Published:Updated:

லட்சம் புத்தகம், ஆறு கோடி மதிப்பு... மதுரையில் பிரமாண்டமான டிஜிட்டல் நூலகம்!

லட்சம் புத்தகம், ஆறு கோடி மதிப்பு... மதுரையில் பிரமாண்டமான டிஜிட்டல் நூலகம்!
News
லட்சம் புத்தகம், ஆறு கோடி மதிப்பு... மதுரையில் பிரமாண்டமான டிஜிட்டல் நூலகம்!

லட்சம் புத்தகம், ஆறு கோடி மதிப்பு... மதுரையில் பிரமாண்டமான டிஜிட்டல் நூலகம்!

Published:Updated:

லட்சம் புத்தகம், ஆறு கோடி மதிப்பு... மதுரையில் பிரமாண்டமான டிஜிட்டல் நூலகம்!

லட்சம் புத்தகம், ஆறு கோடி மதிப்பு... மதுரையில் பிரமாண்டமான டிஜிட்டல் நூலகம்!

லட்சம் புத்தகம், ஆறு கோடி மதிப்பு... மதுரையில் பிரமாண்டமான டிஜிட்டல் நூலகம்!
News
லட்சம் புத்தகம், ஆறு கோடி மதிப்பு... மதுரையில் பிரமாண்டமான டிஜிட்டல் நூலகம்!

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் பிரமாண்டமான நூலகத்தை அமைக்க இருக்கிறது தமிழக அரசு. நூலகத்தை அமைப்பதற்கான அரசாணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை வெளியிட்டு இருக்கிறது. 

ஆசியா அளவில் மிகப்பெரிய நூலமாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் விளங்குகிறது. இந்த நூலகத்தை 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தி.மு.க ஆட்சியின்போது கட்டப்பட்டதால் அ.தி.மு.க ஆட்சியில் இந்த நூலகம் பராமரிப்பின்றி இருந்தது. உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் தற்போது மீண்டும் பழைய பொலிவுடன் செயல்பட்டு வருகிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். 

சென்னையில் இருக்கும் அண்ணா நூலகத்தைப் போலவே மதுரையிலும் ஒரு நூலகத்தை அமைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், மிகப்பெரிய நூலகத்தை அமைக்க, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நூலகத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர், தமிழ் கலாசாரம் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர், கூட்டுறவுத் துறை அமைச்சர், வருவாய் துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறைச் செயலாளர் அடங்கிய குழு ஆலோசித்து, இறுதியில் மதுரை தமிழ்ச் சங்க வளாகத்தில் நூலகம் அமைக்க முடிவுசெய்துள்ளது. 

புதிய நூலகம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசினோம். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், ``புதிதாக அமையவுள்ள நூலகத்தில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ளது போலவே குழந்தைகளுக்காகத் தனிப்பிரிவு, போட்டித் தேர்வு பயிற்சி மையம் மற்றும் தனிநூல்கள் வாசிப்பு பிரிவு என அனைத்துப் பிரிவுகளும் இடம்பிடிக்க உள்ளன. இதில், ஒரு லட்சம் நூல்கள் இடம்பெறும். நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் இந்த நூலகத்தால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள். 

நூலகத்தை உலகத் தமிழ் சங்க கட்டடத்தின் முதல் தளத்திலேயே இயங்கவும் முடிவெடுத்திருக்கிறோம். இதனால், நூலகத்துக்கான கட்டுமான செலவுகள் பெரிய அளவில் குறையும். இதன்மூலம், சகல வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் நவீன நூலகத்தை அமைக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். 

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் தனது வளாகத்தில் நூலகத்தை அமைக்க முன் நுழைவு அனுமதியை வழங்கி உள்ளது. நூலகத்துக்குத் தேவையான நூல்களை வாங்கும் பணியை பொது நூலகத்துறை மேற்கொள்ளும். இந்த நூலகத்துக்கு 'உலகத் தமிழ்ச் சங்க நூலகம்' என்று பெயர் வைக்கவும் தமிழக அரசு ஆணையிட்டு இருக்கிறது. நூலகத்தை அமைக்க முதல்கட்டமாக ஆறு கோடி ரூபாயையும் ஒதுக்கி உள்ளது" என்றனர். 

நூலகம் அமைய இருப்பது குறித்து, அண்ணா நூற்றாண்டு நூலக ஊழியர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிகண்டன், ``மதுரையில் மிகப் பிரமாண்டமான அமைய உள்ள நூலகத்தை வரவேற்கிறோம். புதியதாக அமையவுள்ள நூலகம் தென்மாவட்ட மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் தளமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை விடச் சிறந்த முறையில் உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளுடன் ஏற்படுத்த வேண்டியது அவசியம். 

புதிய நூலகத்துக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வாங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நூலகத்துக்குத் தேவையான புத்தகங்களை வாங்கச் சரியான தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழுவில், நூலக துறையில் உள்ள நூலகர்களும் இடம்பெற வேண்டும். நூலகத்துக்கு வருகைதரும் இளைஞர்களுக்கு வழிகாட்ட, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தகுதியுள்ள பட்டதாரி நூலகர்களைத் தேர்ந்தெடுத்து பணிக்கு அமர்த்த வேண்டும். 

நூலகத்தைத் தொடங்கும் போதே உறுப்பினர் சேர்க்கையையும் ஆரம்பிக்க வேண்டும். மேலும், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஆடிட்டோரியம், கான்ஃபிரன்ஸ் ஹால் போன்றையும் அமைக்க வேண்டும். இதன்மூலம் கணிசமாக தொகை கிடைக்கும். இதனைப் பராமரிப்பு பணிகளுக்குப் பயன்படுத்தலாம். சென்னை நூற்றாண்டு நூலகத்தில் யூனஸ்கோவின் உதவியுடன் தொடங்கப்பட்ட உலக டிஜிட்டல் நூலக திட்டத்தையும் மதுரையிலும் தொடங்க வேண்டும். இந்தத் திட்டத்தை தொடர்ந்து புதுப்பித்து வரும் போது தென் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து பயனடைய முடியும்" என்றார்.