ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு, பேராசிரியர் பிரபாகரன் வேதமாணிக்கத்தின் அன்பு வணக்கம்.
தமிழர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மிகவும் ஆச்சர்யத்துக்கு உரியது. இது கடந்த 200 வருடங்களாகவே நடந்துவருகிறது என்றாலும், கடந்த
50 ஆண்டுகளில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில் என்னை மிகவும் பாதித்த மாற்றங்கள், அதன் விளைவுகள் பற்றி பேசுகிறேன்.
‘நீங்கள் ஏன் இசையைக் கேட்கிறீர்கள்?’ என ஒருவரிடம் கேட்டால் பெரும்பாலும் வரும் பதில், ‘நிம்மதிக்காக’ என்பதாகவே இருக்கும். இப்படி மன நிம்மதிக்காக கேட்கப்படும் இசை பற்றிப் பேசுவது மிகக் கடினம். ஏனெனில், இசை மிகவும் அரூபமான ஒரு கலை. அந்தக் கலை வடிவம், நம்மை அறியாமல் நம்மோடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது தெரியுமா!

சினிமா இல்லாத தமிழ்நாட்டை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. தமிழர்களின் எல்லா விஷயங்களிலும் சினிமா நீக்கமற நிறைந்தி ருக்கிறது. அதனால், தமிழ் சினிமாவின் தரம் பற்றிய கவலை மக்களுக்கு உண்டு. அதன் தரம் குறைவாக இருக்க அல்லது மற்ற உலக மொழி சினிமாபோல் வளராமல் இருக்கக் காரணம், அதற்கு இலக்கியத்தோடு நெருக்கமான தொடர்பு இல்லை என்பதுதான். இலக்கியமும் சினிமாவும் இணைய வேண்டும் என்ற பேச்சு இப்போது மெள்ள மெள்ள ஊடகங்களில் எழ ஆரம்பித்துள்ளது. இந்த இணைப்பின் முக்கியம் பற்றியும் சொல்கிறேன்.
நான் ஒரு பேராசிரியர். அதனால் பல மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு இருக்கிறது. அந்த உறவு, வகுப்பறையைத் தாண்டியும் தொடர்கிறது. சில மாணவர்களின் உறவு, அவர்களின் கல்லூரிக் காலம் முடிந்த பிறகும் நம்மை நிழல்போல் தொடர்ந்துகொண்டே இருக்கும்; சிலர் காணாமல்போய்விடுவார்கள். ஆசிரியர்-மாணவர் உறவு என்றதும் என் மாணவர்கள் மூவர் பற்றிய நினைவு வருகிறது. அவர்களுடனான சுவாரஸ்ய நினைவுகள் பற்றியும், ஆசிரியர்-மாணவர் உறவு பற்றியும் பகிர்ந்துகொள்கிறேன்.
14-1-16 முதல் 20-1-16 வரை 044-66802911என்ற எண்ணில் அழையுங்கள். சுவைபடப் பேசுவோம்!
அன்புடன்,
பிரபாகரன் வேதமாணிக்கம்.