Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின்  வணக்கம்... 

ஒரு நாட்டின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொண்டதைவிட, அது சம்பந்தமான ஓவிங்களைப் பார்த்துதான் நான் அதிகம் தெரிந்துகொண்டேன். வெறுமனே ஓவியத்தைப் பார்ப்பதைவிட, படிக்கும்போதுதான் அதன் சிறப்புகள் தெரியும். அதை ஓர் ஓவியன் மட்டும்தான் அறிந்திருக்கவேண்டும் என்பது அல்ல. எல்லோருக்கும் அதைப் பற்றிய புரிதல் அவசியம். அது ஏன், ஓவியங்களைப் படிப்பது எப்படி? சொல்கிறேன்.

ஒரு குழந்தை பேச ஆரம்பிக்கும் முன்னர் பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. பார்த்த விஷயங்களை ஓவியமாக்க ஆசைப்படுகிறது. இதைத் தீவிரமாகச் செய்யும் குழந்தைகளை, இந்தத் துறையில் ஊக்குவிப்பது பெற்றோரின் கடமை; ஒரு குழந்தை படிக்க ஆரம்பிக்கும்போது, ஓவியக் கல்வியால் அது அடையும் பயன்களைச் சொல்லவா?

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

சத்யஜித் ரே, ஃபெலினி, ரிட்லி ஸ்காட், ஜேம்ஸ் கேமரூன்... என சினிமாவுக்குள் நுழைந்த ஓவியர்கள் ஏராளம். அப்படித்தான் நானும் சினிமாவுக்குள் கலை இயக்குநராக நுழைந்தேன். அதிலும் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் பணியாற்றினேன். ஒரு படத்தில் கலை இயக்குநர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளரின் பணி மிகப் பெரியது. ஆனால், நம் ஊர் சினிமா, கலை இயக்குநருக்கு சிறிய பங்கைத்தான் கொடுத்திருக்கிறது. அதில் இன்னும் என்னென்ன மாற்றங்களுக்கான சாத்தியங்கள் இருக்கின்றன? விரிவாகச் சொல்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்தது, மதுரை கோரிப்பாளையம் பகுதி. அப்போது அங்கே நிறையக் குதிரைவண்டிகள் இருக்கும். பெருவாரியான மதுரை மக்கள், ஜட்கா வண்டிகளையே அப்போது பயன்படுத்தினார்கள். எங்களைச் சுற்றி நிறையக் குதிரைகள் நிற்கும். நான் தேடிப் போகாமலேயே எனக்குள், அந்தக் குதிரைகள் வந்தது இப்படித்தான். ஏதாவது கிறுக்கும் நேரத்தில்கூட அது குதிரையாக நிறைவடைவதை, நானே பல முறை கவனித்திருக்கிறேன். அந்த அளவுக்கு என்னை ஆட்கொண்ட குதிரைகளின் கதை பற்றி உங்களோடு பகிர்கிறேன்!

27-8-15 முதல் 2-9-15 வரை 044-66802911 என்ற எண்ணுக்கு அழையுங்கள். வண்ணங்களும் அது தரும் எண்ணங்களுமாக நிறையப் பேசலாம்...

அன்புடன்,

டிராட்ஸ்கி மருது.