மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குற்றம் புரிந்தவர்

குற்றம் புரிந்தவர்

குற்றம் புரிந்தவர்

உறவோடு உறவாக..!

ரிக்கி கோமாவுக்குப் போனதும், எலிசபெத் மீண்டும் கிடைக்கப்போவதே இல்லை என்று ஸ்மார்ட் தம்பதியினர் சோகத்தில் ஆழ்ந்திருக்க.. எலிசபெத்தின் தங்கை கேதரின் பெற்றோரிடம் ஓடி வந்தாள்.

'அப்பா, அன்றைக்கு நான் சொன்ன அடையாளம் தப்பு. அவன் குனிந்திருந்தபோது பார்த்து குள்ள​மானவன் என்று சொல்லிவிட்டேன்.. இப்போதுதான் நினைவுக்கு வருகிறது.. ஹாலில் பார்த்தபோது உயரமாக இருந்தான்.. அக்காவைத் தூக்கிப் போனவன் எம்மானுவேல்..'

எம்மானுவேல் அவர்கள் வீட்டுக் கூரையில் சில மராமத்து வேலைகள் செய்தவன். உடனடியாக எட்ஸ்மார்ட் காவல் துறைக்கு இந்தத் தகவலைக் கொடுத்தார். ஆனால், ஒரு சிறுமி, திடீரென்று நினைவு மீண்டதாகச் சொன்ன அடையாளத்தை போலீஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

காவல் துறையின் மெத்தனமான போக்கு எட்ஸ்மார்ட்டுக்கு வருத்தமளித்தது.

'ஜான் வால்ஷைப் பார்ப்போமே..!' என்றாள், எலிசபெத்தின் தாய்.

ஜான் வால்ஷ், குற்றவாளிகளைப் பற்றி அலசும் 'Americas most wanted’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அமைப்பாளர். எலிசபெத்தின் பெற்றோர் அவரைச் சந்தித்தனர்.

'கோமாவில் இருக்கும் ரிக்கி குற்றவாளி இல்லை. எம்மானுவேல் என்ற நாடோடிதான் தன் சகோதரியைக் கடத்தியவன் என்று கேதரின் சொல்கிறாள்..' என்று வால்ஷ் அந்த நிகழ்ச்சியில் புதிய தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

2003. பிப்ரவரி. எம்மானுவேல் பற்றி கிடைத்த வர்ணனைகளை வைத்து வரையப்பட்ட ஒரு கோட்டோவியம் அந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த டெரிக் தாம்ஸன் என்பவன் அதிர்ந்தான். உடனடியாக தன் சகோதரன் மார்க்கை அழைத்தான். இருவரும் தொலைக்காட்சி நிலையத்துக்கு போன் செய்தனர்.

'எங்கள் அம்மா வாண்டா பார்ஸியின் புதிய கணவன் டேவிட் மிட்ஷலின் படம்தான் அது..' என்றார்கள்.

மிட்ஷலின் முன்னாள் மனைவி டெபி என்பவளும் இந்த நிகழ்ச்சியில் எம்மானுவேல் என்று காட்டப்பட்டது தன் முன்னாள் கணவன்தான் என்று கருதினாள். தொலைக்காட்சி நிலையத்தை அழைத்து, 'அவன் கிறுக்கன். சொந்த மகளிடமே தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்தவன்' என்று சொன்னாள்.

நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்தில், மிட்ஷல் சிறு குற்றத்துக்​காக, காவல் துறையின் பிடியில்தான் சிக்கியிருந்தான். ஆனால், எம்மானுவேல் என்பதற்கு பதில் 'இம்மானுவேல்’ என்று ஒரு காவலர் பிழையாக எழுதியதால், கணினி தேடியபோது, அவனைத் தவறவிட்டது.

மிட்ஷலும், அவன் மனைவி வாண்டா பார்ஸியும் பள்ளத்தாக்கை ஒட்டியிருந்த வனப்பகுதியில் ஒரு பதுங்குமிடத்தை அமைத்திருந்தனர்.

