8 உறுப்பு நாடுகள் ஒன்றின் முதல் பெண் பொருளாதார விவகார அமைச்சர் எனப் பல்வேறு ‘முதல்’ சாதனைகளுக்குச் சொந்தக்காரர். பெருந்தொற்று காலத்தில் யூரோவின் மதிப்பு கூடுதல் சரிவைச் சந்திக்காமல் நிர்வகித்தது இவரது சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு மைல்கல். ஏக போக தனியுரிமைக்கு எதிரானவர், தொழிலாளர் நல னுக்காகச் செயல்பட்ட வழக்கறிஞர். இந்த வருடத்தின் சக்திவாய்ந்த பெண்ணாக அறியப்படுகிறார்.

யூலியா பைவ்ஸ்கா
யூலியா பைவ்ஸ்கா

உக்ரைன் போரில் காயமடைந்த பொதுமக்கள், ராணுவ வீரர்களுக்கு சிகிச்சையளிக்க `டைராஸ் ஏஞ்சல்’ தன்னார்வ மருத்துவ யூனிட்டைத் தொடங்கி சேவை செய்த யூலியா பைவ்ஸ்கா, துணிச்சல் மற்றும் தியாகத்தின் மனித உருவம். காயமடைந்த வர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தனது உடலில் ரகசிய கேமராவைப் பொருத்தி அவர்களின் அவல நிலையை ஆவணப்படுத்தி ஊடகங்களுக்கு வெளி யிட்டு, ரஷ்யாவின் குரூர முகத்தை வெளிக்காட்டினார். அந்நாட்டின் மரியுபோல் என்ற நகரத்திலிருந்து வெளியேறிய பொதுமக்களுக்கு உதவி செய்யும்போது ரஷ்ய படையால் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.

எல்னாஸ் ரெகாபி
எல்னாஸ் ரெகாபி

தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச மலையேற்றப் போட்டியில் பங்கேற்ற 33 வயதாகும் இரானிய வீராங்கனை எல்னாஸ் ரெகாபி, ஹிஜாப் அணியாமல் பங்கேற்றதால் இரானிய ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக சர்ச்சை எழுந்தது. ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிரான போராட்டக்காரர்களின் ஆதரவு இவருக்குக் கிடைத்தது. நாடு திரும்பிய வருக்கு விமான நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பும் அளித்தனர். “போட்டியின்போது எதிர்பாராதவிதமாக ஹிஜாப் கீழே விழுந்துவிட்டது” என்ற இவரின் விளக்கம், அரசின் கட்டாயத்தின் பேரில்தான் நடத்தது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. சர்ச்சையினால் கவனம் ஈர்த்தவர், தன் துணிவால் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தார்.

ஜேன் ரிக்பை
ஜேன் ரிக்பை
NASA/Bill Ingalls

நாசா வானியல் இயற்பியலாளரான ஜேன் ரிக்பை, பால்வெளி மண்டலத் தின் பரிணாமம் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருபவர். உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப்பின் முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர். நூற்றுக்கும் மேற்பட்ட வானியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளவர், `2022-ம் ஆண்டின் எல்.ஜி.பி.டி.க்யூ அறிவியலாளர்’ (2022 LGBTQ+ Scientist of the Year) ஆகக் கொண்டாடப்பட்டார். “நான் மாணவராக இருந்த போது, LGBTQ சமூகத்திலிருந்து ரோல் மாடல் என்று யாரும் இல்லை. இளம் LGBTQ விஞ்ஞானிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, அற்புத மான அறிவி யலைச் செய்யுங்கள். கனிவானவர்களாக இருங்கள்” என்கிறார் ஜேன்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் சக்தி வாய்ந்த் பெண்கள் பட்டியலில் தொடர்ந்து 4-வது முறையாக தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர், பிபிசி உலக சேவை, ஐரோப்பிய வேளாண் பொறியாளர்கள் சங்கம், இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் எனப் பயணித்து வந்திருப்பவரின் கைகளில் இப்போது நாட்டின் மிக முக்கியப் பொறுப்பு. மேலும் இந்தப் பட்டியலில் இணைந்து, பைகான் பார்மா நிறுவனத்தின் செயல் தலைவர் கிரண் மசும்தார் ஷா, நியாகா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் பல்குனி நய்யார், ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் ரோஷினி நாடார் மல்கோத்ரா, செபியின் தலைவர் மதாபி புரி புச், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் முதல் பெண் தலைவரான சோமா மண்டல் ஆகிய ஆறு இந்தியப் பெண்கள் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளனர்.

அசோனேலே கோட்டு
அசோனேலே கோட்டு

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அசோனேலே கோட்டு, தான் பொருத்தியிருந்த கருத்தடை சாதனத்தை அகற்ற நினைத்தபோது, அதுபற்றிய ஆலோ சனை கொடுக்க யாரும் இல்லாமல் தவித்திருக்கிறார். அப்போது அவர் மனதில் உதித்ததுதான் Fem Connect என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கான விதை. பாலியல் மற்றும் கருத்தரிப்பு தொடர்பான டெலிமெடிசின் ஆலோசனைகள், மாதவிடாய் வறுமையைப் போக்குவதற்கான சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட சாதனங்களை ஆன்லைன் மூலம் டெலிவரி செய்வது ஆகிய செயல்களால் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். பாலியல் தொடர்பான விஷயங்கள் பற்றி சமூகத்திலிருக்கும் தவறான நம்பிக்கைகளை உடைத்தெறிவதுதான் நோக்கம் என்கிறார்.