Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

டந்த சில வருடங்களாக பெசன்ட் நகரில் இருந்த சூர்யா - ஜோதிகா ஃபேமிலி, தி.நகரில் உள்ள அப்பா வீட்டுக்கே குடிவந்துவிட்டது. பல கோடி ரூபாய் செலவில் பழைய வீட்டுக்குப் பின்னாலேயே `லட்சுமி இல்லம்' என்ற பெயரில் புது வீடு கட்டி மொத்தக் குடும்பமும் அங்கேயே செட்டில் ஆகியிருக்கிறது. `தேவ், தியா ரெண்டு குட்டீஸும் தாத்தா-பாட்டியை ரொம்பவே மிஸ்பண்றாங்க' என்ற ஜோதிகாவின் எண்ணமே கூட்டுக் குடும்பத்துக்குக் காரணமாம். ஆனந்தம் விளையாடும் வீடு!

இன்பாக்ஸ்

சிம்பு, அனிருத் இருவருக்குமே இந்த ஆண்டு கல்யாண ஆண்டு. சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் இருவருக்குமே வீட்டில் வேகவேகமாகப் பெண் பார்த்துவருகிறார்கள். `அக்டோபர் மாதத்துக்குள் அனிருத்துக்குத் திருமணம். சிம்புவுக்கும் விரைவில்' என்கிறது இருவரின் நட்பு வட்டங்கள். கால்கட்டு!

இன்பாக்ஸ்

காதலித்தவரையே கைப்பிடித்திருக்கிறார் மல்யுத்த மங்கை சாக்‌ஷி மாலிக். ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி, பள்ளிகால நண்பரும் மல்யுத்த வீரருமான சத்யவர்த்தை திருமணம் செய்திருக்கிறார். கடந்த வாரம் நடந்த திருமண விழாவுக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தியிருக்கிறார்கள். ரெஸ்லிங்கை விட்றாதீங்க!

வ்வொரு வருஷமும் மகன் சண்முகபாண்டியனின் பிறந்த நாளை, அவரது நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து உற்சாகமாகக் கொண்டாடுவது விஜயகாந்த் ஸ்டைல். ஆனால், இந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் எந்தக் கொண்டாட்டமும் இல்லை. சண்முகபாண்டியனிடம் மட்டும் `நீ நினைச்ச மாதிரி பெரிய ஸ்டார் ஆகிடுவ. நானும் நீயும் சீக்கிரம் சேர்ந்து நடிக்கிறோம்' என வாழ்த்தியிருக்கிறார் கேப்டன். மிஸ் யூ கேப்டன்!

இன்பாக்ஸ்

`100 MB' என்ற பெயரில் சொந்தமாக மொபைல் அப்ளிகேஷனைத் தொடங்கியிருக்கிறார் சச்சின். MB என்றால், `மாஸ்டர் பிளாஸ்டர்' என்று அர்த்தம். `என்னுடைய கிரிக்கெட் இன்னிங்ஸ் 24 ஆண்டுகள் நீடித்தது. இத்தனை ஆண்டுகள் சிறப்பாக விளையாட உதவியது ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான். அவர்களுக்காகத்தான் நான் இப்போது டிஜிட்டல் இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறேன். இந்த அப்ளிகேஷன் மூலம் ரசிகர்களுடன் நானே நேரடியாக உரையாடுவேன். பேட்டிங் டிப்ஸ் முதல் கிரிக்கெட்டில் நான் கற்ற அத்தனை விஷயங்கள் வரை அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்போகிறேன்' என்று சொல்லியிருக்கிறார் சச்சின். இந்த அப்ளிகேஷனுக்காக, சொந்தமாகப் பாட்டுகூட பாடியிருக்கிறார் ரன் மெஷின். ஸ்வீட் சச்சின்!

இன்பாக்ஸ்

 பாலிவுட் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. இயக்குநர் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் அவரின் உதவி இயக்குநர் வாசன் பாலா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். `மர்த் கோ தர்த் நஹி ஹோத்தா' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு நெகட்டிவ் ரோலாம். சூப்பர்ஜி... சூப்பர்ஜி!

இன்பாக்ஸ்

ழுத்தாளர் ஜெயமோகன், இப்போது வாசகர் சந்திப்புகளில் பிஸி. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய வாசகர்களுக்காக நடத்தப்படும் இந்தச் சந்திப்புகளில் இலக்கியம் மட்டுமின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகளையும் கற்றுத்தருகிறார். ஆனால், இதில் பங்கேற்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. கூட்டத்தில் பங்கேற்க பல விதிமுறைகள் வைத்திருக்கிறார். என்ட்ரன்ஸ் எக்ஸாம் வைப்பாரோ!