சினிமா
Published:Updated:

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசக நண்பர்களுக்கு, எழுத்தாளர் பாமரனின் அன்பு வணக்கங்கள்...

இன்று தொலைக்காட்சி சேனல்களின் பெருக்கம் அதிகமாகிவிட்டது.

24 மணி நேர சேனல்களில் யாருக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்பதிலேயே பெரும் குழப்பங்கள் நிலவுகின்றன. அதுவும் விவாத நிகழ்ச்சிகளோ பயங்கரம். எதிரில் அமர்ந்திருப்பவர் ஒரு கருத்தைச் சொன்னால், அதை மறுத்துச் சொல்வதே அறிவு என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். தெருவில் நடக்கும் சண்டைக்கும் தொலைக்காட்சி விவாதங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒரு விவாதம் என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

படிக்கும் பழக்கம் இன்றைக்கு மிகக் குறைந்துவிட்டது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் பாடப்புத்தகங்களைப் படிப்பது மட்டும் படிப்பு அல்ல; சிறுகதை, நாவல், உலகத் தகவல்கள் அடங்கிய புத்தகங்களைப் படிப்பதும் படிப்புதான். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என நம் நேரங்களை ஆக்கிரமித்துக்கொண்ட தொழில்நுட்பம்தான், நம்முடைய படிக்கும் பழக்கம் குறைய முக்கியக் காரணம். புத்தக வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், நான் சமீபத்தில் படித்த புத்தகங்கள் பற்றியும் சொல்கிறேன்... கேளுங்கள்.

ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

'விலை போட்டு வாங்கவா முடியும் கல்வி?’ என பாரதிதாசன் சொல்வார். ஆனால், இன்று விலை கொடுத்துத்தான் கல்வியை வாங்கவேண்டியிருக்கிறது. அரசுப் பள்ளியில் படித்தால் மதிப்பு இல்லை என, தனியார் பள்ளிகள் வந்தன. பின்னர் அதிலேயே மெட்ரிக்குலேஷன் பள்ளி, மாடல் பள்ளி, இன்டர்நேஷனல் பள்ளி... என அடுத்தடுத்து விலையை ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.  இதைப் பார்த்து பெற்றோர்கள் பயந்து, அந்தப் பயத்தைப் பிள்ளைகள் மீது திணித்து, அவர்களைப் பலவீனமாக்குகிறார்கள். இதுதான் தேர்வில் தோல்வியைத் தாங்க முடியாத கோழைகளாக அவர்களை மாற்றுகிறது. கல்வி, வணிகமயமாக நாம்தான் காரணம்... எப்படி?

இன்றைக்கு நல்ல லாபம் தரக்கூடியது தன்னம்பிக்கை நூல் வியாபாரம்தான். இது உலக அளவில் கொடிகட்டிப் பறக்கிறது. 'முன்னேற மூன்றே வழிகள்’னு ஏதோ ஒரு தலைப்பைப் போட்டு எழுதிவிடுகிறார்கள். ஆனால், தான் ஏன் இப்படி இருக்கிறோம் எனத் தெரியாதவனுக்கு, 'ஓ... நாம சரியா பல்லு வெளக்காததனாலதானோ?!’ என நம்பவைக்கும் அளவுக்கு அவர்களின் போலி எழுத்துக்கள் இருக்கும். இந்தத் தந்திரத் தன்னம்பிக்கை ஆசாமிகளின் செயல்கள் என்னென்ன? உண்மையிலேயே தன்னம்பிக்கை என்றால் என்ன? சொல்கிறேன்...

24-9-15 முதல் 30-9-15 வரை 044-66802911 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். கொஞ்சம் சீரியஸாகப் பேசலாம்...

அன்புடன்

பாமரன்