ஸ்பெஷல்
Published:Updated:

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“தொழில்நுட்பம் வளரும்போது புதிது புதிதாக நோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. வீடு, அலுவலகம் என எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது, நம் கண்ணின் மட்டத்தில் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் இருக்க வேண்டும். உயரம்

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால், கழுத்து வலி வரலாம். வீட்டில் டி.வி பார்க்கும்போது, கோணலாகத் தலையைவைத்துப் பார்ப்பது, பெரிய தலையணையை வைத்து படுத்தபடி பார்ப்பது என்று, நாமாகவே கழுத்துவலியை வரவைத்துவிடுகிறோம்” என்கிறார் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் ராஜ் கண்ணா.

“முழங்கால் மூட்டு வலி வயதானவர்களுக்கு மட்டும் வருவது இல்லை. 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும்கூட வரலாம். நாற்காலியில் அல்லது தரையில் உட்கார்ந்து எழுந்திருக்கும்போதோ, மாடிப்படி ஏறி இறங்கும்போதோ, முழங்கால் மூட்டின் முன்பகுதியில் வலி இருந்தால், அதுதான் மூட்டு வலியின் ஆரம்ப அறிகுறி. அப்படி இருக்கும்போதே, அருகில் உள்ள எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணரை அணுகினால், இந்தப் பிரச்னையை எளிதில் குணப்படுத்தலாம். மூட்டுத் தேய்மானம் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், கீழே உட்காருவது, மாடிப்படி ஏறி இறங்குவது, இந்தியன் டைப் கழிப்பறைகளைப் பயன்படுத்துவது போன்ற செயல்களை அதிகம் செய்வதால், மூட்டுத் தேய்மானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.” என்கிறார் டாக்டர்.

•  கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்ன?

•  கழுத்து வலி ஏன் ஏற்படுகிறது?

•  முதுகுவலிக்கான காரணங்கள் என்ன?

•  கால் மூட்டுத் தேய்மானத்தின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

•  மூட்டுத் தேய்மானத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்ன?

அன்பு வாசகர்களே, பிப்ரவரி 1 முதல் 8-ம் தேதி வரை தினமும்

என்ற எண்ணுக்கு போன் செய்தால், எலும்பு மூட்டுகளில் ஏற்படும் பிரச்னைகள், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் ராஜ் கண்ணா.

“காலில் முடிச்சுமுடிச்சாக நரம்பு பின்னிக்கொண்டிருக்கிறது என்று பேச்சுவழக்கில் சொல்வார்கள். அது நரம்பு அல்ல,  இதயத்துக்குக்  கெட்ட ரத்தத்தைக்
கொண்டுசெல்லும் ரத்தக் குழாய். இப்படி முடிச்சுமுடிச்சாக இருப்பதை ‘வெரிகோஸ் வெயின்ஸ்’ (Varicose veins) என்போம். பொதுவாக நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பவர்கள், கர்ப்பிணிகள், மெனோபாஸ் ஆனவர்கள் போன்றோருக்கும், மரபியல்ரீதியாகவும் வெரிகோஸ் வெயின் பிரச்னை வரலாம்” என்கிறார் வாஸ்குலார்  அறுவைசிகிச்சை நிபுணர் சரவணன்.

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“வெரிகோஸ் வெயின் பிரச்னை வந்தால், காலில் அரிப்பு, கால் வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். கணுக்காலின் உள் பகுதியில் புண் ஏற்படும். அந்தப் பகுதி, கருப்பாக மாறிவிடும். இதைக் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் எளிது. வாஸ்குலர் அறுவைசிகிச்சை நிபுணரை அணுகினால் அவர்கள் டாப்ளர் என்ற கருவியைப் பயன்படுத்தி, கால் ரத்தக் குழாயில் பாதிப்பு உள்ளதைக் கண்டறிவார்கள். ஆரம்பநிலையில் கண்டறிந்தால், அதை மருந்து மாத்திரை, ஸ்டாக்கிங் என்ற சாக்ஸ் அணிவதன் மூலம் குணப்படுத்த முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு ஓப்பன் முறையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தற்போது ரேடியோ ஃப்ரீக்குவன்ஸி அபலேஷன் (Radiofrequency ablation), லேசர் என நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. இதில், சிறு துளையிட்டு, ரத்தக் குழாயில் கம்பி போன்ற அமைப்பைச் செலுத்தி, ரேடியோ ஃப்ரீக்குவன்ஸியைச் செலுத்தி குழாயை ஒட்டிவிடுவோம். அசுத்த ரத்தமானது தசைகளுக்கு உள்ளாகச் செல்லும் மற்றொரு குழாய் வழியே மேலே செல்லும். இந்த அறுவைசிகிச்சையை டே கேர்(Day care) முறையில் செய்கிறோம். காலை வந்தால் மாலையில் வீடு திரும்பிவிடலாம். இரண்டே நாட்களில் வேலைக்குச் செல்லலாம்!”

•  வெரிகோஸ் வெயின் என்றால் என்ன?

• அறிகுறிகள் என்ன?

•  யாருக்கு வெரிகோஸ் வெயின் பிரச்னை வரும்?

•  நவீன சிகிச்சைமுறைகள் என்ன?

• தவிர்க்க என்ன வழி?

அன்பு வாசகர்களே, பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரை தினமும்

என்ற எண்ணுக்கு போன் செய்தால், வெரிகோஸ் வெயின் ஏன் ஏற்படுகிறது, தவிர்க்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விரிவாகப் பேசுகிறார் வாஸ்குலார் அறுவைசிகிச்சை நிபுணர் எஸ்.சரவணன்

* அழைப்பு சாதாரணக் கட்டணம்

- பா.பிரவீன் குமார், குரு அஸ்வின்
படம்: க.பாலாஜி