Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

லகிலேயே அதிகம் சம்பாதிக்கும் தமிழர்களில் உச்சத்தில் இருக்கிறார் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம்  மொத்தம் 1260 கோடிக்கும் மேல்...  ஒரு நாளுக்கு 3.52 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் சுந்தர். அம்பூட்டாப்பு

இன்பாக்ஸ்

மூக வலைதளங்களில் அதிகம் தலைகாட்டாத, பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். சில  மணிநேரங்களிலேயே, இவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாம்! வெல்கம் கேத்ரினா!

டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பாரதிய ஜனதா கட்சியிடம் படுதோல்வியை சந்திக்க, ``எல்லாம் வாக்குப்பெட்டிகளில் நடந்த குளறுபடி'' என்று முதல்நாள் பேட்டி கொடுத்தார் அர்விந்த் கெஜ்ரிவால். அடுத்தநாள் ஆம் ஆத்மி சார்பில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களிடம், ``கட்சித் தாவிவிடாதீர்கள். உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிடாதீர்கள்'' என்றவர், மூன்றாவது நாளில் ``நாங்கள் சில தவறுகள் செய்துவிட்டோம். அந்தத் தவறுகளை விரைவில் திருத்திக்கொள்கிறோம்'' என்று பாவமாகப் பேட்டி கொடுத்துக்கொண்டே இருக்கிறார். தினம் ஒரு புலம்பல்

இன்பாக்ஸ்

திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் `கோவிந்தா ஆப்’ என்கிற ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்பின் உதவியோடு, திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்வதற்கான முன்பதிவை இருந்த இடத்தில் இருந்தே புக் செய்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல... வெங்கடாஜலபதியின் உண்டியலில் காணிக்கை செலுத்தலாம்; நன்கொடை வழங்கலாம்; தங்கும் இடத்துக்கு ரிசர்வ் செய்துகொள்ளலாம். ஆப் வெளியான அடுத்த நொடியிலேயே ஆயிரக்கணக்கில் டவுன்லோட் ஆகி ஹிட் அடித்திருக்கிறது இந்த செயலி. ஆண்ட்ராய்டு தரிசனம்!

இன்பாக்ஸ்

ஹீரோயின்கள்  ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் சீஸன் இது. கடந்தவாரம் கத்திச்சண்டையில் ஸ்ருதி வாள் சுழற்ற, இந்தவாரம் சிலம்பத்தில் சிக்ஸர் அடித்திருக்கிறார் சமந்தா. சிவகார்த்திகேயனுடன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் சிலம்பம் சுழற்றும் பெண்ணாக நடிப்பதால் 10 மாதங்களாக சிலம்ப சுழற்றலில் இறங்கியிருக்கிறார் சமந்தா. கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன்ன்ன்...

இன்பாக்ஸ்

`மாப்பிள்ளை' சீரியலில் எல்லோரையும் மிரட்டிக்கொண்டிருக்கும் ரம்யா, இப்போது செம சந்தோஷத்தில் இருக்கிறார். மீடியாவுக்கு மாடலிங் புகைப்படக்காரராக என்ட்ரியானவர் இன்று சீரியல் ஹீரோயின்கள் பட்டியலில் மோஸ்ட் வான்டட். இப்போது இயக்குநர் பாலாவின் நாச்சியார் படத்திலும் நடிக்கிறார். விசாரித்தால் ``நிஜம்தான் பாஸ், ஆனா படத்துல நான் என்ன கேரக்டர்னு இப்ப சொல்ல மாட்டேன். அது படம் வர்ற வரைக்கும் சஸ்பென்ஸ்'' என்கிறார்.  டபுள்ப்ரமோஷன்