மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

மழைப் பேச்சு - அறிவுமதி
வெளியீடு: சாரல், 189, அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர், சென்னை - 17.
பக்கங்கள்: 112  விலை:

விகடன் வரவேற்பறை

200

விகடன் வரவேற்பறை

காமத்தின் வசீகர அழகை இரண்டு, மூன்று வரி புதுக்கவிதை வடிவில் அளிக்க முயலும் அறிவுமதியின் கவிதைத் தொகுப்பு. காமத்தின் வேட்கையை, வேட்டையை, நுட்பத்தை, நிகழ்வை, நிகழ்தகவைப் பதிவுசெய்யும் கவிதைகள்... விகடனில் வெளிவந்த சமயம் பரவலாக வசீகரம் ஈர்த்தது. 'நான் உடுத்திய தனிமையை அவிழ்த்துப் போட்டவள் நீ’, 'காட்டுக்குள் தொலைதல்தான் கட்டிலில் தொலைதலும்’, 'வெப்பத்தின் உச்சம் மழை’ போன்ற கவிதை வரிகள் நுட்பமானவை. கவிதைகளுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கும் படங்கள் அவ்வளவும்... அவ்வளவு அழகு!

காதலுக்காக  இயக்கம்: கோகுல்கிருஷ்ணன்  வெளியீடு: ஜி.எஸ்.மீடியா

விகடன் வரவேற்பறை

ற்பைக் காப்பாற்ற காதலி செய்த கொலையை ஏற்று, தூக்குக் கயிற்றைத் தொடும் காதலனின் கதை. 'தாக்கிடுதே...’ பாடலில் நட்பு காதலாக மாறுவதை அழகாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஹரன் எஸ் ஹரியின் இசை, விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு இரண்டும் குறும்படத்துக்கு சினிமா தரம் ஏற்றுகிறது. எல்லாம் சரி... தற்காப்புக்காகச் செய்யப்படும் முன்நோக்கம் இல்லாத கொலைக்கு எங்கே தூக்குத் தண்டனை கொடுக்கிறார்கள் சார்?

தமிழ் டு ஆங்கிலம்! www.searchko.in/tamil-english-dictionary.jsp

விகடன் வரவேற்பறை

மிழ் வார்த்தைகளுக்கு ஆங்கிலத்திலும், ஆங்கில வார்த்தைகளுக்குத் தமிழிலும் அர்த்தம் கொடுக்கும் தளம். தமிழ் வார்த்தைகளுக்குச் சரியான ஆங்கில அர்த்தம் கொடுப்பதோடு, அதற்கு நிகரான வேறு வார்த்தைகளையும் பரிந்துரைப்பதன் மூலம் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள முடிகிறது!

ம.பொ.சி-க்கு மரியாதை! http://maposi.blogspot.com

விகடன் வரவேற்பறை

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பற்றிய வலைப்பூ. வாழ்க்கைக் குறிப்பு,  கட்டுரைகள், அபூர்வ புகைப்படங்கள், கலைஞருக்கு 'கல்லக்குடி கொண்டான்’ என்ற பட்டத்தை ம.பொ.சி. வழங்கியது எனப் பல தகவல்கள் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. தமிழகத்தின் தன்னிகரில்லாத தியாகி ஒருவரை இந்தத் தலைமுறையினரும் நாளைய தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வகை செய்யும் வலைப்பூ!

7ஆம் அறிவு  வெளியீடு: சோனி மியூஸிக்  விலை:

விகடன் வரவேற்பறை

125

விகடன் வரவேற்பறை

ஹிப்-ஹாப் ஆல்பத்தில் இடம்பிடிக்கும் அதிரடி பீட்களுடன் இருக்கும் 'ஓ ரிங்கா ரிங்கா’ பாடலில் இடம்பெற்றிருக்கும் எளிய தமிழ் வார்த்தைகளையும் சிரமப்பட்டுத்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. கார்த்திக்கின் குரலும், நா.முத்துக்குமாரின் வரிகளும் 'முன் அந்தி’ பாடலுக்கு ஹிட் மேக்கப் போடுகின்றன. ஸ்க்ரீனில் விஷ§வல் பார்த்துப் பழகும் வரை எதிர்பார்ப்பு தூண்டும் வகை... 'எல்லே லமா’ பாடல். இசைக்குப் போட்டியாக மனதை வருடுகிறது எஸ்.பி.பி-யின் குரல் 'யம்மா யம்மா’ பாடலில். நம்பிக்கையூட்டும் உற்சாக டானிக் வரிகள் 'இன்னும் என்ன தோழா?’ ஸ்பெஷல். 'முன்னரே கேட்ட சாயல்’  ஹாரிஸின் இந்த ஆல்பத்திலும் உண்டு. ஆனாலும், அது உறுத்தாமல் ஆறாம் அறிவை மறைக்கச் செய்கிறது இசை!