சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• பாலய்யாவின் 99-வது படம் வெளிவரப்போகும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் மனவாடுகள். படம் 'டிக்டேட்டர்’. விநாயகர் சதுர்த்தி அன்று ட்விட்டர், ஃபேஸ்புக் என பாலய்யா பெயரை ஃபுல் ட்ரெண்டிங்கில் வைத்து அசத்திவிட்டனர் ரசிகர்கள். வைரலு... டிரெண்டுலு!  

இன்பாக்ஸ்

•  உலகின் தலைசிறந்த பாக்ஸர் ஃபிளாய்ட் மேவெதர் ஓய்வுபெற்றுவிட்டார். இதுவரை தோல்வியேகாணாத மேவெதர், கடைசிப் போட்டியிலும் ஆண்ட்ரே பெர்ட்டோவை வீழ்த்தினார். 49 போட்டிகளில் தோற்காத வீரர் என்ற சாதனை, சரித்திரத்தில் நிற்கும். 'என் பாக்ஸிங் வாழ்க்கை முடிவுபெற்றுவிட்டது. எனது விளையாட்டில் நான் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டேன். இனி இதில் சாதிக்க எதுவுமே இல்லை. எந்த அளவுக்கு எனத் தெரியாது. ஆனால், வரலாற்றில் நான்தான் தலைசிறந்த பாக்ஸர்’ எனக் கடைசிப் போட்டியில் செம பன்ச் வைத்து  குட்பை சொன்னார் மேவெதர். குத்து ராஜா!

இன்பாக்ஸ்

•   'சிங் இஸ் ப்ளிங்’ படத்தில் ஏமியின் ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து அக்ஷய்குமாரே அசந்துவிட்டாராம். 'ஹாலிவுட்போல இங்கும் ஹீரோயின்கள் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும். அதற்கு எனது இந்தப் படம்  ட்ரெண்ட் செட்டராக இருக்கும்’ எனச் சிரிக்கிறார் ஏமி. ஆக்ஷன் புள்ள!

இன்பாக்ஸ்

•  பேய் ஜுரத்தில் இருக்கிறார் த்ரிஷா. பேய் காமெடி கலந்த 'நாயகி’ மற்றும் 'அரண்மனை-2’ இரண்டிலும்  பேய் வேடங்களாம். 'நாயகி’ படத்தில் 20 வயதுப் பெண் வேடம் என்றாலும், சரியாகப் பொருந்தியிருக்கிறார் த்ரிஷா. படத்தில் ஒரு பாடலையும் பாடி அசத்தியிருப்பதால் டபுள் குஷி. நீ கலக்கு செல்லம்!  

இன்பாக்ஸ்

 ''பிரேமம்’ மூலம் ஹிட்டடித்த சாய்பல்லவி, எப்போது அடுத்த படம் நடிப்பார்?’, 'மலர் டீச்சருக்கு, ஹேப்பி டீச்சர்ஸ் டே’ என உருகிக்கொண்டிருக்கின்றனர் சேட்டன்கள். ஆனால், சாய்பல்லவிக்கு நடிப்பைத் தொடர விருப்பம் இல்லையாம். மருத்துவம் படித்த பல்லவி, அதில் மேற்படிப்பைத்  தொடர ஜார்ஜியா சென்றுவிட்டார். இடையில் சில படங்களில் நடிப்பதாக வந்த செய்தி எல்லாமே வதந்தி எனச் சொல்லி, மல்லுவுட்டுக்கு டாட்டா காட்டிவிட்டார் சாய்பல்லவி. சோ ஸேட்!  

இன்பாக்ஸ்

•  இந்தப் பக்கம் 'கபாலி’; அந்தப் பக்கம் 'டங்கல்’. இங்கே தாதா... அங்கே தந்தை.  சூப்பர் ஸ்டார் தாடி சகிதம் தந்த 'கபாலி’ போஸ்டர் ஹிட்டடித்ததைப்போல, அங்கு அமீர்கானும் 'டங்கல்’ படத்துக்காக தாடியுடன் இருக்கும் போட்டோ ஹிட். இரண்டு மல்யுத்த வீராங்கனைகளின் தந்தையாக அமீர்கான் நடிக்கும் படம் இது. சீனியர்கள் சிக்ஸர் வெளுக்குறாங்க!

இன்பாக்ஸ்

•  சுயசரிதை சினிமாக்கள் உச்சத்தில் இருக்கும் வேளையில் எவரெஸ்ட் நாயகி  அருணிமா சின்ஹாவின் வாழ்க்கையைப் படமாக்க செம போட்டி. 'படம் சம்பாதிக்கும் தொகையில் 15 சதவிகிதம் வேண்டும் என்பதே என் நிபந்தனை. ஆனால், சினிமாக்காரர்கள் ஒரே முறையாக ஒரு சிறிய தொகை மட்டுமே தர நினைக்கின்றனர். அந்தத் தொகை என் வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்களுக்கும் என் கடுமையான உழைப்புக்கும் முன்பு மிகச் சிறியது. நான் கேட்பது எனக்காக அல்ல... என் கனவு அகாடமி தொடங்க அந்தப் பணம் உதவ வேண்டும் என்பதே ஆசை’ என்கிறார் அருணிமா. அறம் செய விரும்பு!

இன்பாக்ஸ்