காஷ்மீரில், ராணுவத்தினர்மீது கல்லெறியும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். வழக்கமாக, இளைஞர்களுடன் சேர்ந்து பெண்களும் ராணுவத்தினர்மீது கல் எறிவதுண்டு. அடிக்கடி, அப்ஷான் ஆஷிக் என்ற இளம் பெண் ராணுவத்தினர்மீது கல்எறிந்து தாக்குதலில் ஈடுபடுவார். மீடியாக்கள், அவர் கல் எறியும் புகைப்படத்தை வெளியிட, வைரலானது. அப்ஷான் ஆஷிக் என்ற பெயர்கொண்ட அந்தப் பெண், கால்பந்து வீராங்கனையும்கூட. ஸ்ரீநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ படித்துவந்தார். இதையறிந்த காஷ்மீர் முதல்வர் மெகபூஃபா முக்தி, அந்தப் பெண்ணை காஷ்மீர் மாநில மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் ஆக்கினார்.
Courtesy : NDTV
தொடர்ந்து, காஷ்மீர் மாநில மகளிர் கால்பந்து அணி வீராங்கனை அப்ஷான் ஆஷிக் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசினர். அப்போது, காஷ்மீர் மாநிலத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்குக் கூடுதல் நிதி அளிக்குமாறு ராஜ்நாத் சிங்கிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். அப்ஷான் ஆஷிக், மிகச்சிறந்த கோல்கீப்பர் ஆவார்.'' இப்போது, என் வாழ்க்கை முறை மாறியுள்ளது. வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற லட்சியம் எனக்கு உண்டு. அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது'' எனக் கூறும் ஆஷிக்கின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக உள்ளது.