Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

•   சோஷியல் மீடியா மீம்ஸ் நாயகன் விஜயகாந்த், இப்போது களத்தில் இறங்கிவிட்டார். ஏப்ரல் 30-ம் தேதி விஜயகாந்த்தின் முதல் ட்வீட்டே `நாளை உங்களுடன் உரையாட இருக்கிறேன். வாங்க பேசலாம்’ என்பதுதான். `கபாலி’ டீஸர் பரபரப்புகளுக்கு இடையே விஜயகாந்த் வந்ததால் கேள்விகள் குறைவுதான். எல்லா கேள்விகளுக்கும் தமிழ், ஆங்கிலம் என பதில்களைக் கலந்து அடித்த விஜயகாந்த்திடம் குறும்பு ட்வீட்டர் ஒருவர், `உங்களுக்குப் பிடித்த வில்லன் யார்... வைகோவைத் தவிர?’ எனக் கேட்க, `வைகோ ஹீரோ, வில்லன் கலைஞர், வில்லி ஜெயலலிதா' எனப் பதில் அளித்து லைக்ஸ் குவித்தார் கேப்டன். காமெடியன் யாருனு சொல்லலியே!

இன்பாக்ஸ்

• `பிரசாரங்கள் பெரிதாக எடுபடவில்லை' என உளவுத்துறை அப்டேட் அனுப்ப, இப்போது முழுக் கவனத்தையும் தேர்தல் அறிக்கையின் மீது திருப்பியுள்ளார் ஜெயலலிதா. முழுக்க முழுக்க தாய்க்குலத்தின் ஆதரவைப் பெற அரசு கேபிள் கனெக்‌ஷன் முற்றிலும் இலவசம், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்கூட்டர்... என இலவசங்களை அள்ளிவீசும் அறிக்கை ரெடியாம். சீனா தானா?

இன்பாக்ஸ்

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்தான், தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, 36 கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு எனக் கணக்குக்காட்டிய வசந்தகுமார், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 285 கோடி ரூபாயை சொத்து மதிப்பாகத் தாக்கல் செய்திருந்தார். இப்போது 332.27 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம் பிடித்திருக்கும் தமிழகத்தின் பணக்கார வேட்பாளர், முதலமைச்சர் ஜெயலலிதா. 113 கோடியே 73 லட்சம் ரூபாய்க்கான சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார் ஜெ!  ஓ... வசந்தகுமாரைவிட அம்மா ஏழையா?

இன்பாக்ஸ்

  இந்தத் தேர்தலில் கருணாநிதி - ஜெயலலிதா இருவருக்குமான அதிசய ஒற்றுமை, மயிலாப்பூரில் உள்ள ரவுஃப் பாஷா என்பவரிடம்தான் இரண்டு தலைவர்களுமே வேட்புமனு பத்திரத்தை  வாங்கியிருக்கிறார்கள் என்பதுதான். 2006, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களிலும் இவரிடம்தான் பத்திரம் வாங்கியுள்ளார் ஜெயலலிதா. `பத்திரத்தில் ஜெயலலிதாவின் பெயரை என் கையால் எழுதச்சொல்லி வாங்கிப்போனார் அ.தி.மு.க பிரமுகர். செய்தித்தாள்களில் பார்த்துதான், கருணாநிதியும் என்னிடம் வாங்கிய பத்திரத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் என்பது தெரியும்’ என்கிறார் ரவுஃப் பாஷா. லக்கிமேன்!

இன்பாக்ஸ்

மத்திய அமைச்சர்களை வரிசையாக அனுப்பியும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு கூட்டம் கூடாததில் பா.ஜ.க தலைமை செம அப்செட். வெங்கைய்யா நாயுடு, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் மட்டும் அல்லாமல் உள்ளூர் பிரபலமான பொன்.ராதாகிருஷ்ணனின் கூட்டத்துக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை என்பதால், அடுத்து வருவதாக இருந்த ஸ்மிரிதி இரானியின் தேர்தல் பிரசாரத்தையும் ரத்து செய்திருக்கிறார் அமித்ஷா. `மத்திய அமைச்சர்களுக்கு மொழிப் பிரச்னை இருப்பதால், உள்ளூர் பிரபலங்களே இனி தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்’ எனச் சொல்லியிருக்கிறார். மோடி வருவாரா?