அங்கு, எலிசபெத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 'இந்த நேரத்தில் தோழிகள் எங்கே விளையாடிக்கொண்டிருப்பார்கள், எதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்..’ என்று நினைப்பு வரும்போதெல்லாம், எலிசபெத்தின் கண்களில் கண்ணீர் நிரம்பும்.

குற்றம் புரிந்தவர்

மிட்ஷல் தம்பதி எலிசபெத்துக்கு மது ஊற்றிக்கொடுத்து, இரண்டு மாதங்களில் அவளை மந்தமாக்கினர். எலிசபெத்துடன் தினம்தோறும் மிட்ஷல் பலமுறை உடலுறவு கொண்டபோதும், நல்லவேளை அவள் கர்ப்பம் தரிக்கவில்லை.

மிட்ஷல் தொடர்ந்த மதப் பிரச்சாரங்கள் மூலம் எலிசபெத் மூளைச்சலவை செய்யப்பட்டாள். ஒரு கட்டத்தில், அவள் தன் நிலை இழந்தபின், அவளை வெளியில் அழைத்துச் செல்ல ஆரம்பித்தனர், அவர்கள்.

யாராவது கேட்டால், 'நான் ஜோசப். இது என் மனைவி மேரி. இது மகள் அகஸ்டின்..' என்று மிட்ஷல் பொய் சொல்வான்.

பெண்கள் இருவரும் தங்களுடைய முகம் வெளியில் தெரியாதபடி முகத்திரை அணிந்தே வெளியிடங்களுக்கு வருவார்கள். அழுக்கான, கந்தலான, வெள்ளை அங்கிகளில் இருப்பவள் கடத்தப்பட்ட எலிசபெத் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை.

கடவுளின் பெயரைச் சொல்லி மிட்ஷல் அடிக்கடி உரக்க போதனைகள் செய்த காரணத்​​தினால், அவனைப் பெரும்

தொந்தர​வாகக் கருதி, கடைக்காரர்கள் காவல் துறைக்குப் புகார் அளித்தனர்.

சர்ச்சுக்கு அடிக்கடி போன மிட்ஷலின் பார்வை, பாதிரியாரின் 12 வயது மகள் மீது படிந்தது. அவளையும் தன்னுடைய மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, பாதிரியாரிடம் இயேசு பற்றி நிறைய பேசி, அவருடைய நன்மதிப்பைப் பெற்றான். ஆனால், அவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழையப் பார்த்தபோது, அலாரம் ஒலித்ததால், முயற்சி பலிக்காமல், அங்கிருந்து ஓடிவந்துவிட்டான்.

இந்தநிலையில், 2003, பிப்ரவரி 15 அன்று போலீஸுக்கு ஒரு போன் வந்தது.

'இங்கே ஒரு பள்ளிக்கூடத்துக்குள் ஜன்னல் வழியே அத்துமீறி ஒருவன் நுழைந்திருக்கிறான்..'

போலீஸ் வந்து பார்த்தபோது, மிட்ஷல் வகுப்பறையில் தரையில் படுத்துத் தூங்கிக்​கொண்டிருந்தான். பெயர், முகவரி, பிறந்த தேதி எல்லாவற்றுக்கும் பொய்யான விவரங்கள் கொடுத்தான். ஆனால் கைரேகைகள் உண்மையான அடையாளத்தைக் காட்டின.

அன்றைக்குத் தன் கணவன் திரும்பி வராததும், வாண்டா பார்ஸி பதற்றமடைந்தாள்.இயேவின் சிலுவைக்கு முன் மண்டியிட்டு, பல மணி நேரங்கள் கண்ணீர்விட்டு, பிரார்த்தனை செய்தாள்.

போலீஸ் உஷாராக இல்லாததால், அத்துமீறிய குற்றத்துக்காக 250 டாலர் அபராதம் விதித்து, நீதிமன்றம் மிட்ஷலை விடுவித்துவிட்டது.

வாண்டா பார்ஸியின் மகன்கள் அனுப்பி வைத்த மிட்ஷலின் புகைப்படங்கள், மார்ச் மாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயின.

ஒரு வாரம் கழித்து, ஓர் உணவு விடுதியிலிருந்து போலீஸுக்கு போன் வந்தது.

