Published:Updated:

பெண்கள் பாதுகாப்புக்கு சட்டங்களோடு மனமாற்றமும் முக்கியம்; மாவட்ட ஆட்சியர் பேச்சு

பெண்கள் பாதுகாப்புக்கு சட்டங்களோடு மனமாற்றமும் முக்கியம்; மாவட்ட ஆட்சியர் பேச்சு
News

பெண்களின் பாதுகாப்புக்காக இருக்கும் சட்டங்களோடு மனமாற்றம் இருந்தால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியமாகும் என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் பேசினார்.

கரூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் தேசிய மகளிர் ஆணையம் அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி,வெள்ளி விழா மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் மற்றும் தீர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று (02.02.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, 'தேசிய மகளிர் ஆணையம் அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. பெண்களைப் பாதுகாக்க பெண்சிசுக் கொலையைத் தடுக்கவும்,16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கல்வி அளிக்கவும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தைத் திருமணத்தைத் தடுக்கவும், பகடிவதை தடுக்கவும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மேலும், பெற்றோர் மற்றும் கணவர் சொத்தில் பெண்களுக்கு பங்கு, வேலை செய்யுமிடத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை வழங்கவும், பெண் குழந்தை பாலியல் கொடுமை மற்றும் வேலை செய்யுமிடத்தில் பாலியல் கொடுமை 
கொடுப்பவர்களுக்கு கடுமையான சட்டங்கள் உள்ளன.

பெண்கள் நாட்டின் கண்கள். பெண்கள் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு குழந்தைத் திருமணத்தைத்  தடுப்பதற்காகத் தகவல் கொடுப்போருக்கு 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும். சரியான வயதில் பெண் திருமணம் செய்தால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்று பலமான இந்தியா உருவாக்க முடியும். 'விடியும் வரை தெரிவதில்லை காண்பது கனவு என்று. வாழ்ந்து முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது வாழ்க்கை என்று' என்ற கூற்றிற்கு இணங்கவும், விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை, கெட்டுப் போனவன் விட்டுக் கொடுப்பதில்லை என்பதற்கிணங்க வாழ்க்கையை புரிதலுடன் வாழ வேண்டும். அனைத்தையும் பேசி சமாதானம் செய்து கொள்ள வேண்டும் நம்மை நாமே மாற்றிக் கொண்டு உறவை பலப்படுத்தி கொள்ள வேண்டும்" என பேசினார். முன்னதாக தேசிய மகளிர் ஆணையம் அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளி விழா மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் மற்றும் தீர்வு குறித்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தொடங்கப்பட்டு, அரசு கலைக் கல்லூரி வரை சென்றடைந்தது.