அலசல்
சமூகம்
Published:Updated:

அமெரிக்க அதிபருக்கு ஆஸ்கர் அர்ச்சனை!

அமெரிக்க அதிபருக்கு ஆஸ்கர் அர்ச்சனை!
பிரீமியம் ஸ்டோரி
News
அமெரிக்க அதிபருக்கு ஆஸ்கர் அர்ச்சனை!

அமெரிக்க அதிபருக்கு ஆஸ்கர் அர்ச்சனை!

லகமே எதிர்பார்க்கும் சினிமா விருதுகளில் ஆஸ்கர் முக்கியமானது. ஆஸ்கர் மேடையில் எப்போதும் உலகின் ஏதாவது ஒரு பிரச்னைக்கு எதிராக சர்ச்சை வெடிக்கும். சென்ற முறை டி காப்ரியோ பேசிய உரை, குளோபல் வார்மிங்கின் விளைவுகள் பற்றி ஓங்கி ஒலித்தது. இந்த முறையும் ஆஸ்கர் மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. நிகழ்ச்சி தொடங்கிய 10-வது நிமிடத்தில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராகத் தனது குரலை முதலில் பதிவுசெய்தார்.

அமெரிக்க அதிபருக்கு ஆஸ்கர் அர்ச்சனை!

ஆஸ்கர் விருதுகளைச் சில வருடங்களாகவே ட்ரம்ப் மோசமாக விமர்சித்து வந்தார். ‘அகாடமி விருதுகள் அர்த்தமற்றவை. அவை வெள்ளை இன மக்களுக்கானவை’ எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு, தக்க பதிலடி கொடுத்தார் ஜிம்மி கிம்மெல். ‘‘நன்றி அதிபர் ட்ரம்ப் அவர்களே!  ‘இந்த நாடு பிளவுபட்டிருக்கிறது. நீங்கள் ஒற்றுமை பற்றி பேசுங்கள்’ என்று என்னிடம் நிறைய பேர் கூறினார்கள். ஆனால், நான் ஒருத்தன் பேசி ஒன்றும் ஆகப்போவது இல்லை. இன்று ஒட்டுமொத்த அமெரிக்காவும், 225 நாடுகளும் இதனைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள்” என்றார்.

அத்துடன் நிற்காமல், நிகழ்ச்சியின் நடுவே தனது செல்போனை திரையில் இணைத்து அதிபர் ட்ரம்ப்புக்கு லைவ் ட்வீட் செய்தார். ‘‘என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ட்ரம்ப்... நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு மணி நேரம் ஆகிறது. உங்களின் ட்வீட்டை காணவில்லை” என நக்கல் செய்தார். அடுத்து #merylsayhi என்ற ஹேஷ்டேக் மூலம், ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா மேடையில் ட்ரம்ப்பை விளாசிய மெரில் ஸ்ட்ரீப்பை நினைவுபடுத்தி ட்ரோல் செய்தார்.

இன்னொரு பக்கம், ஆஸ்கர் மேடையில் நிற்க வேண்டியவரை வீட்டில் அமரவைத்திருக்கிறார் ட்ரம்ப். ஆம்! சிறந்த ஆவண குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஒயிட் ஹெல்மெட்’ படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் காலித் கதீப், சிரியாவில் வசிப்பவர். ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்று ட்ரம்ப் தடை விதித்ததால், மூன்று நாட்கள் விமான நிலையத்தில் போராடிப் பார்த்துவிட்டு வீடு திரும்பி இருக்கிறார் காலித். இதேபோல், சிறந்த அயல்நாட்டு மொழிப் படத்துக்கான விருது ‘சேல்ஸ் மேன்’ திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஃபர்ஹாடி இந்த விருதை வாங்காமல் புறக்கணித்தார். இதற்குக் காரணமும் ட்ரம்ப் பிறப்பித்த தடை உத்தரவுதான்.

ட்ரம்ப்... எதிர்ப்புகள் உங்கள் மீது அதிகரித்தே வருகின்றன. ஆஸ்கர் மேடை அதற்கு ஒரு சாட்சி!               

- ச.ஸ்ரீராம்