'உணவருந்த வரும் வாடிக்கையாளர்களை மூன்று நபர்கள் பிச்சை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்..'

போலீஸ் வந்தது. வாண்டா பார்ஸியும், எலிசபெத்தும் முகத்திரை அணிந்திருந்ததால், அடையாளம் தெரியாமல் போலீஸ் அவர்களை அங்கிருந்து விலகச் சொன்னது. தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிட்ஷலைப் பார்த்திருந்த பலர் அடையாளம் சொன்னதும் போலீஸ் உஷாரானது.

'என் பெயர் மார்ஷல்' என்று அவன் சொன்னான்.

'அடையாளங்களைக் காட்டு..'

'கடவுளின் தூதர்களிடம் அடையாளம் கேட்காதே..'

அசல் கூந்தலை மறைத்து வேறு நிறத்தில் விக் வைத்திருந்த எலிசபெத்தைப் பார்த்ததும், காவல் அதிகாரிக்கு சந்தேகம் பிறந்தது. எலிசபெத்தைப் பிரித்து தனியே அழைத்துப் போய் விசாரித்தார்.

'உன்னுடைய பெற்றோர் யார்..?'

எலிசபெத் திணறினாள்.

குற்றம் புரிந்தவர்

'இது யார் தெரிகிறதா, பார்...' என்று அதிகாரி ஒரு போஸ்டரை அவளிடம் காட்டினார். 'காணவில்லை’ என்று எலிசபெத்தின் முகம் அச்சான போஸ்டர். அதைப் பார்த்ததும், அவள் கண்களில் கண்ணீர் பொங்கியது.

'எலிசபெத் ஸ்மார்ட்.. உன் பெற்றோரைப் பார்க்க விரும்புகிறாயா..?'

எலிசபெத் கண்ணீருடன் தலையசைத்தாள்.

எட்ஸ்மார்ட்டுக்குத் தகவல் போனது. பதறியடித்துக்​கொண்டு ஓடி வந்தார்.

எலிசபெத்​தைப் பார்த்ததும், திகைத்துப் போனார். அப்படியே அவளை அள்ளி அணைத்தார்.

'எலிசபெத்..! என் கண்ணே, எங்கே போனாய் நீ..?'

எலிசபெத் அவர் தோளில் முகம் புதைத்தாள். குமுறி அழுதாள். குடும்பத்தினரைப் பார்த்ததும், பழைய நினைவுகள் அவளுக்கு அலைகளாக மோதின.

'நீ ஏன் தப்பிக்க முயற்சி செய்யவில்லை, என் செல்லமே..?'

'தப்பித்தால், உன்னுடைய குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரையும் தேடி வந்து கொல்வேன் என்று மிட்ஷல் மிரட்டியிருந்தான். எத்தனை வருடங்கள் கழித்துத் திரும்பினாலும், நீங்கள் என்னை ஏற்பீர்கள் என்று நம்பிக்கையிருந்தது. ஒருபோதும் உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது, காத்திருப்பதுதான் முக்கியம் என்பதால், இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு அவர்களுடன் வாழ்ந்தேன், அம்மா..' என்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

'ஐயோ, எத்தனை வருடங்கள் அப்படி வாழ்ந்திருக்க முடியும்..?'

'மிட்ஷலுக்கு 48 வயது. வாண்டா பார்ஸிக்கு 56 வயது. என்றாவது ஒரு நாள் அவர்கள் இறந்துதானே ஆக வேண்டும் என்றுகூட நினைத்ததுண்டு, அம்மா..'

உடலளவிலும், மன அளவிலும் நிறைய மாற்றங்​கள் ஏற்பட்டிருந்தாலும், பழைய வாழ்க்கைக்கு எலிசபெத் வெகு சீக்கிரம்

திரும்பி​னாள். சுறுசுறுப்புடன் தன் அறையைச் சுத்தம் செய்வதிலிருந்து, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள்.

