Published:Updated:

தொடர் பழுதால் கிலி கிளப்பும் கூடங்குளம் அணு உலை! - ஆய்வு கோரும் பூவுலகின் நண்பர்கள்

தொடர் பழுதால் கிலி கிளப்பும் கூடங்குளம் அணு உலை! - ஆய்வு கோரும் பூவுலகின் நண்பர்கள்
News
தொடர் பழுதால் கிலி கிளப்பும் கூடங்குளம் அணு உலை! - ஆய்வு கோரும் பூவுலகின் நண்பர்கள்

தொடர் பழுதால் கிலி கிளப்பும் கூடங்குளம் அணு உலை! - ஆய்வு கோரும் பூவுலகின் நண்பர்கள்

Published:Updated:

தொடர் பழுதால் கிலி கிளப்பும் கூடங்குளம் அணு உலை! - ஆய்வு கோரும் பூவுலகின் நண்பர்கள்

தொடர் பழுதால் கிலி கிளப்பும் கூடங்குளம் அணு உலை! - ஆய்வு கோரும் பூவுலகின் நண்பர்கள்

தொடர் பழுதால் கிலி கிளப்பும் கூடங்குளம் அணு உலை! - ஆய்வு கோரும் பூவுலகின் நண்பர்கள்
News
தொடர் பழுதால் கிலி கிளப்பும் கூடங்குளம் அணு உலை! - ஆய்வு கோரும் பூவுலகின் நண்பர்கள்

கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை பழுது காரணமாகவும் பராமரிப்புப் பணி காரணமாகவும் கூடங்களும் அணு உலையின் 1-ம் அலகு 40-க்கும் மேற்பட்ட முறை நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு பக்கம், முதல் இரண்டு அலகுகளில் இப்படிப்பட்ட பிரச்னை இருக்கும் நிலையில், அடுத்த இரண்டு அலகுகளுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் 1 மற்றும் 2-வது அலகுகளில் சுயாதீன ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க செயல் தலைவருமான ஸ்டாலினையும் பூவுலகின் நண்பர்கள் குழு சந்தித்திருக்கிறது.

இந்த விஷயம் தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட அறிக்கையில், `சில நாள்களுக்கு முன்னர்தான் கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளிலிருந்தும் 2000 மெ.வா உற்பத்தி செய்யப்பட்டதாக அணுசக்தி துறை அறிவித்தது. இந்த அறிவிப்பு வருவதற்கு சில நாள்களுக்கு முன்னர் இரண்டாவது அலகு 9 நாள்கள் மட்டும் ஓடி பழுதடைந்து நின்றதாக அறிவிக்கப்பட்டது. 2000 மெ.வா உற்பத்தியை நிகழ்த்திய சில நாள்களில் மீண்டும் அலகு ஒன்றிலுள்ள "டர்பைனில்" கோளாறு ஏற்பட்டு மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்சொன்னவை எதுவும் கூடங்குளம் உலைகளுக்குப் புதிது கிடையாது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை அலகு 1 நாற்பதுக்கும் மேற்பட்ட முறை பழுதடைந்து நின்றுள்ளது. ஒவ்வொரு முறையும் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படும் அலகு ஒன்று மீண்டும் மின்னுற்பத்தியை தொடங்க குறைந்தது நான்கு மாதங்கள் எடுத்துக்கொள்ளும். உலகில் உள்ள மற்ற அணு உலைகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுதடைந்து நிற்கும் அல்லது எரிபொருள் நிரப்ப நிறுத்தப்படும். அதே போல் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்படும் உலைகள் 45 முதல் 60 நாள்களில் மின்னுற்பத்தியைத் தொடங்கிவிடும். இந்த "உலக தர அளவுகள்" என்று சொல்லப்படுபவை எதுவும் "உலகத்தரம்" வாய்ந்த கூடங்குளம் அணு உலைகளுக்குப் பொருந்தாது. ஏனென்றால் இவற்றின் தரம் வேறு. மூன்றாம் தலைமுறை அணு உலைகள் என்று போற்றப்பட்ட கூடங்குளம் அணு உலைகள் "மூன்றாம் தர" உலைகள்தான் என்று போராடிய மக்கள் சொன்னது உறுதியாகிறது.

