Published:Updated:

’தோஸ்து படா தோஸ்து...’: இந்தியாவுடன் நட்புபாராட்டும் அமெரிக்கா!

’தோஸ்து படா தோஸ்து...’: இந்தியாவுடன் நட்புபாராட்டும் அமெரிக்கா!
News

'உலகத்திலேயே, இந்தியாவின் நம்பகமான நட்பு நாடாக இருப்பது அமெரிக்கா தான்’ என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

 முதன்முறையாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இதுகுறித்து, நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் டில்லர்சன் அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், “அமெரிக்காவின் மிகச் சிறந்த நட்பு நாடாக இந்தியா உள்ளது. இதே போலத்தான் இந்தியாவின் மிகச்சிறந்த நம்பகம் மிக்க நட்பு நாடாக அமெரிக்கா உள்ளது. இதுபோல அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் சீனா வன்முறையில் ஈடுபட்டுவருகிறது. இது முறையல்ல”என்றார்.

மேலும் டில்லர்சன் கூறுகையில், “சீனாவின் நடவடிக்கைகள் முற்றிலும் வன்முறை நிறைந்ததாகவே உள்ளது. சீனாவுடன் நட்புக்கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், தென்சீனக் கடல் பகுதியில், சீனாவின் நடவடிக்கைகள் சரியல்ல. இது போன்ற வன்முறைச் செயல்களுக்கு எதிராகத் தொடர்ந்து அமெரிக்கா போராடும். இம்மாதிரியான சூழல்களில், அமெரிக்காவுடன் இந்தியாவும் நின்று போராடும் என எதிர்பார்க்கிறோம். மேலும், பரந்து விரிந்த பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதும் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கடமையாகும்” என்றார்.