மிட்ஷல், வாண்டா பார்ஸி இருவரும் கைதாயினர். இளம்பெண்ணைக் கடத்திச் சென்றது, அவளுடன் வன்புணர்ச்சியில் ஈடுபட்டது, அவளை மூளைச்சலவை செய்தது என்று பல குற்றங்கள் மிட்ஷல் மீது சுமத்தப்பட்டன.

குறுக்கு விசாரணை தொடங்கியது.

'உன் முகவரி என்ன..?'

'இந்தப் பூமியில் இருக்கும் சொர்க்கமே என் முகவரி..'

'உன் தரப்பில் சாட்சி சொல்ல யார் வருவார்கள்..?'

'இயேசு வருவார்..'

நீதிமன்றத்தில் இதே ரீதியில்தான் அவர்கள் அளித்த பதில்கள் இருந்தன.

'கணவன், மனைவி இருவரும் மனநலம் குன்றியவர்களாகத் தெரிகிறார்கள். முதலில் சிகிச்சை அளியுங்கள். பிறகு, தண்டனை பற்றிப் பேசலாம்...' என்றார், நீதிபதி.

சிகிச்சை முடிந்து, ஒரு வழியாக மிட்ஷலுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அவன் மனைவி வாண்டா பார்ஸிக்கு 15 வருடம் சிறைவாசமும் தீர்ப்பானது.

காணாமல் போயிருந்த ஒன்பது மாத அனுபவங்கள் பற்றி பிற்பாடு எலிசபெத் புத்தகமாக எழுதினாள்.

இன்றைக்கு பட்டொளி வீசும் பாவையாக மலர்ந்திருக்கும் எலிசபெத், 'என் அப்பாவை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த அந்தக் கணம், என் இதயத்தில் எழுந்த பேரானந்தத்தை அனுபவிக்கும் வாய்ப்பு, ஆயுள் முழுவதும் காத்திருந்தாலும் உங்களில் பலருக்குக் கிடைக்காது' என்கிறாள்.

'மிட்ஷல் ஓர் அரக்கன். என்னுடைய வாழ்விலிருந்து ஒன்பது மாதங்களைத் திருடியவன். அவனுக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டுமென்றால், நான் ஆனந்தமாக வாழ்ந்து காட்ட வேண்டும். என் வாழ்விலிருந்து நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒளிந்திருக்கும் மாபெரும் சக்தியை உயிர்ப்பித்துவிட்டால், எப்பேர்ப்பட்ட  பலவீனங்களையும் உதறி, எதிர்ப்புகளை சமாளித்து வெற்றிகண்டு​விடலாம்' என்று உறுதியுடன் சொல்கிறாள் எலிசபெத் ஸ்மார்ட்.

- குற்றாம் தொடரும்

கெஜ்ரிவாலின் தைரியம்!

கடிதங்கள்

சாமானியர்களைத் துணையாகக் கொண்டு டெல்லியில் ஆட்சியைப் பிடித்த கெஜ்ரி​வாலின் தைரியம் பாராட்டுக்குரியது. எதிர்வரும் காலங்களில் அவர் நல்லாட்சி நடத்தி, மக்களின் நம்பிக்கையைத் தக்க வைத்து, பெற்ற வெற்றிக்குப் புகழ் தேடித்தர வேண்டும்.

- ரேவதிப்ரியன், ஈரோடு-1.

காவல் துறை அதிகாரியையும் தேர்தல் அதிகாரியையும் தேர்தல் கமிஷன் மாற்றிய​போதே தெரியவில்லையா, எந்த லட்சணத்தில் தேர்தல் கமிஷன் செயல்பட்டு இருக்கிறது என்று. ஆக, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேர்தல் கமிஷன் என ஒன்று செயல்பட்டதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்).

ரியக்கடவுள்கள் இனி எங்களுக்கு வேண்டாம். ராமனை வணங்க மாட்டோம். ராவணன்தான் எங்கள் வழிபாட்டுக்குரியவர் என்று சூளுரைக்கிறார் சீமான். ஆனால், இதிகாசத்தைப் புரட்டிப் பார்த்தால், ராமன் சத்ரியனாகவும் ராவணன் ஆரியனாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்!

- பிருந்தா சுந்தரம், வடபழநி.