Published:Updated:

விசாகத் திருவிழா தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

விசாகத் திருவிழா தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்  அறிவிப்பு
News
விசாகத் திருவிழா தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வரும் 28.05.18 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வரும் 28.5.18 அன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆண்டுதோறும் இங்கு கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில், முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரத் திருவிழாவான  வைகாசி விசாகத் திருவிழாவும் ஒன்று. கடந்த 19-ம் தேதி வைகாசி வசந்த திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 28-ம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு வரும் மே 28-ம் தேதி, வைகாசி விசாகத் திருவிழாவன்று, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு

விஸ்வரூப தரிசனம் மற்றும்  2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையைத்  தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.

மாலை 6.30 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துகுப் பிறகு முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், மகாதீபாராதனையைத் தொடர்ந்து  சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை அம்பிகைகளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரிவலம் வந்து திருக்கோயிலை அடைவதுடன் வைகாசி வசந்தம் மற்றும் விசாகத் திருவிழா நிறைவு பெறுகிறது. விசாகத் திருவிழாவை முன்னிட்டு வரும் மே 27 முதல் 29-ம் தேதி வரை,  3 நாள்கள் பூஜைக் காலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விசாகத்திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து  ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற உள்ள வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வைகாசி 14-ம் தேதி திங்கட் கிழமை (28.5.18) அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று அரசுத் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின், சம்பந்தப்பட்ட மாணவ மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 9.6.18 அன்று ஜூன் மாதம் இரண்டாவது சனிக்கிழமை வேலைநாளாக கடைப்பிடிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.