Published:Updated:

`எங்கள் மண்ணில் கை வைக்காதீர்கள்!’ − நியூட்ரினோ எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேச்சு

`எங்கள் மண்ணில் கை வைக்காதீர்கள்!’ − நியூட்ரினோ எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேச்சு
News

மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விழிப்பு உணர்வு நடைப்பயணத்தை மதுரையிலிருந்து கடந்த 31-ம் தேதி தொடங்கினார். செக்காணூரணி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக நீண்ட நடைப்பயணத்தின் நான்காவது நாளான இன்று தேனியை வந்தடைந்தார் வைகோ. பங்களாமேட்டில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக 7.25 மணிக்கு பொதுக்கூட்ட மேடையை அடைந்த வைகோ, `மத்திய அரசு கொண்டுவரும் நாசக்கார நியூட்ரினோ திட்டத்தை நாம் முழுவதுமாக எதிர்க்க வேண்டும். முல்லைப்பெரியாறு பிரச்னைக்குப் போராட வந்தது போல, வீட்டுக்கு ஒருவர் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகப் போராட வர வேண்டும். பத்து லட்சம் பேர் திரள வேண்டும்" என்று பேசினார்.

அதனைத்தொடர்ந்து கவிஞர் வைரமுத்து பேசியபோது, 'இது மண்ணைக் காப்பதற்கான லட்சியக்கூட்டம். நியூட்ரினோ என்றால் என்று எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். நான் அறிவியல் பேசப்போகிறேன். நடு வீதியில் அறிவியல் பேசும் தைரியத்தை அறிஞர் அண்ணா கொடுத்தார். தமிழன் உலகிற்கு அறிவை ஓதுகிறவன். அவன் எப்படி முட்டாளாக இருப்பான். ஒரு பென்சில் நுனியில் இரண்டு லட்சம் கோடி நியூட்ரினோ துகள்கள் உள்ளன. அதனை ஆய்வு செய்யவே மனிதன் முயற்சி செய்கிறான். மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ துகள் பற்றிய ஆய்வை மட்டும்தான் நீங்கள் செய்யப்போகிறீர்களா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை கொடுங்கள். அதற்கு விடை கொடுக்கத் தயாராக இருக்கிறோம். நான் விஞ்ஞானத்துக்கு எதிரானவன் இல்லை. ஆனால், மக்கள் விரோத விஞ்ஞானத்துக்கு எதிரானவன். எங்கள் மரபுகளை அழிக்கப் பார்க்கும் விஞ்ஞானத்துக்கு எதிரானவன். மேற்குத் தொடர்ச்சி மலையின் பெருமைகள் தெரிந்தால் அதனை தொட்டுப்பார்க்க திராணி வருமா? இந்த திட்டத்தைச் செயல்படுத்த மேற்குத்தொடர்ச்சி மலைதான் கிடைத்ததா? இந்த வைரமுத்துவை எழுத வைத்தது மேற்குத்தொடர்ச்சி மலை தான். மாதம் ஒருமுறை மேற்குத் தொடர்ச்சி மலையையும், வைகை அணையையும் பார்க்காவிட்டால் எனக்கு உடல் சரியில்லாமல் போய்விடும். 1,500 கோடி ரூபாய் பணம் செலவு செய்கிறீர்களே?. அந்தப் பணத்தில் இங்கிருக்கும் அணைகளில் 10 மீட்டர் தூர்வாரலாமே?. பாறைகளை வெட்ட இருக்கிறீர்கள். அதனால் எழும் புழுதிப் படலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் நான்கின் ஒரு பகுதி மூடிவிடும் என அச்சப்படுகிறோம். எதையும் இழப்போம். எங்கள் மண்ணை இழக்க மாட்டோம். எங்கள் மண்ணில் கை வைக்காதீர்கள்" என்று பேசினார்.