மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

அறிவோம் இவர்களை!
http://tamilnaduthyagigal.blogspot.com

விகடன் வரவேற்பறை

ந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு புரட்சியாளனின் பெயரையும் வரலாற்றில் பதியவைக்கும் வலைப்பூ முயற்சி! ஆஷ் கொலையில் தேடப்பட்டு வந்த மாடசாமிப் பிள்ளை, தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை முன்வைத்த பொட்டி ஸ்ரீராமுலு, பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி என சென்ற தலைமுறையின் முக்கியமான பல போராளிகளைப் பற்றியும் வைக்கம் போராட்டம், சென்னை சதி வழக்கு போன்ற வரலாற்றுச் சம்பவங்களையும் விரிவாகத் தொகுத்து அளித்திருக்கிறார்கள்!

திமிறி எழு
எழுத்து, இயக்கம்: ஈசுவர சந்தானமூர்த்தி
    வெளியீடு: தாய்மண் அறக்கட்டளை

விகடன் வரவேற்பறை

ம்பேத்கர் எந்தச் சூழலில் இந்து மதத்தின் மேல் அதிருப்திகொண்டு பௌத்தத்தைத் தழுவத் தீர்மானித்தார் என்பதை விளக்கும் படம். தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், சித்திரிக்கப்பட்ட காட்சிகள் மூலம் விளக்கப்படுகின்றன. அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட அருங்காட்சியகக் காட்சிகள் தத்ரூபப் பதிவு. அம்பேத்கரின் 'நவயானா பௌத்தம்’ குறித்து அறியாதவர்கள் இந்த ஆவணப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும்!

வனம் எழுதும் வரலாறு  
மாவோயிஸ்ட் கெரில்லாக்களுடன் - சத்நாம்
வெளியீடு: விடியல் பதிப்பகம், 88, இந்திரா கார்டன் 4-வது தெரு, உப்பிலிபாளையம், கோயம்புத்தூர் - 15.
பக்கங்கள்: 256  விலை:

விகடன் வரவேற்பறை

130

விகடன் வரவேற்பறை

காடுகளில் ஆயுதப் பயிற்சியும் அரசியல் பயிற்சியும் மேற்கொள்ளும் மாவோயிஸ்ட் கெரில்லாக் களுடனான தனது அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் சத்நாம். பழங்குடிகள், மாவோயிஸ்ட்டு கள் - இருவர் குறித்தும் பொதுவாக இருக்கும் மனப் பதிவுகளை உடைக்கும் புத்தகம். ஆயுதம் ஏந்தியதாலேயே கொலைகாரர்களாகவும் தீவிரவாதிகளாகவும் சித்திரிக்  கப்படுபவர்களின் பின்னால் மனிதநேயமும் எளிமையும் விளங்குவதை ஒவ்வோர் அத்தியாயமும் சொல்கிறது. குறிப்பாக, உடற்பயிற்சிக்கு வரும் படை அணிகளை 1-ல் இருந்து 20 வரை மட்டுமே எண்ணிவிட்டு, பிறகு மீண்டும் 1-ல் இருந்து எண்ணத் தொடங்குவதற்குக் காரணம் கோண்டு பழங்குடிகளின் எழுத்தறிவின்மை என்பது நெகிழ வைக்கும் உதாரணம்!

யோகா - சில தகவல்கள்! http://www.a2zyoga.com/

விகடன் வரவேற்பறை

ண் சோர்வில் இருந்து விடுபட, முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெற என விதவிதமான ஆசனங்கள். 'யோகா செய்தால் வெஜிடேரியன் உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமா?’ என்பது போன்ற சந்தேகங்களுக்கும் இங்கே பதில் உண்டு!

வேலூர் மாவட்டம்  இசை: சுந்தர் சி.பாபு
வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

நா.முத்துக்குமாரின் வரிகளில் ஒலிக்கும் 'அடிக்குது அடிக்குது’ பாடல் ஆடத் தூண்டும் ரகம். ஹரிஹரன் - ஸ்ருதி குரல்களில் வரும் 'வானம் எல்லாம்’ பாடல் ஃபாஸ்ட் மெலடி. பாட்டின் மெட்டிலேயே ஒலிக்கும்  சாக்ஸஃபோன் இசை கவர்கிறது. தாமரையின் காதல் ஸ்பெஷல் வரிகள் 'உன்னை உன்னை’ பாடலுக்கு அழகு. 'பார்ட்டி வந்தாலே’ பாட்டு கேட்ட மெட்டு. விவேகாவின் வரிகளில் அனிதா பாடியுள்ள 'கண்ணாலே பார்க்குறதும்’ இன்னுமொரு பாட்டு!