படம்: ப.சரவணகுமார்

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்... நான் அரசியல் நையாண்டி கலைஞர் பிரகதீஸ்வரன் பேசுகிறேன்.
'இந்த நாட்டுல இருக்கப் பிடிக்கலை. காட்டுக்குப் போறேன்’ எனச் சொன்ன துறவியிடம், 'நீங்க காட்டுக்குப் போனா... அங்க இருக்கிற விலங்குகள் உங்களைக் கொன்னுடுமே’னு கேட்டாங்களாம். அதற்கு அந்தத் துறவி 'காட்டுல எது சிங்கம்... புலி... கரடினு தெரியும். அதுக்குத் தகுந்த முன்னேற்பாடுகளைச் செஞ்சுக்கலாம். ஆனா, நாட்டுல மனுஷன் எப்போ விலங்கா மாறுறான்னு கண்டுபிடிக்க முடியலை’னு சொன்னாராம். இந்த நகைச்சுவைக் கதையில் அவ்வளவு உண்மை இருக்கு. நாம் விலங்குகளிடம் இருந்துகூட பல நற்குணங்களைக் கற்றுக்கொள்ளலாம். அவை என்னென்ன?
'நாட்டில் உள்ள குப்பைகளை அகற்றுவது எப்படி?’ எனப் பேசிக்கொண்டே, எல்லா இடங்களிலும் நாம்தான் குப்பைகளைப் போடுகிறோம். ஆனால், அவற்றைச் சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள் படும் பாடு தெரியுமா? அவர்கள் குப்பைகளோடு சேர்த்து மனித மலத்தையும் அள்ளுகிறார்கள். 'மலம் அள்ளும் தொழிலாளிக்கு, எந்தக் கை பீச்சாங்கை?’னு எழுதினார் ஒரு கவிஞர். இது எவ்வளவு பெரிய வேதனை. இந்த மனிதர்களைப் பற்றி இன்னும் நிறையத் துயரக் கதைகள் சொல்கிறேன்.

நம்மில் சிலர் குழந்தைகளைத் தெருவில் விளையாட அனுமதிப்பது இல்லை. தெருவில் விளையாடிய எந்தக் குழந்தையும், பின்னாளில் தோல்வியில் துவண்டுவிடுவது இல்லை. நீதிக் கதைகள், நம்பிக்கைக் கதைகளைவிட விளையாட்டில் வரும் வெற்றி-தோல்விகள்தான் குழந்தைகளை எளிதில் பக்குவப்படுத்தும்; அவர்கள் வாழ்க்கை முழுவதற்கும் அவை உதவும். குழந்தைகள் விளையாட்டில் பெரியவர்களுக்கும் சில வாழ்க்கைப் பாடங்கள் இருக்கின்றன. அவற்றைப் படிப்போமா?
உடல் உறுப்புத் தானத்துக்காக பெரும்பாலும் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைகளுக்கே உடல் உறுப்புகள் போயிருக்கின்றன. ஆனால், தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு உறுப்புகள் கொண்டுவரப்பட்ட தகவலே இதுவரை இல்லை. ஏன்?
26-11-15 முதல் 2-12-15 வரை 044-66802911* என்ற எண்ணில் அழையுங்கள். நல்லவை பேசுவோம்.
அன்புடன்,
பிரகதீஸ்வரன்.