
ஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று!

விகடன் வாசகர்களுக்கு வழக்குரைஞர் அஜிதாவின் வணக்கம்...
நமக்கு ஏன் அரசியல் பார்வை வேண்டும்? இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மானிடரும் அரசியல் அற்ற சமூக வாழ்வை வாழ்வது இல்லை. அரசியல்தான் நம் அடிப்படை விஷயங்களைத் தீர்மானிக்கிறது. குறிப்பாக கல்வி, உடல்நலம், சுகாதாரம் என இன்னும் பல்வேறு விஷயங்களில் நம் வாழ்வை நிர்ணயிக்கும் முடிவுகளை எடுக்கக்கூடிய அமைப்பு அது. அப்படிப்பட்ட ஓர் அமைப்பை நாம் புரிந்துகொள்வது அவசியம்தானே. உங்களின் ஒவ்வோர் அசைவையும் தீர்மானிக்கும் அரசியல் பற்றி இன்னும் சொல்கிறேன் கேளுங்கள்.
நாம் அனைவருமே பல கோட்பாடுகளை, கொள்கைகளைப் பின்பற்றிவருகிறோம். அதில் சில நம்மை மட்டும் பாதிப்பதாக இருக்கும். பல விஷயங்கள் மற்றவர்களைப் பாதிப்பதாக இருக்கும். அப்படி நம் வாழ்வில் நாம் நிச்சயமாகக் கடைபிடிக்கவேண்டிய கோட்பாடுகள் நிறைய உள்ளன. சமூக அக்கறைதான் அவற்றுக்கு அடிப்படை. தனி மனிதனாகவும் ஒரு சமூகமாகவும் நாம் செய்ய வேண்டியவை என்னென்ன, அதனால் நிகழும் நல்ல மாற்றங்கள் என்னென்ன?

ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், கை நிறையச் சம்பாதித்தாலும் அதையும் மீறி அவரிடம் அவசியம் இருக்க வேண்டியது, தன்னம்பிக்கை. எவ்வளவு பெரிய சிக்கலில் இருக்கும் போதும், நம்மைக் காப்பது அந்தத் தன்னம்பிக்கை மட்டுமே. இதற்கு உதாரணமாக நான் சந்தித்த சிலரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி சொல்கிறேன் கேளுங்கள்.
இன்றைய அரசியலில் தேவைப்படும் மாற்றங்கள் ஏராளம். குறிப்பாக, ஊழல் என்ற அம்சம் பலரிடம் பொறுப்பற்றத் தன்மையையும், அத்துமீறல்களையும் உருவாக்கிக்கொண்டி ருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம்; சந்திக்கிறோம். இதை மாற்ற என்ன செய்யலாம்?
25-2-16 முதல் 2-3-16 வரை 044-66802911**என்ற எண்ணில் அழையுங்கள். நல்லன பேசுவோம்.
ப்ரியங்களுடன்,
அஜிதா.