Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• சில்வர் ஸ்கிரீனில் ஐந்து வருடம் கழித்து விறுவிறு த்ரில்லர் சினிமா மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா பச்சன். ஒரு குற்றவாளியை விடுவிக்க ஐஸ்வர்யாவின் மகள் கடத்தப்பட, அவளை அவர் எப்படி மீட்கிறார் என்பதுதான் 'ஐஸ்பா’ படத்தின் கதை. ஐஸ்வர்யாவின் மகளாக நடித்திருப்பது 'தெய்வத்திருமகள்’ சாரா. பாசமும் ஆவேசமுமாக ஐஸ்வர்யா பேக் டு ஃபார்ம்தான். படம் அப்படி இப்படி இருந்தாலும், 'ஆஃப்டர் எ லாங் கேப்’ ஐஸை ஸ்கிரீன்ல பார்த்ததே போதும் எனச் சிலாகிக்கிறது அவருடைய ரசிகர் படை. '36 வயதினிலே’ பார்க்கலாமே ஐஸ்! 

இன்பாக்ஸ்

•  'தோனி, அணியில் என்ன செய்கிறார்? ஒரு கேப்டனாகப் பார்க்காமல் வீரராகப் பார்த்தால், அவர் தேவையே இல்லை’ எனச் சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறார் அஜித் அகர்கார். கண்டனங்கள் குவியவும், 'அவர் நல்ல வீரர்தான். ஆனால், அணிக்குப் பலமாக இருந்த அவர் சுமையாக மாறிவிடக் கூடாது என்பதற்காக இப்போதே சொல்கிறேன்’ எனச் சமாளித்திருக்கிறார். வரணும்... பழைய பன்னீர்செல்வமா வரணும்! 

• ஆச்சர்யத்தில் இருந்து இன்னும் மீளவில்லையாம் அலியா பட். 'முதல்முறையாக அவர் அருகில் நான் நிற்கும்போது, என் கால்கள் நடுங்கின. ஆனால், மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர் மிகவும் சிம்பிள்’ என நெகிழ்கிறார். ரஜினிகாந்துடனான சந்திப்புக்குத்தான் இந்த மகிழ்ச்சி. அதே சமயம், 'அவருடன் நடிப்பீர்களா?’ எனக் கேட்டால், 'நடிக்க ஆசைதான். அவருக்கு மகளாக’ என ட்விஸ்ட் அடிக்கிறார். வெவரம்!

இன்பாக்ஸ்

•  'சாவதற்கு உலகிலேயே சிறந்த இடம் எது தெரியுமா?’ என்றால், 'இங்கிலாந்து’ என்கிறது ஓர் ஆய்வு. மருத்துவமனை வசதிகள்,  நோயாளிகளைக் கவனிக்கும் அனுசரணை எனப் பல அம்சங்களில் உலக அளவில் சிறந்த மதிப்பெண் பிடித்திருக்கின்றன லண்டனில் இருக்கும் மருத்துவமனைகள். ஒருவரின் உயிருக்கு மதிப்பு அளித்து அவர்கள் அளிக்கும் கவனமும் மெனக்கெடலும் உலகில் வேறு எங்கும் கிடையாதாம்! அதுக்காக உயிரைக் கொடுக்க முடியுமாப்பு!  

இன்பாக்ஸ்

•  குறும்படங்களுக்கே 'ரிலீஸ் ஜுரம்’ ஏற்றத் தொடங்கிவிட்டார்கள். ராதிகா ஆப்தே நடிப்பில் வைரல் ஹிட் அடித்த 'அஹல்யா’ குறும்படத்தின் தயாரிப்பாளர், தேசிய விருது வென்ற கொங்கனா சென் நடிப்பில் 'நயன்தாரா நெக்லஸ்’ என அடுத்த குறும்படத்தைத் தயாரித்திருக்கிறார்.  எதிர் வீட்டுக்குக் குடிவரும் துபாய் ரிட்டர்ன் பெண் மீது, பொறாமைகொள்கிறாள் நாயகி. அவள் வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்கள் தெரியும்போது என்ன ஆகிறது என்பதுதான் கதை. 'நீங்கள் எதிர்பார்க்காத சம்பவங்கள் நிறைந்த படம்’ என  எதிர்பார்ப்பு மீட்டரைப் பற்றவைக்கிறார்கள். நம்மாளுங்க பேருக்காகவே பார்ப்பாங்க!

•   செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லும் விண்வெளிக் குழு திரும்பும்போது, மார்க் என்கிற விண்வெளி வீரர் மட்டும் அங்கேயே சிக்கிக்கொள்கிறார். அவர் இறந்துவிட்டதாக நம்பப்பட்ட நிலையில் அங்கு இருந்து தகவல் அனுப்புகிறார். மார்க்கை மீட்க எடுக்கப்படும் முயற்சிகளும், உயிர்ப்பிழைத்திருக்க மார்க் சந்திக்கும் சவால்களுமே 'தி மார்ஷியான்’ படம். நாசாவிடம் உண்மைத் தகவல்களைப் பெற்று, படமாக்கியிருக்கிறோம் என ஏக ஹைப் ஏற்றினார்கள். 'அதெல்லாம் சரிதான். ஆனா, 'கிராவிட்டி’ அளவுக்கு இல்லைப்பா...’ என்கிறார்கள் ரசிகர்கள். 'தட் 'பாகுபலி’ மாதிரி 'புலி’ இல்லை மொமன்ட்’!

இன்பாக்ஸ்

•  'சால்ட் அண்ட் பெப்பர்’, '22 ஃபீமேல் கோட்டயம்’ என மலையாளத்தில் ஹிட்ஸ் தந்த, இயக்குநர் ஆஷிக் அபுவின் கிராஃப் இப்போது தலைகீழ். வெற்றிப்படம் தந்தே ஆகவேண்டிய நிலையில், இரண்டு பெண்களின் கதையைக் கையில் எடுத்திருக்கிறார். கொச்சினில் இருந்து இமாச்சலப்பிரதேசத்துக்கு வெவ்வேறு காரணங்களுக்காகப் பயணிக்கும் ராணி மற்றும் பத்மினியின் பயணம்தான் 'ராணி பத்மினி’ சினிமா. காந்தக் கண்ணழகி ரீமா கல்லிங்கலும், '36 வயதினிலே’ மலையாள வெர்ஷனின் மஞ்சு வாரியரும்தான் ஹீரோயின்ஸ். டிரெய்லரே செம தில்லு. சிம்ரன், ஜோ... வாட்ஸ்அப்?!