
சென்னை: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 7 அகதிகளை விடுவிக்க தமிழக செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கியூ பிரிவு காவல்துறையினர் அளித்துள்ள பரிந்துரையின் பேரில் தமிழக செயலாளர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
விடுவிக்கப்படும் அகதிகள்,பராபரன்,தி.சதீஷ் வி.சதீஷ்,சண்முகநாதன்,சேகரன், விக்னேஷ்வரன்,டிஸ்கி முகமது ஆகியோர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
##~~## |
இவர்களது விடுதலைக்காக, பல்வேறு போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.