உலகம் முழுவதும் புதிய அணு உலைகள் நிச்சயம் 80 சதவிகிதம் திறனில் ஓடும் ஆனால் கூடங்குளம் அணு உலையின் அலகு ஒன்று 43 சதவிகிதம் திறனில்தான் ஓடியது என்று தேசிய அணு மின் கழகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த வாரம் டர்பைனில் ஏற்பட்ட கோளாறு பல கோளாறுகளின் தொடர்ச்சிதான்.

இந்தச் சமயத்தில் நாங்கள் சில முக்கியமான கோரிக்கைகளை வைக்கிறோம்:

1. கூடங்குளம் அணு உலைகளின் அலகுகள் 1&2 குறித்து சர்வதேச மட்டும் நம் நாட்டில் உள்ள சுயாதீன நிபுணர்கள் கொண்ட குழு முழு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு எவ்வளவு காலகட்டம் ஆனாலும் நிச்சயம் இதைச் செய்ய வேண்டும்.

2. கூடங்குளம் அணு உலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவாக்க பணிகள் - அதாவது அலகுகள் 3&4-க்காண வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பின்னாளில் இத்தனை கோடிகள் செலவழித்துவிட்டோம் என்று எந்தக் காரணங்களும் சொல்லக் கூடாது. உடனடியாக விரிவாக்கப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும்.

3. கூடங்குளத்தில் நடைபெறும் அத்தனை பிரச்னைகளுக்கும் தமிழகத்தில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளே காரணம் என்கிற குற்றச்சாட்டையும் சேர்த்தே வைக்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்கள் ஸ்டாலினை இன்று நேரில் சென்று சந்தித்தருப்பது கவனம் பெற்றுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனை தொடர்புகொண்டோம், ``கூடங்குளத்தில் சுயாதீனமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த ஆய்வில் அரசின் தலையீடு கண்டிப்பாக இருக்கக் கூடாது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட முறை கூடங்குளம் அணுஉலையின் முதல் அலகு பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது உலகில் எங்குமே நடைபெறாது ஒன்று. மற்ற நாடுகளில் இருக்கும் அணு உலைகள், பராமரிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிறுத்தப்படும். ஆனால், கூடங்குளம் அணு உலைகள் இத்தனை முறை நிறுத்தப்பட்டுள்ளது மிகுந்த சந்தேகங்களைக் கிளப்புகின்றன. எனவே, அதன் உண்மை நிலையை அறிந்துகொள்ள சுயாதீன ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் நேரில் சந்தித்து இது குறித்து தெரியப்படுத்தி வருகிறோம். குஜராத்தில் அணு உலை வேண்டாம் என்று மக்கள் போராடினால், அதற்கு செவி மடுக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டில் அதைப்போன்றதொரு போராட்டம் நடத்தினால், ஒடுக்குகிறது. எனவே, எல்லாக் கட்சிகளையும் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வோம். முதல்வரையும் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளையும் சந்திப்பதற்கும் முயற்சி செய்து வருகிறோம்' என்று தெரிவித்தார் உறுதிபட.

தி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்து பேசிய சுந்தர்ராஜன், `சுயாதீன ஆய்வு தொடர்பான கோரிக்கையின் நியாயத்தை ஸ்டாலினிடம் எடுத்துரைத்தோம். மேலும், கூடங்குளம் அணு உலையில் நிகழக்கூடிய ஆபத்து குறித்தும் தெளிவாக விளக்கினோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட ஸ்டாலின், கோரிக்கைகளைக் கண்டிப்பாக முன்னெடுத்துச் செல்வதாக உறுதியளித்தார்' என்றார் நம்பிக்கையாக.