Published:Updated:

, ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

, ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

, ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வணக்கம். 

நான் உளவியல் நிபுணர் டாக்டர் அபிலாஷா...

இப்போலாம் குட்டிக்குட்டிக் குழந்தைகள்கூட, 'எனக்கு ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’னு சொல்றாங்க. ஏதாவது ஒரு விஷயம் நமக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துட்டே இருந்தால்தான் 'ஸ்ட்ரெஸ்’ எனப்படும் மனஅழுத்தம் உண்டாகும். காய்ச்சலின் தீவிரத்தை ஒரு தெர்மாமீட்டர் வெச்சுத் தெரிஞ்சுக்கிற மாதிரி, ஸ்ட்ரெஸ்ஸின் தீவிரத்தை அளந்துவிட முடியாது. அதனாலேயே பலருக்கு தங்கள் மனநலம் பாதித்திருப்பதே தெரிவில்லை.  அதுவும்போக, 90 சதவிகித உடல் வியாதிகளுக்கு ஸ்ட்ரெஸ்தான் காரணம். ஸ்ட்ரெஸ் இன்றி வாழ்வது எப்படி?

மனநல மருத்துவர்னு சொன்னதுமே, 'எங்கே... என் மனசுல இருக்கிறதை கண்டுபிடிங்க பார்ப்போம்’, 'இப்ப நான் என்ன நினைச்சுட்டு இருக்கேன்னு சொல்லுங்க பார்க்கலாம்’னு பலரும் ஜாலியா விசாரிக்கிறாங்க. ஒருவரின் மனநிலையை உணர நிறையப் பயிற்சியும் பரந்த அனுபவமும் தேவை. ஒருவரின் மனநலத்தை எப்படிக் கணிப்பது, அவரை எப்படி மீட்டெடுப்பது

, ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

என ஒவ்வொரு நபருக்கும் பிரத்யேகமாக யோசித்துச் செயல்படுவதுதான் மனநல மருத்துவரின் முக்கியப் பணி. மனநல மருத்துவத்தில் இதையும் தாண்டி இன்னும் பல ஆச்சர்யங்கள் உண்டு. 'நீ என்ன நினைக்கிறாயோ... அதுவாகவே ஆகிறாய்’ என்கிறார் புத்தர். மனநலத்தைக் காப்பதன் மூலம், அது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதைச் சொல்கிறேன்.

'அவர் செல்வாக்கான ஆள்’, 'அவர் பெரிய பணக்காரர்’, 'அவர் பிரபலப் புள்ளி’... இப்படி  ஏதாவது ஒரு காரணம் சொல்லி சமூகத்தில் சிலரைப் புகழ்கிறோம் நாம். ஆனா, யார் தன் மனதிலும் உடம்பிலும்  எந்தப் பிரச்னையும் இல்லாம இருக்காங்களோ, அவங்கதான் உண்மையான ஹீரோ, ஹீரோயின். அப்படியானவர்களைத்தான் இந்தச் சமூகம் கொண்டாடணும். வாழ்க்கையில் எல்லாமே அவசியம்தான். ஆரோக்கியம், அது எல்லாத்தையும்விட அவசியம். இதை சில ஆச்சர்ய உதாரணங்களோடு சொல்கிறேன்.

போதைக்கும் புகைப்பழக்கத்துக்கும் அடிமையாவதுபோல, சமூக வலை தளங்களில் நேரத்தையும் கவனத்தையும் தொலைக்கிற பழக்கம் அதிகரிச்சுட்டே இருக்கு. டி.வி., வீடியோ கேம்ஸ், சமூகவலைதளங்கள்... இப்படி ஒவ்வொரு வயதினரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு அடிமையாகிட்டே இருக்காங்க. ஒரு சின்னக் குழந்தை செல்போன் கேம்ஸ்களுக்கு எளிதில் அடிமையாகி பசி, தூக்கம் மறந்து அந்த ஆண்ட்ராய்டு உலகில் தன்னைத் தொலைக்குது. இப்படியான தன்னிலை மறக்கும் பழக்கங்களால் உண்டாகும் உளவியல் ஆபத்துக்களை அடுக்கினால், அவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும். காது கொடுத்துக் கேட்டு மனதில் இருத்திக் கொள்ளுங்களேன்!

கொலை, கொள்ளை, கடத்தல்னு நாளுக்கு நாள் க்ரைம் ரேட் ஏறிட்டே இருக்கு. ஏன்? 'தீயவர்களின் தீய செயல்களைவிட, நல்லவர்களின் மௌனம் மிக ஆபத்தானது’னு சொல்லியிருக்கார் மாவீரன் நெப்போலியன். இதுதான் தீமை அதிகரிக்கக் காரணம். கெட்டவன் ஆரம்பத்துல நாலு பேருக்கு கெட்டது செய்றப்போ, நல்லவங்க நாலு பேர் அதை எதிர்த்துக் கேட்கணும். அப்படிக் கேட்கலைன்னா, அடுத்து அவன் 40 பேருக்கு தொல்லை கொடுப்பான். இதுக்கு யதார்த்தத்தில் இருந்தே பல உதாரணங்கள் சொல்லலாம். கேளுங்கள்.

, ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

25-6-15 முதல் 1-7-15 வரை 044-66802911என்ற எண்ணுக்கு அழையுங்கள். மனம், நலம் பெறுவோம்!

அன்புடன்,

அபிலாஷா.