Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

•   'பாலிவுட் பார்ட்டி குயின் நான்தான்’ என்கிறார் அலியா பட். ஷூட்டிங் எங்கு இருந்தாலும் சரி... வாரம் ஒரு முறையாவது பார்ட்டிக்குச் சென்றுவிடுவதுதான் அலியாவின் எனர்ஜி சீக்ரெட். 'வேலை டென்ஷனை மறந்து சந்தோஷமாக இருக்க, இதைவிட ஈஸி வழி எதுவுமே கிடையாது. உங்களுக்கு டென்ஷனாக இருந்தால், சொல்லுங்கள். நான் பார்ட்டி ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் என்ஜாய் மட்டும் செய்யுங்கள். ஆனால், இதே அளவு வேலையையும் பேலன்ஸ் பண்ணணும் பாஸ்... அது ரொம்ப முக்கியம்’ எனச் சிரிக்கிறார் அலியா. பார்ட்டியில சிம்புவைப் பார்த்திருக்கீங்களா? 

இன்பாக்ஸ்

•   'லேடி சூப்பர்ஸ்டார்’ பட்டத்தைப் பிடித்துவிட்டார் நயன்தாரா. கடந்த வாரம் தனது 31-வது பிறந்த நாளைக் கொண்டாடிய நயனுக்கு வாழ்த்து சொல்லி, ட்விட்டரையே மெர்சலாக்கிவிட்டனர் ரசிகர்கள். போப்பிடம் ஆசி வாங்கவேண்டும் என்பது நயனின் நீண்ட நாள் ஆசை. இந்தப் பிறந்த நாளில் அது நிறைவேறிவிட்டது. வாடிகன் சென்று, போப்பிடம் ஆசி பெற்றுத் திரும்பியிருக்கிறார் நயன். ஹேப்பி பர்த் டே பேபி!

•  மலையாளப் படம் 'பிரேமம்’ தந்த ஹிட் ஹீரோயின்களில் ஒருவர்தான் மடோனா செபாஸ்டியன். தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் 'காதலும் கடந்துபோகும்’, மலையாளத்தில் 'கிங் லையர்’ ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸுக்காக வெயிட்டிங். 'இந்த இரண்டு படங்களின் ரிசல்ட்டுக்குப் பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பேன்’ எனும் மடோனாவின் முதல் காதல் இசை. 'படங்களில் நடிப்பதால் பாடும் வாய்ப்பு எளிதில் கிடைக்கிறது. இசைத் துறையில் ட்ரெண்ட் ஆனதும், நடிப்பைக்கூட முழுமையாகக் கைவிடத் தயார்’ என்கிறார் மடோனா. அழகுப் பாடகிகள் லிஸ்ட்டில் புது அப்டேட்!

•  'நிறைய ரன்தான். ஆனா, மேட்ச் தோத்தாச்சு’ என கிரிக்கெட்டின் டக்ளஸ் லூயிஸ் முடிவுதான் சோனம் கபூரின் படங்களுக்கும். 'நல்ல படம். ஆனால் ஓடவில்லை’ என்பார்கள். அந்த ராசியை சல்மான் கானுடன் நடித்த 'பிரேம் ரதன் தன் பாயோ’ படம் மூலம் உடைத்திருக்கிறார் சோனம் கபூர். ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் மட்டும் 165 கோடி வசூல். 'வெற்றி தோல்வி இரண்டையும் நான் ஒரே மாதிரிதான் பார்க்கிறேன். நீங்கள்தான் என்னை வெவ்வேறு விதமாகப் பார்க்கிறீர்கள். இப்போது என்னை நம்பி நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ரொம்பவே மகிழ்ச்சி’ என கண் சிமிட்டுகிறார் சோனம். தமிழுக்கு வா செல்லம்!

•  இந்தியாவில் மோடிக்கு அடுத்து ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட அரசியல்வாதி அரவிந்த் கெஜ்ரிவால். மோடிக்கு 1 கோடியே 61 லட்சம் ஃபாலோ யர்ஸ். அரவிந்துக்கு 60 லட்சம் ஃபாலோயர்ஸ். 'ஆம் ஆத்மி’யின் நடவடிக்கை முதல், டெல்லி அரசின் திட்டங்கள், போராட்டங்கள், அறிவிப்புகள் எல்லாவற்றையும் ட்விட்டர் மூலமாகவே கொண்டுசேர்ப்பது, அவ்வப்போது சின்னச்சின்ன நாஸ்டால்ஜிக் நினைவுகள்... என ட்விட்டரில் 'மிஸ்டர் பெர்ஃபெக்ட்’ ஆக இருப்பது கெஜ்ரிவால் ஸ்டைல். ட்ரெண்டிங் தல!

•  'இணையவாசிகளில் 40 சதவிகிதம் பேர் பொய்யான வதந்திகளைப் பரப்புகிறார்கள். 34 சதவிகிதம் பேர், கேம் ரெக்வஸ்ட் கொடுத்துத் தொல்லைசெய்கிறார்கள். 30 சதவிகிதம் பேர் தேவையற்ற விஷயங்களை ஷேர் செய்கின்றனர். 18 சதவிகிதம் பேர் இணையத்தில் ட்ரோல் செய்து கொண்டிருக்கின்றனர். 33 சதவிகிதம் பேர் அளவுக்கு அதிகமாக செல்ஃபி எடுக்கின்றனர்’ - இணையம் பயன்படுத்தும் இந்தியர்களைப் பற்றி எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள்தான் இவை. ஒண்ணும் சரியில்லையே நெட்டிசன்ஸ்!

இன்பாக்ஸ்

•  திருமணத்துக்கு முன்னரே புகுந்த வீட்டின் முழு ஆதரவையும் பெற்றுவிட்டார் யுவராஜ் சிங்கின் வருங்கால மனைவி ஹஸல் கீச். 'ஹஸல், என் மகனை என்னைவிட அதிகமாக விரும்புகிறாள். அதுதான் எங்களுக்கும் வேண்டும்’ என யுவியின் அம்மா ஷப்னம் பாராட்ட, தந்தை யோக்ராஜ் சிங் 'திருமணம் மட்டும் முடியட்டும். என் மகனின் எல்லா அதிர்ஷ்டத்தையும் ஹஸல் திரும்பக் கொண்டுவந்து விடுவாள். மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பான்’ என லைக்ஸ் கொடுக்கிறார். ஆடலும் பாடலும் போட்டே ஆகணும்!

இன்பாக்ஸ்

•  அமெரிக்க அரசின் மிக உயர்ந்த விருதான 'பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதைப் பெற விருக்கிறார் ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். திரைப்பட உலகில் ஸ்பீல்பெர்க் செய்த சாதனைகளைப் பாராட்டி இந்தக் கௌரவத்தை அறிவித்திருக்கிறது அமெரிக்க அரசு. விருதிலும் பிரமாண்டம்!

இன்பாக்ஸ்

•  ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகள் ஆராத்யாவுக்கு இப்போது நான்கு வயது. கடந்த வாரம் செல்ல மகளின் பிறந்த நாளுக்காக ஸ்பெஷல் பார்ட்டி தந்திருக்கிறார் அழகு அம்மா. ஆராத்யாவுக்கு டிஸ்னி கார்ட்டூன் கேரக்டர்கள் என்றால் ஜிகா பைட் பிரியமாம். அதற்காக  டிஸ்னி கதாபாத்திரங்களைக்கொண்டு கோட்டை வடிவில் கேக் வெட்டி அசத்தியிருக்கிறார்கள் அபிஷேக்-ஐஸ்வர்யா ஜோடி. சோ ச்வீட்...