பறக்கும் கார்!
காமிக்ஸ் புத்தகங்களில் இருந்து ஜேம்ஸ்பாண்ட் படம் வரை வெகு காலமாக இடம் பிடித்திருக்கும் கற்பனை விஷயம், பறக்கும் கார். இன்னும் இரண்டு வருடங்களில் அந்தக் கற்பனையை நிஜமாக்கிவிடுவோம் என்கிறது, ‘ஏரோமொபில்’ (AeroMobil) என்ற நிறுவனம். ஐரோப்பாவின் ஸ்லோவாகியாவைச் சேர்ந்த ஏரோமொபில், சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தப் பறக்கும் காரின் மாதிரி வடிவத்தை வெளியிட்டது.

இந்த காரை நகருக்குள் சகஜமாக ஓட்டிச் செல்லவும், நகருக்கு வெளியே அல்லது விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து இறக்கையை விரித்துப் பறந்து செல்லவும் முடியும் என்று அறிவித்துள்ளது.
இந்தப் பறக்கும் கார், 700 கிலோமீட்டர் வரை தொடர்ந்து பறக்கும். தரையில் இருந்து வானுக்குக் கிளம்பும் வேகம், 81 mph. வானை எட்டியதும் தானாகவே இலக்கை நோக்கிச் செல்லும் ஆட்டோ பைலட் முறையும் இந்த காரில் இணைக்கப்பட உள்ளது. இதில், இருவர் பயணிக்கலாம்.

2017-ம் ஆண்டு சந்தைக்கு வரும் எனச் சொல்லப்படும் இந்தப் பறக்கும் காருக்கு, இப்போதே பலரும் அட்வான்ஸ் புக்கிங் செய்திருக்கிறார்கள்.
இந்த காரின் எண்ணிக்கை பெருகி, வானத்தில் டிராஃபிக் ஜாம் ஆகாமல் இருந்தால் சரி!
ஆர்.நடராஜன்

சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.