சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

ண்ட்ரியாவுக்கு இது பெர்ஃபாமன்ஸ் சீஸன். மலையாளத்தில் மம்மூட்டியுடன் `தொப்பில் ஜொப்பன்' படத்தில் நடித்த `ஆனி' கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட, இப்போது `வடசென்னை' படத்தில் செம தில் லேடியாக நடிக்கிறார். `நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கதாபாத்திரங்கள்தான் முடிவுசெய்கின்றன. `வடசென்னை' படத்தில் குடிசையில் வாழும் பெண்ணாக நடிக்கிறேன். நானும் சென்னைப் பெண்தான் என்றாலும், நார்த் மெட்ராஸ் வாழ்க்கை எனக்கும் புதுசுதான். அதனால் இப்போ `வடசென்னை'க்கு அடிக்கடி விசிட்டடித்து அந்தப் பெண்களின் மேனரிசங்களைக் கற்றுவருகிறேன்' என்கிறார் ஆண்ட்ரியா. நீ கலக்கு கண்ணு!

இன்பாக்ஸ்

`கவண்', `பவர்பாண்டி', `தானா சேர்ந்தக் கூட்டம்' என பிஸியாக இருக்கிறார் மடோனா செபாஸ்டியன். நடிக்கும் படங்களில் பாடவும் வாய்ப்பு கிடைப்பதால், பொண்ணு பயங்கர ஹேப்பி. `விஜய் சேதுபதி எனக்கு நல்ல ஃப்ரெண்ட். சூர்யா, தனுஷோட ரசிகை நான். அவங்களை எல்லாம் எனக்கு அவ்ளோ பிடிக்கும். இப்ப அவங்ககூட நடிக்கிறேன்கிறதை நம்பவே முடியலை. யெஸ்... ட்ரீம்ஸ் கம் ட்ரூ' எனச் சிலிர்க்கிறார் மடோனா. ஸ்வீட்டி!

இன்பாக்ஸ்

பெரும்படையுடன் ஷூட்டிங்குக்கு வரும் நடிகைகள் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருப்பவர் அனுஷ்கா ஷர்மா. காஸ்ட்யூம் டிசைனர், ஹேர் ஸ்டைலிஸ்ட், டிரைவர் மட்டும் அல்லாமல், உதவியாளர்கள் 5 பேர் எனக் கிட்டத்தட்ட 10 பேருடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதுதான் வழக்கமாம். `ஷூட்டிங் ஸ்பாட்டில் அனுஷ்கா அமைதியாக இருந்தாலும், உதவியாளர்களின் தொல்லை தாங்க முடியவில்லை' எனத் தயாரிப்பாளர்கள் புலம்ப, `ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறப்பாக நடிக்கவும், படத்தில் அழகாகத் தெரியவும் எனக்கு சிலர் முக்கியம். அவர்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துவருவதில் என்ன தவறு? அவர்கள் எப்போதும் என்னுடன்தான் இருப்பார்கள்' - இது அனுஷ்காவின் பதில். படை நல்லது!

இன்பாக்ஸ்

டந்த 35 வருடங்களாக அமிதாப் பச்சனின் ஞாயிறு பொழுதுகளின் மாலை வேளை, ரசிகர்களோடுதான். மும்பை ஜுகு கடற்கரை அருகே வசிக்கும் அமிதாப், மும்பையில் இருந்தால் தவறாமல் வீட்டுக்கு வெளியே ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். `` `கூலி' படத்தில் நடித்தபோது விபத்தில் சிக்கி, வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த என்னை, ரசிகர்கள் சந்திக்க முதல்முறையாக வீட்டுக்கு வந்தார்கள். அந்த அன்பு என்னைக் கலங்கடித்துவிட்டது. அந்தச் சந்திப்பு, என் மனதை இலகுவாக்கியது. அப்போதில் இருந்து ரசிகர்கள் சந்திப்பை வழக்கமாக வைத்திருக்கிறேன்.கிழவனானப் பிறகும் என்னைக் கண்டு கூட்டம் கூடுவது எனக்கே வியப்பாக இருக்கிறது. அன்புக்கு நன்றி'' என்கிறார் பிக் பி. கிரேட்ஜி!